மேலும் அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா நேற்று காஞ்சிபுரத்தில் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
அரசு சார்பில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், கலெக்டர் கலைச்செல்வி மோகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
இதில் திமுக சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கி, அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார். க.செல்வம் எம்பி, மாணவரணி செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்பு பேசினார். இதேபோல் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவ ராஜ், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சுகுமார், சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் சிகாமணி, ஒன்றியச் செயலாளர்கள் குமார், குமணன், படுநெல் வீபாபு, பகுதிச் செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், தொமுச பேரவை நிர்வாகிகள் சுந்தரவதனம், இளங்கோவன், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்து செல்வம், ஜெகநாதன், சுப்பு ராயன், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் யுவராஜ், ராமகிருஷ்ணன், செவிலி மேடு மோகன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்கிற ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.
அதிமுக சார்பில் மேற்கு மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
This story is from the September 16, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 16, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மனைவி நடத்தையில் சந்தேகம் கத்திரிக்கோலால் குத்தி டெய்லர் தற்கொலை
திருமணம் நடந்த 6 மாதத்தில் மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் டெய்லர் ஒருவர் தன்னைத் தானே கத்திரிக்கோலால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.
வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற இந்தியா தகுதியானது
வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெறுவதற்கு இந்தியா தகுதிவாய்ந்தது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
சமோசா மாயமானது பற்றி விசாரணையா?
இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கடந்த மாதம் சிஐடி, அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டி 20 போட்டி சஞ்சு சாம்சன் அதிரடியில் இந்தியா அபார வெற்றி
தென்ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஆட்டம் தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நேற்று நடைபெற்றது.
இந்தியா ஏ அணி மீண்டும் சொதப்பல்
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும், இந்தியா ஏ – ஆஸி ஏ இடையிலான அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்டின், 2ம் நாள் ஆட்டத்தில், இந்திய வீரர்கள் சொதப்பலாக ஆடி, 5 விக். இழப்புக்கு 73 ரன் எடுத்துள்ளனர்.
ஓட்டல் பிசினஸில் கோலிவுட் பிரபலங்கள்
கோலிவுட் பிரபலங்கள் பலர் சமீபத்தில் ஓட்டல் பிசினஸில் இறங்கியுள்ளனர்.
சென்னையில் அனுமதியின்றி போராட்டம் அர்ஜூன் சம்பத், கார் டிரைவருடன் கைது
கனடா நாட்டில் இந்து கோயிலுக்கு சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அனுமதியின்றி அண்ணாசாலையில் போராட்டம் நடத்த முயன்ற அர்ஜூன் சம்பத், அவரது கார் டிரைவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கனடா நாட்டில் இந்து கோயிலுக்கு சென்ற இந்துக்கள் மீது அந்நாட்டில் வசித்து வரும் காலிகிஸ்தான் ஆதரவார்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
எனது உயிர் போகும் முன்பு மோடியிடம் மேகதாது அணை கட்ட அனுமதி பெற்றுத்தருவேன்
எனது கடைசி மூச்சை விடுவதற்கு முன்பு மேகதாது திட்டத்திற்கு பிரதமர் மோடியிடம் இருந்து அனுமதியை பெற்றுத் தருவேன் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.
மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை ஏற்க மோகன்லால் மறுப்பு
மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்குப் பின் முன்னணி நடிகர்கள், டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவிந்தன.
அலிகர் முஸ்லிம் பல்கலை.சிறுபான்மை நிறுவனம் தான்
உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் இயங்கிவரும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 150 ஆண்டுகளுக்கு முன் சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது.