பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் புகார் மனு
Dinakaran Chennai|September 24, 2024
எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்த பாஜ பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் புகார் மனு

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி ரா. சீனிவாச பெருமாளிடம், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைசந்திரசேகர் எம் எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, எதிர்காட்சி தலைவர் ராகுல் காந்தியை நாட்டின் நம்பர் ஒன் பயங்கரவாதி என்று பேசியுள்ளார். மேலும் அவர் ராகுல் காந்திக்கு எதிராக பொதுமக்களின் வெறுப்பையும், சீற்றத்தையும் தூண்டும் வகையில் வன்முறை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. மேலும் அவர் ராகுல் காந்தியை படுகொலை செய்ய வேண்டும் அல்லது உடலில் காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். ராகுல் காந்தி குறித்து இத்தகைய பேச்சுக்கள் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கத்திலும், வெறுக்கத்தக்க கருத்துக்கள் மூலம் கலவரம், அமைதிக்கு குந்தகம் போன்றவற்றை தூண்டிவிடும் வகையில் அமைக்கிறது. எனவே இது சம்பந்தமாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

This story is from the September 24, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the September 24, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAKARAN CHENNAIView All
Dinakaran Chennai

மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம்

மணலி மண்டலக்குழு கூட்டத்தில் 15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
November 15, 2024
70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
Dinakaran Chennai

70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்

ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
November 15, 2024
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்
Dinakaran Chennai

காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்

காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
November 15, 2024
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
Dinakaran Chennai

புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை

சீரமைக்க கோரிக்கை

time-read
1 min  |
November 15, 2024
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Dinakaran Chennai

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
November 15, 2024
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
Dinakaran Chennai

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை

புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்

time-read
1 min  |
November 15, 2024
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
Dinakaran Chennai

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை

டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

time-read
1 min  |
November 15, 2024
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
Dinakaran Chennai

மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
November 15, 2024
Dinakaran Chennai

தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை

தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

time-read
1 min  |
November 15, 2024
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
Dinakaran Chennai

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 15, 2024