கேரள, மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வியாழக்கிழமை 300-ஐ நெருங்கியது. அங்கு மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடா்ந்தன.
சூரல்மலையில் காட்டாற்றின் குறுக்கே ராணுவம் கட்டி வந்த தற்காலிக இரும்புப் பாலம் நிறைவடைந்த நிலையில், முண்டக்கை பகுதிக்கு கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட நவீன இயந்திரங்கள் உதவியுடன் மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதுவரை 256-க்கும் மேற்பட் உடல்கள் கூறாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் மாநில நிா்வாகம் தெரிவித்தது. வியாழக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தோா் எண்ணிக்கை 297 என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கேரளத்தின் வடக்கே அமைந்த மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.
மலைப் பகுதியில் இருந்து பெரிய பாறைகளுடன் மண்ணும் கலந்துவந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டவை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டன.
ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் மீட்பு-தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தற்காலிக பாலம் அமைப்பு: நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, முழுவதுமாக துண்டிக்கப்பட்ட முண்டக்கையில் மண்ணின் ஈரப்பதம் அதிகம் இருப்பதாலும், போதுமான உபகரணங்கள் இல்லாததாலும் உடல்களை மீட்பதில் தாமதம் ஏற்படுவதாக களத்திலுள்ள மீட்புப் படை வீரா் ஒருவா் கூறினாா்.
This story is from the August 02, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 02, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விளம்பர பதாகைகளை அகற்ற தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை, நவ. 29: புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, விளம்பர பதாகைகள் வைத்திருப்போர் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மழைக்காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்
மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி-கடலூரில் 7, நாகையில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்
புதுச்சேரி/நெய்வேலி/நாகப்பட்டினம்/காரைக்கால், நவ.29: வங்கக் கடலில் ஃபென்ஜால் புயல் உருவானதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம், கடலூர் துறைமுக வளாகங்களில் வெள்ளிக்கிழமை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
செங்கல்பட்டு, விழுப்புரத்துக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பிவைப்பு
சென்னை, நவ. 29: செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடல் சீற்றம்: பல மீட்டர் உயரம் எழும்பிய அலைகள்
புதுச்சேரி, நவ.29: வங்கக் கடலில் 'பென்ஜால்' புயல் உருவானதை யொட்டி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி ஆர்ப்பரித்தன.
விலை உயரும் பிஎம்டபிள்யு மோட்டார் சைக்கிள்கள்
புது தில்லி, நவ. 29: பிஎம்டபிள்யு வின் இருசக்கர வாகனப்பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டாராட், இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்வு
மும்பை, நவ.29: பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ், 759 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 24,100-ஐ கடந்த நிலையில் நிறைவடைந்தது.
கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேற்றம்
டொனட்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த ரஸ்டோல்னோயே பகுதி மீட்கப்பட்டது. டொனட்ஸ்க் மற்றும் ஸபோரிஷியா பிராந்தியங்களுக்கு இடையே அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த வேலிகயா நோவோஸெல்கா நகருக்கு வெறும் ஏழு கி.மீ. தொலைவில் அந்தப் பகுதி அமைந்துள்ளது.
யுரேனிய செறிவூட்டலை ஈரான் விரிவாக்கும்
ஐஏஇஏ எச்சரிக்கை
காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்
ஜெருசலேம், நவ. 29: காஸா போர் முடிவுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினர் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பார்கள் என்று அந்த நாட்டு பாதுகாப்பு கேபினட் உறுப்பினரும், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏவி டிச்டர் தெரிவித்துள்ளார்.