
தமிழ்நாடு முதலமைச்சர் கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற முன்னெடுப்பின் நீட்சியாக, அன்றாடம் அரசுத் துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தினை 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் தற்பொழுது ஊரகப் பகுதிகளில் அமல்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் 11.07.2024, அன்று தருமபுரி மாவட்டத்திலிருந்து "மக்களுடன் முதல்வர் முகாமினைத் தொடங்கி முகாமில் வைத்தார்கள்.
இத்திட்ட பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசு துறைகள், அதாவது வருவாய்த்துறை, நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, தொழிலாளர் நலத்துறை (நலவாரியம்) போன்றவையாகும். "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் மூலம் பொதுமக்கன் அதிகம் அணுகும் 15 துறைகள் வாயிலாக 44 வகையான சேவைகள் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அரகத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் "மக்களுடன் முதல்வர்” திட்டத்தை 18.12.2023 அன்று தொடங்கி வைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம் ஊராட்சியில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நகர்புறத்திற்கு தடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" திட்டத்தில் பொதுமக்கனிடமிருந்து 54,217 மனுக்கள் பெறப்பட்டு, தீர்வுகாணப்பட்டது.
この記事は Maalai Express の August 19, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の August 19, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

பூரணாங்குப்பத்தில் ரூ.10 லட்சம் செலவில் 5 மின்கோபுர விளக்கு
சபாநாயகர் செல்வம் இயக்கி வைத்தார்

ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய கலை நிகழ்ச்சி
ஸ்ரீ மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு களரம்பட்டி அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் நிர்வாகிகள், மக்கள் சட்ட உரிமைகள் கழகம், பிரதோஷ பூஜை மகளிர் குழுவினர் இணைந்து இனியா நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
டெல்லி சட்டசபை முன்பு அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
டெல்லி சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24ந் தேதி தொடங்கியது.

சீமானுக்கு நாளை வரை கெடு-வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த நா.த.க.-வினர்
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வழக்கில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மத்திய மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு 21 வகையான அபிஷேகங்கள்
கயத்தாறில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சாஸ்தா கோவில் மகா கயத்தாறில் அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்ட ஈஸ்வரர் சமேத திருமலைநாயகி அம்பாள் திருக்கோவில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சிவனுக்கு அம்பாளுக்கு, நந்திக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் 6-வது புத்தகத் திருவிழா
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத்திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 19.02.2025 அன்று துவக்கி வைத்தார்கள். எட்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்றுக் காலை 11.00 மணிக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான போட்டிகள், பிற்பகல் 3.30 மணி முதல் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கனமழை எச்சரிக்கை 12 மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில், மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகள் ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.