செழிப்பான பாதுகாப்பு, விண்வெளி உற்பத்திச் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் தொழில் துறையின் தேவைகளைப் புதுமையான முறையில் நிவர்த்தி செய்வதன் மூலம் இத்துறையில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆளில்லா வானூர்தி சோதனை மையம் மூலம் இந்தியாவில் விண்வெளி, பாதுகாப்பு நிறுவனங்களைத் தொடங்குவதற்கான விருப்பமான இடமாக தமிழகம் மாறும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பலவும் ‘டிரோன்’ துறையில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவும் இத்துறையில் முன்னோக்கிச் செல்ல நினைப்பதில் வியப்பு ஏதுமில்லை.
இந்திய அரசு வேளாண், விண்வெளி, பாதுகாப்புத் துறைகளில் ஆளில்லா வானூர்திகளின் பயன்பாட்டுக்கு ஆக அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியதை அடுத்து, மாநில அரசுகளும் அந்த வழியைப் பின்பற்றுகின்றன.
மகளிர்க்கான ஆளில்லா வானூர்தி பயிற்சித் திட்டம்
மகளிர்க்கான ‘நமோ ஆளில்லா வானூர்தி’ பயிற்சித் திட்டத்தை, கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளது இந்திய அரசு.
இதன் மூலம் 446 ஆளில்லா வானூர்திகள் தயாரிக்கப்படும் என்றும் 500 பேருக்கு அவற்றை இயக்குவதற்கான இலவசப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கருடா நிறுவனத்தின் அதிகாரி ஷ்யாம் குமார் தெரிவித்துள்ளார்.
“ஒரு வலுவான, வளர்ந்த தேசத்தைக் கட்டியெழுப்ப பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மிக முக்கியமானது. பெண்கள் பொருளியல் ரீதியில் முன்னேறும்போது வீட்டுக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களிக்கின்றனர். இந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் ஷ்யாம் குமார்.
இத்திட்டத்தின்கீழ் வேளாண் துறையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் 15,000 ஆளில்லா வானூர்திகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
மேலும், நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,000 ஆளில்லா வானூர்திகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பெண் தொழில் முனைவோர்களுக்கான இலவச ஆளில்லா வானூர்தி பயிற்சித்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கருடா ஏரோ ஸ்பேஸ் தெரிவித்துள்ளது.
Esta historia es de la edición November 09, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 09, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தெலுங்குப் படத்தில் மமிதா
மலையாள நடிகை மல்லிகா பைஜு அடுத்து தெலுங்கில் அறிமுகமாகிறார்.
விஜய் படத்தில் இணைந்துள்ள வரலட்சுமி
‘விஜய் 69’வது படத்தில் நடிகை வரலட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அழகாகக் காட்டிக்கொள்ள ஸ்ரீதேவி மெனக்கெட்டார்: கணவர் போனி கபூர்
தனது மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவி தம்மை அழகாகக் காட்டிக்கொள்ள பலவகையிலும் மெனக்கெட்டதாக அவரது கணவர் போனி கபூர் கூறியுள்ளார்.
டி20: அடுத்தடுத்து சதமடித்து திலக் வர்மா சாதனை
டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் அடுத்தடுத்து மூன்று முறை சதமடித்துள்ளார் இந்திய பந்தடிப்பாளர் திலக் வர்மா.
அடுத்த அத்தியாயத்திற்குள் நுழையும் யுனைடெட்
சுமார் 11 ஆண்டுகள் முன்பு வரை கொடிகட்டிப் பறந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட், மீண்டும் ஒரு புதிய நிர்வாகியின்கீழ் களமிறங்கவுள்ளது.
வளர்ப்புப் பெற்றோரின் அளப்பரிய அன்பு
அளவுகடந்த அன்பையும் அரவணைப்பையும் தங்கள் 14 வயது வளர்ப்பு மகள் கதீஜாவுக்கு (உண்மைப் பெயரல்ல) வாரி வழங்குகின்றனர் அகமது மரைக்காயர், ரோசியா தம்பதியர்.
ஆதரவாளர்களுக்கு லிஷாவின் சிறப்பு விருந்து
தனது கலாசாரம், பண்பாடு சார்ந்த நடவடிக்கைகள், நிகழ்ச்சிகள், முயற்சிகள் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்க, விமரிசையான இரவு விருந்து நிகழ்ச்சிக்கு லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஏற்பாடு செய்திருந்தது.
தவறாகிப்போன மருத்துவச் சோதனை; அசைவற்றுக் கிடக்கும் சிங்கப்பூர் மாது
தென்கொரியாவில் மருத்துவ சோதனை தவறாகிப் போனதால் சிங்கப்பூர் மாது ஒருவர், அங்க அசைவின்றி கிடக்கிறார்.
அமெரிக்க நிதி அமைச்சராக ஸ்காட் பெஸென்ட் தேர்வு
பிரபல முதலீட்டாளர் ஸ்காட் பெஸென்ட்டை அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அந்நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் நவம்பர் 22ஆம் தேதியன்று தெரிவித்தார்.
டெல்லியில் கத்திக்குத்து: காவல்துறை அதிகாரி மரணம்
பணியில் இருந்த டெல்லி காவல் அதிகாரி ஒருவர், கத்திக்குத்துச் சம்பவத்தில் உயிரிழந்தார்.