தப்பிய சென்னை!
Nakkheeran|October 19-22, 2024
வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் சென்னைக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் பொய்த்துப்போயிருக்கிறது.
இரா.இளையசெல்வன்
தப்பிய சென்னை!

இதனால் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் தப்பித்துள்ளதில் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது தி.மு.க. அரசு.

வடகிழக்கு பருவ மழையின் தொடக்கம், வங்கக்கடலின் தென்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆகியவற்றால் இம்மாதம் 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சென்னையிலும் வட தமிழகத்திலும் அதிக கனமழை (20 செ.மீ.க்கு மேல்) பொழியும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்திய வானிலை மையமும் இதையே வழிமொழிந்தது. 16 (புதன்) மற்றும் 17 (வியாழன்) ஆகிய தேதிகளில் சென்னைக்கு ரெட் அலர்ட்டும் கொடுத்தது வானிலை ஆய்வு மையம்.

அதற்கேற்ப திங்கள்கிழமை முதலே சென்னையில் மழையின் தாக்கம் அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை இடைவிடாமல் காற்று. மின்னலுடன் கொட்டியது மழை.

கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் கொட்டித்தீர்த்த மழையில், சென்னை நகரமே தத்தளித்தது. தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நிறைய சிரமங்களை எதிர்கொண்டன. அப்போது, தி.மு.க. அரசை நோக்கி எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் குற்றம்சாட்டிய நிலையில், மிக்ஜாம் புயல் குறித்து முன்கூட்டி எந்தத் தகவலையும் வானிலை ஆய்வு மையம் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் முன்னெச்சரிக்கையாக அரசு பல நடவடிக் களை எடுத்திருக்கும். சென்னை மக்கள் இத்தகைய துயரங்களை எதிர்கொண்டிருக்கமாட்டார்கள்" என்று சொல்லியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இப்படிப்பட்ட சூழலில், இந்தாண்டு (2024) வடகிழக்கு பருவமழை துவங்கியதும் வங்கக்கட லில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலத்தால் ஏற்படும் தாக்கத்தை கணித்து, தமிழகம் முழுவதும் மிதமான மழை, கனமான மழை, அதிகனமான மழை பொழியும் மாவட்டங்களை அறிவித்தது சென்னை வானிலை ஆய்வு மையம். அதனை யொட்டி ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் ஆகிய எச்சரிக்கையை வகைப்படுத்தியும் அறிவிக்கப் பட்டன. இதனையடுத்து விழித்துக்கொண்டது தி.மு.க. அரசு. வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என அறிந்ததுமே அதனை எதிர்கொள்ளத் தயாரானார் முதல்வர் ஸ்டாலின்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பிருந்தே அமைச்சர்கள், உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் எனத் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

This story is from the October 19-22, 2024 edition of Nakkheeran.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the October 19-22, 2024 edition of Nakkheeran.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM NAKKHEERANView All
அமைச்‌சர்‌ Vs எம்.பி.முற்றும்  மோதல்!
Nakkheeran

அமைச்‌சர்‌ Vs எம்.பி.முற்றும் மோதல்!

தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.

time-read
2 mins  |
October 23-25, 2024
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
Nakkheeran

சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!

முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.

time-read
2 mins  |
October 23-25, 2024
செருப்பு வீச்சு, பிரம்படி! திருநெல்வேலி நீட் கோச்சிங் கொடூரம்!
Nakkheeran

செருப்பு வீச்சு, பிரம்படி! திருநெல்வேலி நீட் கோச்சிங் கொடூரம்!

நீடாக்டராக முடியாது, உனக்குத்‌ தகுதியில்லை\" எனத்‌ தடுப்புச்‌ சுவர்‌ எழுப்பும்‌ நீட்‌ நமக்கு வேண்டாமென நீட்டிற்கு எதிராகக்‌ குரல்‌ கொடுக்கிறது தி.மு.க. அரசு. எனினும்‌, \"செருப்பு வீச்சும்‌, பிரம்பு அடியும்‌ வாங்கிப்‌ படித்தால்‌ நீட்டில்‌ பாஸ்‌ செய்ய முடியும்‌.

time-read
2 mins  |
October 23-25, 2024
பர்தா அணிந்து வந்து படம் பார்த்த ஜெயலலிதா
Nakkheeran

பர்தா அணிந்து வந்து படம் பார்த்த ஜெயலலிதா

போயஸ் கார்டன் வீட்டுக்கு என்னை அழைத்து, 'என் வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு விடப்போறேன்' என்று சொன்னதுடன், மாற்றங்கள் செய்யப்பட்ட வீட்டை சுற்றிக்காட்டினார் ஜெய லலிதா.

time-read
3 mins  |
October 23-25, 2024
மோசடிக் கல்லூரி! பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்!
Nakkheeran

மோசடிக் கல்லூரி! பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்!

கல்லூரி மாணவ -மாணவி கள் பரிதவித்து வருகிறார்கள்.

time-read
2 mins  |
October 23-25, 2024
கிழியும் ஐக்கியின் முகத்திரை!
Nakkheeran

கிழியும் ஐக்கியின் முகத்திரை!

பாலியல் வல்லுறவு... | வன்கொடுமையில் சிறுவர் சிறுமிகள் | சித்ரவதைக் களமான ஈஷா!

time-read
2 mins  |
October 23-25, 2024
திருவண்ணாமலை! துணை முதல்வர் முன்னுள்ள சவால்!
Nakkheeran

திருவண்ணாமலை! துணை முதல்வர் முன்னுள்ள சவால்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தென்னிந்தியாவில் புகழ்பெற்றது.

time-read
2 mins  |
October 23-25, 2024
அ.தி.மு.க வைத்த வெடி! பார்வை பறிபோன காவல் அதிகாரி!
Nakkheeran

அ.தி.மு.க வைத்த வெடி! பார்வை பறிபோன காவல் அதிகாரி!

திருச்சி திருவெறும்பூர் அருகே அ.தி.மு.க.வின் 53வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது பற்றவைத்த வெடியால் திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கண் பார்வை பறிபோன சோகம் நிகழ்ந்துள்ளது!

time-read
1 min  |
October 23-25, 2024
பா.ஜ.க.மிரட்டல்...அ.தி.மு.கவில் கலகக்குரல்!
Nakkheeran

பா.ஜ.க.மிரட்டல்...அ.தி.மு.கவில் கலகக்குரல்!

அதை அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைமை இல்லாமல் திணறுகிறது.

time-read
2 mins  |
October 23-25, 2024
தூத்துக்குடி மதகுரு மீது தாக்குதல்! அ.தி.மு.க.மாஜிக்கள் அட்ராசிட்டி!
Nakkheeran

தூத்துக்குடி மதகுரு மீது தாக்குதல்! அ.தி.மு.க.மாஜிக்கள் அட்ராசிட்டி!

அ.தி.மு.க. மாஜிக்களின் அடிப்படிகள், கிறிஸ்தவ சேகர குரு நடத்திய தாக்குதல், தூத்துக்குடி பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.

time-read
2 mins  |
October 19-22, 2024