இதேபோல, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தீபாவளி பண்டிகையை யொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட முதல் நாளான திங்கள்கிழமை சென்னையிலிருந்து 1,10750 பேரும், செவ்வாய்கிழமை 2,31000 பேரும் பயணித்துள்ள நிலையில், புதன்கிழமை மாலை 1,33,925 பேரும் பயணித்துள்ளனர். இதன்படி இதுவரை 3,41,838 வரை பயணித்துள்ளனர். பயணிகளின் தேவைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
எதிர்பார்த்ததை விட அதிக பயணிகள் வரும்போது ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநர், நடத்துநர் பணிச்சுமையை குறைக்கவும், செலவினத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு நிதி இழப்பில்லை. தனியார் பேருந்துகள் அனைத்தும் ஏற்கனவே அறிவித்திருந்தபடி அரசு நடத்துநருடனேயே இயக்கப்படுகிறது.
هذه القصة مأخوذة من طبعة October 31, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 31, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தமிழக அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி
தங்கள் வங்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பங்கு முதலீட்டுக்கான ஈவுத் தொகையாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகையை பொதுத்துறையைச் சேர்ந்த ரெப்கோ வங்கி வழங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் மழை
தங்கள் நாட்டின் மீது ரஷியா இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் செவ்வாய்க்கிழமை கூறியது.
கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு
அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை
லெபனானைச் சேர்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை
பிலிப்பின்ஸ் அதிபர் ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக விசாரணை நடத்த, துணை அதிபர் சாரா டுடேர்த்தேவை அந்த நாட்டு புலனாய்வு அமைப்பு நேரில் அழைத்துள்ளது.
பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினர் போராட்டத்தில் வன்முறை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்தும் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரா்கள் ஆறு போ் உயிரிழந்தனா்.
ஏஎல். முதலியார் தடகளப் போட்டி: புதிய சாதனைகள் படைப்பு
சென்னை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகள் இடையிலான ஏஎல். முதலியார் தடகளப் போட்டியில் எம்ஓபி கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
2-ஆவது சுற்றில் குகேஷ் – லிரென் டிரா
உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது சுற்று, இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையே செவ்வாய்க்கிழமை டிரா ஆனது.
எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரின் வளர்ச்சிக்கு தடை: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் சாடல்
பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) வளர்ச்சிப் பாதையில் குறுக்கே உள்ள தடுப்புச் சுவரை பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸும் வலுப்படுத்தி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி சாடினார்.
அதிகரிக்கும் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள்: மத்திய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
இயற்கை பேரிடர்களுக்கு வழிவகுக்கும் வகையில் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியது.