CATEGORIES
Categories
தாயுடன் சேர்ந்து நடிகை ஹன்சிகா வரதட்சணை கொடுமை
ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடிகை முஸ்கான் போலீசில் புகார் அளித்துள்ளார். தமிழில் விஜய்யுடன் ‘வேலாயுதம்’, சூர்யாவுடன் ‘சிங்கம் 2’, தனுஷுடன் ‘மாப்பிள்ளை’, சிம்புவுடன் ‘வாலு’, ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ உள்பட படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி.
ஷங்கர்-லைகா இடையே சமரசம் கேம் சேஞ்சர் 10ம் தேதி ரிலீசாகிறது
சென்னை, ஜன.8: 'இந்தியன் 3' படம் தொடர் பான பிரச்னையில் இயக்குனர் ஷங்கர், லைகா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது.
அஜித் ஓட்டிய கார் விபத்தில் நொறுங்கியதால் பரபரப்பு
துபாயில் நடந்த கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி - அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்
சென்னை தீவுத்திடலில் நேற்று 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள சி.எம்.டி.ஏ. கண்காட்சி அரங்கை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டார்.
புஷ்பா பட கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை பார்த்தார் நடிகர் அல்லு அர்ஜூன்
திருமலை: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் கடந்த டிசம்பர் 4ம் தேதி புஷ்பா 2 திரைப்படம் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது.
பிரசாந்த் கிஷோர் மருத்துவமனையில் அனுமதி
பீகார் மாநில அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5ம் தேதி தேர்தல் பிப்.8ல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தலைநகர் டெல்லியில் கடந்த 2014 முதல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது.
2047ல் அதானி, அம்பானி வீடாகத்தான் இந்தியா இருக்கும் - சீமான் தாக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
2024ம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தேர்வு
தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பெருந்தலைவர் காமராசர் விருது 2006ம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் விநியோகம் சைதையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
பொங்கல் பண்டியையொட்டி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டையில் தொடங்கி வைக்கிறார்.
மன்மோகன் சிங், ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்
தமிழக சட்டப்பேரவை நேற்று கூடியதும், மறைந்த முன்னாள் எம்எல்ஏ தமிழ்மொழி ராஜதத்தனுக்கு இரங்கல் குறிப்பையும், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானத்தையும் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
48வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கிய 10 நாட்களுக்குள் சுமார் 10 லட்சம் பேர் வருகை - பபாசி தகவல்
48வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கிய 10 நாட்களுக்குள் சுமார் 10 லட்சம் பேர் வந்துள்ளதாக பபாசி தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர், பெண் இன்ஸ்பெக்டர் கைது
சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வழக்கில் திடீர் திருப்பமாக அதிமுக 103வது வட்டச் செயலாளர் சுதாகர், பெண் இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு அனுமதி கொடுத்த ஒன்றிய அரசை கண்டித்து 20 கி.மீ. நடைபயண போராட்டம்
மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு அனுமதி கொடுத்த ஒன்றிய அரசை கண்டித்து மேலூரிலிருந்து மதுரைக்கு சுமார் 50 ஆயிரம் பேர் நடைபயணமாகவும், வாகன பேரணியாகவும் வந்தனர். 20 கிமீ தூரத்திற்கு 7 மணி நேரம் நடந்த இப்போராட்டத்தால் மதுரையே ஸ்தம்பித்தது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, நாயக்கர்பட்டி, கம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மேலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் யுஜிசி புதிய விதிக்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
அரசியல், சட்டப்போராட்டம் நடத்தப்படும். கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியை பறிப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என எச்சரிக்கை
தமிழ்நாட்டை போல இந்தோனேஷியாவிலும் இலவச மதிய உணவு
தமிழ்நாட்டைப்போல இந்தோனேஷியாவிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் ஆட்சி அமைக்க வலதுசாரி கட்சி முயற்சி
ஆஸ்திரியாவில் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வலதுசாரி ஆதரவு ஹெர்பர்ட் கிக்ல் தலைமையிலான சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது.
பிரம்மபுத்திரா மீது உலகின் மிகப்பெரிய அணை இந்தியாவுக்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது
திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டுவதால் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்
அயர்லாந்து மகளிர் அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் மோதும் இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா தலைமை வகிப்பார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
ஆங்கிலம் பேசுவதில் இந்தியா முன்னிலை
பியர்சன் நிறுவனம் உலக நாடுகளின் ஆங்கிலப் புலமை குறித்து ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
கோல்டன் குளோப் விருதுகள் விழா இந்திய படம் வெளியேறியது
82வது கோல்டன் குளோப்ஸ் 2025 கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸில் நடைபெற்றது. 82வது கோல்டன் குளோப்ஸ் நிகழ்ச்சியை பிரபல நகைச்சுவை நடிகையான நிக்கி கிளேசர் தொகுத்து வழங்கினார்.
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றிட வேண்டும் என ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
ஒரு பாலின ஈர்ப்பு பிரிவினருக்கான உரிமை பாதுகாப்பு கொள்கைக்கு ஒரு மாதத்தில் ஒப்புதல்
ஒரே பாலின ஈர்ப்பு பிரிவினருக்கான உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் வழங்குவதற்கு தமிழக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
சட்டமன்ற மரபுகளை மதிக்காமல், தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும்
சட்டமன்ற மரபுகளை மதிக்காமல் தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லாததால் முதலீடு செய்ய தனியார் துறை தயக்கம்
மோடி தலைமையிலான பாஜ அரசின் மீது நம்பிக்கை இல்லாததால் தான் இந்தியாவில் முதலீடுகள் செய்ய தனியார் துறையினர் தயக்கம் காட்டுகின்றனர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
அருணாச்சலில் உறைந்த ஏரியில் நடந்த 4 பேர் தவறி விழுந்தனர்
அருணாச்சலில் உறைந்து போன செலா ஏரியில் நடக்க முயன்ற 4 சுற்றுலா பயணிகள் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பிரசாந்த் கிஷோர் கைது
பீகாரில் சமீபத்தில் நடந்த அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதிகார வரம்பிற்கு உட்பட்டதில்லை மாஜி தலைமை நீதிபதி சந்திரசூட் மீதான ஊழல் வழக்கு தள்ளுபடி
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்து லோக்பால் அமைப்பு தீர்ப்பளித்துள்ளது.
பல்வேறு ரயில் திட்டப்பணிகள் தொடக்கம் புல்லட் ரயில் இயக்கும் காலம் தூரத்தில் இல்லை
டம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு ரயில்வே திட்டப்பணிகளை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.