TryGOLD- Free

5 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியமா?
Dinamani Cuddalore|March 15, 2025
நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் விளக்கம்

சென்னை, மார்ச் 14: அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்றுவது சாத்தியமா என்ற கேள்விக்கு நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் பதிலளித்தார்.

மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 8-இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கும் போது தான் அத்தகைய பொருளாதாரம் சாத்தியம் என்று மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை விளக்கி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

அனைத்துத் தரப்பினரையும் கலந்து ஆலோசித்து நிதிநிலை அறிக்கையைத் தயாராக செய்துள்ளோம். குறிப்பாக, முதல்வர் தலைமையிலான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள புகழ் பெற்ற அறிஞர்களில் தொடங்கி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் வரை ஆலோசித்தோம். அமைச்சர்கள், அதிகாரிகள் தொடங்கி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வரை பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டோம். பரந்துபட்ட ஆலோசனையை நடத்தி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளோம்.

கடன்கள் அச்சமில்லை: தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதிகமாக வளர்ந்து வருகிறது. மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையும் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. பற்றாக்குறை அளவானது நிதிப் பொறுப்புடைமைச் சட்டத்தின் கீழ், 3 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். 2020-21-ஆம் நிதியாண்டில் 4.91 சதவீதமாக இருந்த அளவை 2025-26-ஆம் நிதியாண்டில் 3 சதவீதமாகக் குறைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

This story is from the March 15, 2025 edition of Dinamani Cuddalore.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the March 15, 2025 edition of Dinamani Cuddalore.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CUDDALOREView All
Dinamani Cuddalore

ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடரும் பாகிஸ்தான்

ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Cuddalore

எட்டயபுரம் பாரதியார் இல்லத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை செவ்வாய்க்கிழமை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Cuddalore

காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 பேர் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Cuddalore

மாநகராட்சி ஊழியர்கள் கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பு

வருவாய் உதவியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய்துறை ஊழியர்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணிக்கு வந்தனர்.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Cuddalore

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக் காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சுவை பேச்சாளர் குணால் காம்ரா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Cuddalore

அமைச்சரை ‘மாப்பிள்ளை’ என அழைத்த எம்எல்ஏ!

மின்சாரத் துறை அமைச்சரை, மாப்பிள்ளை என அழைத்த அதிமுக உறுப்பினரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Cuddalore

தெலங்கானா சுரங்க விபத்து: மேலும் ஒருவரின் உடல் மீட்பு

தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த மேலும் ஒருவரின் உடல் ஒரு மாதத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Cuddalore

ஷ்ரேயஸ் ஐயர் விளாசல்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Cuddalore

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டி உள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் தங்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Cuddalore

பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) காலமானார்.

time-read
1 min  |
March 26, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more