"அண்ணன் எப்ப சாவான்.. திண்ணை எப்ப காலியாகும்2னு.. அந்தக் கதையா.. அந்த நேரத்துல ஜெ. தன்னோட வூட்டுல ஆட்சியையும், கட்சியையும் கைப்பத்த திட்டம் தீட்டிக் கிட்டிருந்தாரு. இதுதான் தன்னோட இதய தெய்வத்துக்கு ஜெ. காட்டுன பாழாய் போன நன்றியோ என்னவோ?
ம்ம்ம்ம்ஹூம்.. நான் அந்த அம்மா மேல அநியாயமால்லாம் பழி போடல.
தான் எழுதின எம்.ஜி.ஆர் யார்'ங்கிற புத்தகத்துல ஆர்.எம்.வீ. எழுதியிருக்கிறார்.
வாங்க.. அது என்னான்னு பார்க்கலாம்..
இந்தியா முழுவதும் புரட்சித் தலைவரின் உடல் நலக்குறைவை எண்ணி வருந்தியது. பிற மாநில முதலமைச்சர்களெல்லாம் கவலைப்பட்டார்கள். குறிப்பாக, இந்தியப் பிரதமர் அன்னை இந்திராகாந்தி அவர்கள் பெரிதும் துயருற்று நேரிலேயே வந்து நலம் விசாரித்தார்கள்.
இங்கே எல்லோரும் எப்படிப்பட்ட சிகிச்சையளிப்பது, எந்த மருந்தை; எந்த மருத்துவரை; எங்கேயிருந்து வரவழைப்பது; எந்த நாட்டிலிருந்து வரவழைப்பது என்று பரபரப்பாக செயல்களிலே ஈடுபட்டுக்கொண்டிரந்த நேரத்தில்..
செல்வி ஜெயலலிதா அவர்கள் போயஸ் தோட்டத்து மாளிகையில் முக்கியமான கட்சிப் பொறுப்பாளர்கள், குறிப்பாக மாவட்டச் செயலாளர்களையெல்லாம் வரவழைத்து ரகசியக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
"எம்.ஜி.ஆர். உடல்நலம் இனிமேல் குணமாகாது: அகவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பொதுச்செயலாளராக நான் வரவேண்டும்; அதற்குப் பிறகு முதலமைச்சராகி விடுகிறேன். இந்தக் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுகிறேன்' என்று மந்திர ஆலோசனை நடத்தினார் என்ற செய்தி என்னுடைய கவனத்திற்கு வந்தது.
This story is from the October 19-22, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 19-22, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மறைந்தார் பெரியாரின் பேரன்!
திராவிட இயக்கத்தின் முகவரியான, தந்தை பெரியார் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், அரசியலில் தனக்கென தனியான ஆளுமைத் திறனுடன் காங்கிரஸ் கட்சியில் பயணித்துவந்தவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில்... சிகிச்சை பலனின்றி டிசம்பர் 14-ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
தமிழன்டா!
உலக செஸ் சாம்பியன் குகேஷ்!
ரங்கநாதருக்கு வைரக்கிரீடம்! நெகிழ்ச்சியில் ஜாஹீர் ஹூசைன்!
கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி பரதநாட்டியக் கலைஞரான ஜாகீர் ஹுசைன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரங்கநாதரை தரிசிக்கச் சென்றார்.
மதவாதப் பேச்சு! நீதிபதிக்கு கடும் எதிர்ப்பு!
நீதித்துறையை காவிமயமாக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்புகள் பல காலமாகத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன.
கைதி எண் 9658
ஆயில்யத்து குற்றியேரி கோபாலன் என்னும் மிக நீண்ட பெயருக்குள் யார் இருக்கிறார் என்பதை உங்களுக்கு எட்டிப் பார்க்க தோன்றலாம். அந்த பெயருக்குள் ஒரு அனல் வீசும் தகிப்பு, காலந்தோறும் வாழ்ந்து வந்திருக்கிறது. அந்த பெயர், பயணம் செய்யாத இடம் என்று எதுவுமே இல்லை.
விதிமீறல் மருத்துவமனை! பலியான 6 உயிர்கள்!
மனிதாபிமானத்தை மறந்து, வருமானத்துக்காகவே பெரும்பாலான டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதால் தற்போது பல உயிர்கள் பறிபோகின்றன.
இந்துத்வா கலெக்டர்! குமுறும் வி.சி.க.வினர்!
தமிழ்நாட்டில் வி.சி.க.விற்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக சர்ச்சை கிளம்புவது குறித்து, எதிராக மாவட்ட கலெக்டர்கள்!' என்ற செய்திக்கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம். வி.சி.க. சார்பாக ஏற்றப்படும் கொடிக்கம்பங்களை அகற்றுவதில் அவர் குறியாக இருப்பு குற்றம்சாட்டியது குறித்தும் எழுதியிருந்தோம்.
கழுத்தை நெரிக்கும் பா.ஐ.க! விஜய்க்கு தூது!
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணத்தையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்துத் தரப்பு மக்களையும், அரசியல் நோக்கர்களையும் கூர்ந்து பார்க்க வைத்துள்ளது.
விரக்தியில் ஐக்கி! எதிர்க்கும் மாஜி!
\"இங்கு வருவதற்கே விருப்பமில்லை அவருக்கு! என்னுடைய விஷயத்தை முடித்துவிட்டுப் போ!\" என மாஜி ஒருவர் அழுத்தம் கொடுக்க, எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோவைக்கு வந்திருக்கிறார் ஈஷா நிறுவனரான ஐக்கி வாசுதேவ்.
அர்ஜுன் ரெட்டி விலகல் மர்மம்! அதிரடி பின்னணி!
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த அர்ஜுன் ரெட்டி, அக்கட்சியிலிருந்து முழுமையாக விலகியிருக்கிறார்.