வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலை புறம்போக்குகளை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் -
Dinakaran Chennai|October 03, 2024
வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலைப் புறம்போக்குகளை பயன்படுத்த அனுமதிக்கவும், தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலை புறம்போக்குகளை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் -

இதுகுறித்து நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மதுரையில் சாலை அமைக்கும் பணியின் காரணமாக விளாச்சேரி பிரதான சாலை முதல் மதுரை- திருமங்கலம் பிரதான சாலை வரையில் தென்கால் கண்மாய் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் முதலில் சாலை பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டது. பின்னர் நீதிபதிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, சாலை அமைக்கும் திட்டத்தால் பாதிப்புகள் இல்லை என்பதால் தடை உத்தரவு நீக்கப்பட்டது.

மேலும் நீர்நிலைகளை பாதிக்காத வகையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த மார்ச் 7ம் தேதி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக ஏப்.16, ஜூன் 7, செப்.6 ஆகிய தேதிகளில் தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார். இதில் நீர்நிலைகள் மற்றும் நீர்நிலை புறம்போக்குகளில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கவும், தடையில்லா சான்று வழங்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் வரைவு வழிகாட்டுதல்களை வகுத்து அரசின் ஒப்புலுக்கு அனுப்பிவைத்தார். இதனை கவனமாக ஆய்வு செய்த அரசு வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலைப் புறம்போக்குகளை பயன்படுத்த அனுமதிக்கவும், தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அனைத்து அதிகாரிகளும் கடைபிடிக்க வேண்டும். இதனை முதன்மை பொறியாளார் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

This story is from the October 03, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the October 03, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAKARAN CHENNAIView All
Dinakaran Chennai

தேசிய பயண அட்டையை பயன்படுத்தி மாநகர பேருந்துகளில் டிக்கெட் பெறும் வசதி : விரைவில் அறிமுகம்

மாநகர பேருந்துகளில் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
October 03, 2024
Dinakaran Chennai

40 சவரன் நகையை கண்டுபிடிக்க தொழிலதிபரிடம் ஜிபே மூலம் ₹20 ஆயிரம் எஸ்ஐ லஞ்சம் - உயர் அதிகாரிகள் விசாரணை

வீட்டில் மாயமான 40 சவரன் நகைகள் குறித்து புகார் அளித்த தொழிலதிபரிடம், திருட்டை கண்டுபிடிக்க ஜிபிஇ மூலம் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர் பாக உதவி ஆய்வாளரிடம் போலீசார் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
October 03, 2024
சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்
Dinakaran Chennai

சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை

time-read
1 min  |
October 03, 2024
முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ₹131 கோடி மதிப்பில் 225 சாலை பணிகள் நிறைவு
Dinakaran Chennai

முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ₹131 கோடி மதிப்பில் 225 சாலை பணிகள் நிறைவு

திருத்தனி கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு

time-read
1 min  |
October 03, 2024
பொன்னேரியில் 774.75 கோடி நிதி ஒதுக்கியும் 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி - விரைந்து முடிக்க கோரிக்கை
Dinakaran Chennai

பொன்னேரியில் 774.75 கோடி நிதி ஒதுக்கியும் 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி - விரைந்து முடிக்க கோரிக்கை

பொன்னேரி நகராட்சியில், 10 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
October 03, 2024
Dinakaran Chennai

பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : இயக்குனர் கவுதமன் பேட்டி

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

time-read
1 min  |
October 03, 2024
Dinakaran Chennai

சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை

time-read
1 min  |
October 03, 2024
துபாய்க்கு விமானத்தில் தப்ப முயற்சி தலைமறைவு குற்றவாளி சென்னையில் சிக்கினார்
Dinakaran Chennai

துபாய்க்கு விமானத்தில் தப்ப முயற்சி தலைமறைவு குற்றவாளி சென்னையில் சிக்கினார்

மீனம்பாக்கம், கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
October 03, 2024
Dinakaran Chennai

செங்கல்பட்டில் முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 03, 2024
திருப்போரூர் அருகே பரபரப்பு ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தீவிபத்து
Dinakaran Chennai

திருப்போரூர் அருகே பரபரப்பு ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தீவிபத்து

திருப்போரூர் அருகே ஆலத்தூர் தொழிற்பேட்டையில் டாம்ப்கால் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
October 03, 2024