ஆதார்- அட்டை கொள்ளை!-ஆக்ஷன் ரிப்போர்ட்!
Nakkheeran|June 19 - 21, 2024
2016ஆம் ஆண்டுக்குப்பின் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டையென்பதே அடையாளமென மாறிப்போன நிலையில், ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வதை வைத்து, சென்னை மற்றும் சுற்றுப்பகுதி மக்களிடம் ஆயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது அம்பலமாகியுள்ளது.
பொன்மதி, சே
ஆதார்- அட்டை கொள்ளை!-ஆக்ஷன் ரிப்போர்ட்!

இந்தியா முழுமைக்குமான ஆதார் ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் இயங்கிவருகிறது. இதன்கீழ் நாடு முழுக்க 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆதார் அட்டை வழங்கும் பணிகள் நடக்கின்றன. இதில், பெங்களூர் மண்டலத்தின்கீழ் தமிழ்நாடு செயல்படுகிறது. தமிழகத்தில், அரசு மற்றும் வங்கிகள் என 46 ஏஜென்சிகள் மூலமாக ஆதார் அட்டை நிறுவனம் செயல்படுகிறது. இதில், மெட்ரோ சிட்டி பகுதிகளுக்கு கூடுதலாக, ஆதார் ஆணையத்தின்கீழ், அரசும், தனியாரும் 50:50 என்ற விகிதத்தில் இணைந்து செயல்படுகின்றன.

இந்த வகையில் சென்னையில் கோயம்பேடு 10 ஸ்கொயர் மால் முதல் தளத்தில் செயல்படும் ஆதார் அட்டை அலுவலகத்தில், ஆதார் அட்டை புதுப்பித்தல், திருத்தம் செய்தல் என அனைத்தும் செய்து தரப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அரசு அங்கீகரித்த புகைப்படமுள்ள அடையாள அட்டையை ஆதாரமாக வைத்து மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். இந்நிலையில், இந்த அலுவலகத்தில் ஆதார் அட்டையில் பிழைத்திருத்தம் செய்ய ஆயிரக் கணக்கில் கொள்ளையடிப்பதாக நக்கீரன் அலுவலகத்தில் ஒருவர் புகாரளித்து புலம்பினார். 100 ரூபாயில் முடியும் விஷயத்திற்கு ஆயிரக்கணக்கில் வசூலா என்பதைக் கண்டறிய நாமே களத்தில் இறங்கினோம்.

புகாரளித்தவர் குறிப்பிட்ட செனாய் நகர் இ-சேவை மையத்திற்கு பயனாளி போன்று சென்று, ஆதார் கார்டிலுள்ள பிறந்த தேதியில் திருத்தம் செய்ய வேண்டுமெனக் கேட்டதும், அங்கு பணிபுரிபவர், "ஆதாரமாக ஓட்டர் ஐ.டி., அல்லது பத்தாம் வகுப்பு மார்ஷீட் இருக்கிறதா?" எனக் கேட்டார். கைவசம் பான் கார்டு, கல்லூரி டி.சி., மார்ட் இருப்பதாகக் கூறினோம். ஆனால் அதையெல்லாம் ஆதாரமாக ஏற்கமுடியாதெனக் கூறியவரிடம், "அரசாங்கம் சொன்னபடி தான் ஆதாரத்தை வைத்திருக்கிறோமே, இதற்குமேல் வேறென்ன வேண்டும்?" என்றதும், 'இதை வைத்தெல்லாம் நாங்கள் திருத்தம் செய்ய முடியாது. நீங்கள் கோயம்பேட்டிலுள்ள 10 ஸ்கொயர் மாலுக்கு சென்றுதான் மாற்ற வேண்டும்” எனத் திருப்பியனுப்பினார்.

This story is from the June 19 - 21, 2024 edition of Nakkheeran.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 19 - 21, 2024 edition of Nakkheeran.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM NAKKHEERANView All
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
Nakkheeran

ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!

இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.

time-read
2 mins  |
September 18 - 20, 2024
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
Nakkheeran

தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம்‌ யெச்சூரி உடல்நலக்குறைவால்‌ கடந்த செப்டம்பர்‌ 12 வியாழனன்று காலமானார்‌.

time-read
1 min  |
September 18 - 20, 2024
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
Nakkheeran

நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!

ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும்‌, கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக்‌ காலை வாருவதும்‌, அண்ணன்‌ எப்ப நகர்வான்‌?

time-read
1 min  |
September 18 - 20, 2024
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்‌?
Nakkheeran

எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்‌?

\"பூதிய பூமி' வசனக்‌ காட்சி படமாகிக்‌ கொண்டிருந்தது. ஏற்கனவே எம்‌.ஜி.ஆர்‌. அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்‌.

time-read
1 min  |
September 18 - 20, 2024
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
Nakkheeran

ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!

\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல்‌ நடத்தணும்ல.

time-read
1 min  |
September 18 - 20, 2024
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
Nakkheeran

ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!

தமிழகத்திற்கான தொழில்‌ முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப்‌ பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌, பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்‌.

time-read
2 mins  |
September 18 - 20, 2024
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
Nakkheeran

அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!

அன்னபூர்ணா ஹோட்டல்‌ அதிபர்‌ சீனிவாசன்‌, மத்திய நிதியமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌, பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன்‌ ஆகிய மூவர்‌ இடம்பெற்ற மன்னிப்புக்‌ கேட்கும்‌ வீடியோவில்‌ என்ன இருந்தது என்பதைப்‌ பற்றிய விவரங்கள்‌ நக்கீரனுக்குக்‌ கிடைத்துள்ளது.

time-read
2 mins  |
September 18 - 20, 2024
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
Nakkheeran

ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!

\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"

time-read
1 min  |
September 18 - 20, 2024
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
Nakkheeran

பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!

அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!

time-read
1 min  |
September 07 - 10, 2024
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
Nakkheeran

இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?

பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.

time-read
3 mins  |
September 07 - 10, 2024