"ஒன்றிய அரசின் நிதி ஆணையத்தினர் தமிழகம் வருகிறார்களே?"
"ஒன்றிய அரசின் 16ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழகத்திற்கு 17ஆம் தேதி வருகிறார்கள். அவர்கள் தமிழகத்தில் 4 நாட்கள் இருக்கிறார்கள். இவர்களின் ஆலோசனைக் கூட்டம் கோட்டையில் நடக்கிறது. அதில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும், நிதித்துறைச் செயலாளர், தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர்கள், துறை வாரியான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்."
"நல்லது."
"நிதி சார்ந்த பல பிரச்சனைகள் பற்றி தமிழக திட்டக் குழுவுக்கு நிறைய தெரியும். அதனால் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், அதுகுறித்துப் பேசினால் சிறப்பாக இருக்கும் என்று அரசுத் தரப்பு கருதுகிறது. ஆனால், இந்தக் கூட்டத்தில் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சனை பேச அனுமதிப்பார்களா? என்கிற சந்தேகம் இப்போதே நிதித்துறை வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது. ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்ததும், நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஃபீல்ட் விசிட்டுக்கு அழைத்துச் செல்லவும் நிதித்துறையினர் திட்டமிட்டிருக்கிறார்கள். அதாவது, தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட, ஒன்றிய அரசின் திட்டங்களை நேரில் அழைத்துச் சென்று காட்ட இருக்கிறார்கள். இதற்கிடையே, நிதி ஆணையத்தின் அதிகாரிகள் அனைவரையும் தனி விமானத்தில் மதுரைக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து கீழடி அகழாய்வு மையத்தை அவர்களுக்குச் சுற்றிக்காட்டவும் திட்டமிட்டிருக்கிறார்கள். டெல்லியிலிருந்து வரும் அதிகாரிகள் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்துள்ளது தி.மு.க. அரசு. அதேபோல் இந்த ஆணையத்தினர், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தவிருக்கிறார்கள்."
"ஓவியர் டிராட்ஸ்கி மருதுக்கு தி.மு.க. அரசு பொறுப்பு ஒன்றைக் கொடுத்திருக்கிறதே?"
"தமிழ்நாடு அரசின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தலைவராக ஓவியர் டிராட்ஸ்கி மருது நியமிக்கப்பட்டிருக்கிறார். டிராட்ஸ்கி மருதுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டதில் கலைத்துறையினர் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்."
هذه القصة مأخوذة من طبعة November 16-19, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 16-19, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மறைந்தார் பெரியாரின் பேரன்!
திராவிட இயக்கத்தின் முகவரியான, தந்தை பெரியார் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், அரசியலில் தனக்கென தனியான ஆளுமைத் திறனுடன் காங்கிரஸ் கட்சியில் பயணித்துவந்தவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில்... சிகிச்சை பலனின்றி டிசம்பர் 14-ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
தமிழன்டா!
உலக செஸ் சாம்பியன் குகேஷ்!
ரங்கநாதருக்கு வைரக்கிரீடம்! நெகிழ்ச்சியில் ஜாஹீர் ஹூசைன்!
கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி பரதநாட்டியக் கலைஞரான ஜாகீர் ஹுசைன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரங்கநாதரை தரிசிக்கச் சென்றார்.
மதவாதப் பேச்சு! நீதிபதிக்கு கடும் எதிர்ப்பு!
நீதித்துறையை காவிமயமாக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்புகள் பல காலமாகத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன.
கைதி எண் 9658
ஆயில்யத்து குற்றியேரி கோபாலன் என்னும் மிக நீண்ட பெயருக்குள் யார் இருக்கிறார் என்பதை உங்களுக்கு எட்டிப் பார்க்க தோன்றலாம். அந்த பெயருக்குள் ஒரு அனல் வீசும் தகிப்பு, காலந்தோறும் வாழ்ந்து வந்திருக்கிறது. அந்த பெயர், பயணம் செய்யாத இடம் என்று எதுவுமே இல்லை.
விதிமீறல் மருத்துவமனை! பலியான 6 உயிர்கள்!
மனிதாபிமானத்தை மறந்து, வருமானத்துக்காகவே பெரும்பாலான டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதால் தற்போது பல உயிர்கள் பறிபோகின்றன.
இந்துத்வா கலெக்டர்! குமுறும் வி.சி.க.வினர்!
தமிழ்நாட்டில் வி.சி.க.விற்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக சர்ச்சை கிளம்புவது குறித்து, எதிராக மாவட்ட கலெக்டர்கள்!' என்ற செய்திக்கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம். வி.சி.க. சார்பாக ஏற்றப்படும் கொடிக்கம்பங்களை அகற்றுவதில் அவர் குறியாக இருப்பு குற்றம்சாட்டியது குறித்தும் எழுதியிருந்தோம்.
கழுத்தை நெரிக்கும் பா.ஐ.க! விஜய்க்கு தூது!
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணத்தையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்துத் தரப்பு மக்களையும், அரசியல் நோக்கர்களையும் கூர்ந்து பார்க்க வைத்துள்ளது.
விரக்தியில் ஐக்கி! எதிர்க்கும் மாஜி!
\"இங்கு வருவதற்கே விருப்பமில்லை அவருக்கு! என்னுடைய விஷயத்தை முடித்துவிட்டுப் போ!\" என மாஜி ஒருவர் அழுத்தம் கொடுக்க, எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோவைக்கு வந்திருக்கிறார் ஈஷா நிறுவனரான ஐக்கி வாசுதேவ்.
அர்ஜுன் ரெட்டி விலகல் மர்மம்! அதிரடி பின்னணி!
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த அர்ஜுன் ரெட்டி, அக்கட்சியிலிருந்து முழுமையாக விலகியிருக்கிறார்.