தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை கடந்த பெப்ரவரி மாதம். 17ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்து வரவு-செலவுத் திட்ட உரையை ஆற்றிய நிலையில், வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெற்று கடந்த 25ஆம் திகதி மாலை 6.10 மணியளவில் விவாதம் நிறைவடைந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 109 மேலதிக வாக்குகளினால் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
வரவு- செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜீவன் தொண்டமான் எம்.பியாகவுள்ள ஐக்கிய தேசியக்கட்சி, நாமல் ராஜபக்ஷ எம்.பியாகவுள்ள பொதுஜன பெரமுன, ரவி கருணாநாயக்க எம்.பியாகவுள்ள புதிய ஜனநாயக முன்னணி,திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜனசக்தி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இந்த வரவு-செலவுத் திட்டத்தினை சிங்கள எதிர்க்கட்சிகள், அவற்றோடு பங்காளிகளான மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்த்து வாக்களித்தபோது, அரசு தரப்பினருடன் இணைந்து யாரும் எதிர்பாராத வகையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாக வாக்களித்து அதிர்ச்சியளித்தார். அதேநேரம், இலங்கை தமிழரசுக் கட்சியின் 8 எம்.பிக்களும் சுயேச்சைக் குழு 17 இந்த யாழ். மாவட்ட எம்.பியான அர்ச்சுனாவும் வாக்களிப்பில் பங்கேற்காது அவர்களும் அதிர்ச்சியளித்தனர்.
Diese Geschichte stammt aus der March 06, 2025-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 06, 2025-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

ஐ.பி.எல். மும்பையை வென்ற சென்னை
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.

பாரிய தோல்விகளையடுத்து முகாமையாளர் மொட்டாவை நீக்கிய ஜீவென்டஸ் -ட்யுடரை நியமித்தது
முகாமையாளர் தியாகோ மொட்டாவை இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸ் நீக்கியதாகவும், முன்னாள் வீரர் இகோர் ட்யூடரை நியமித்துள்ளதாகவும் அக்கழகம் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது.

உலகநாயகன் வைத்த பெயர்
நடிகர் ரோபோ சங்கருக்கு அண்மையில் பேரன் பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு உலகநாயகன் கமல்ஹாசன் பெயர் வைத்துள்ளார்.

மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி ஏற்கெனவே சில மாஸ் நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்த நிலையில், இனிமேல் வில்லனாக நடிக்கப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.

ஒரே காரில் மனைவியுடன் வந்து விவாகரத்து கோரிய ஜி.வி.
தமிழ் சினிமாவில் முன்னணி கோரி மனுத்தாக்கல் இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் குமார் கடந்த 2013ஆம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.

இரவு விடுதி விவகாரம் யோஷிதவுக்கு தொடர்பில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, கொழும்பு, பார்க் வீதியில் உள்ள இரவு விடுதியில் நடந்த கைகலப்பில் ஈடுபடவில்லை என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

"பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு"
இலங்கையில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் ஆபத்தான முறையில் அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) ரேணுகா ஜெயசுந்தரா கூறியுள்ளார்.
வாக்குச் சீட்டுகள் அச்சிடல் ஆரம்பம்
மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஞாயிற்றுக்கிழமை(23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

"முக்கூட்டு வதந்தி பொய்"
முன்னாள் ஜனாதிபதிபதிகளான மஹிந்த, ரணில் ஆகியோருடன், ஐக்கிய மக்கள் சக்தி இணையவுள்ளதாக வெளியாகியுள்ள வதந்தி பொயாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வைத்தியசாலையை தாக்கிய இஸ்ரேல்: ஹமாஸ் அமைப்பின் தலைவர் பலி
தெற்கு காசாவில் அமைந்துள்ள வைத்தியசாலையை, ஞாயிற்றுக்கிழமை (23) அன்று இஸ்ரேல் குறிவைத்து நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனை ஹமாஸ் அமைப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.