இதில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பிரதமர் மோடி தீவிரமாக ஆதரித்து வரும் நிலையில், அதுதொடர்பான மசோதா ஒன்றிய அரசின் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனாலும், இந்த மசோதாவும் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம், இக்கூட்டத்தொடரில் அதானி, மணிப்பூர் விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கும் (செபி) அதானி குழுமத்திற்கும் ரகசிய உறவு இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு கோடி வரை லஞ்சம் தர தங்கள் நாட்டில் முறைகேடுகள் செய்திருப்பதாக அதாரூ. 2,100-க்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதானி குழுமம் குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஆதரவைக் கோரும் வகையில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் ஒன்றிய அரசு சார்பில் நேற்று நடத்தப்பட்டது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், ஒன்றிய அமைச்சரும் பாஜ தேசிய தலைவருமான ஜேபி நட்டா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், திமுகவின் திருச்சி சிவா, அகாலிதளத்தின் ஹர்சிம்ரத் கவுர் பாதல், எல்ஜேபி (ராம்விலாஸ்) கட்சியின் அருண்பாரதி என 30 கட்சிகளைச் சேர்ந்த 42 தலைவர்கள் பங்கேற்றனர்.
This story is from the November 25, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 25, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது
நுண்ணறிவுப்பிரிவு காவலர்களிடம் கமிஷனர் அருண் மனுக்கள் பெற்றார்
காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
ராணுவ வீரரை தாக்கிய விவகாரம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் மனித உரிமை ஆணைய உத்தவு ரத்து
ஐகோர்ட் கிளை அதிரடி
அண்ணாநகர் கால்வாயை பாடி குப்பம் கால்வாயில் திருப்ப மாநகராட்சி முடிவு
குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க
சபரிமலையில் புதிய சர்ச்சை 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சன்னிதானம் எஸ்பிக்கு ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டுள்ளார்.
நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டி.வி. 775 லட்சம் கொடிநாள் நிதி
முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான
எஸ்சி, எஸ்டி, ஓபிசி வளர்ச்சியை மோடி, ஆர்எஸ்எஸ் தடுக்கிறார்கள்
ராகுல்காந்தி குற்றச்சாட்டு