அந்தச் சிறைத்தண்டனை இரண்டு ஆண்டுகளுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
'யோன்ஹாப்' செய்தி நிறுவனம் அந்தத் தகவல்களை வெளியிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக லீ கூறியுள்ளார்.
எந்தவொரு சிறைத் தண்டனையோ ஒரு மில்லியன் வோனுக்கு மேலான அபராதமோ உறுதியானால், லீ நாடாளுமன் றப் பதவியை இழந்துவிடுவார்.
அதோடு, அடுத்த ஐந்தாண்டு களுக்கு அவரால் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது.
This story is from the November 16, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 16, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சிங்கப்பூர் நாணயக் கொள்கை தளர்வு
சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS), அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டைத் தளர்த்தியுள்ளது.
2024ல் வீவக மறுவிற்பனை வீட்டு விலை 9.7% அதிகரிப்பு
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடு களின் விலை சென்ற ஆண்டு (2024) 9.7 விழுக்காடு உயர்ந்த நிலையில் இந்த ஆண்டும் இதே நிலைமை தொடருமென ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மலேசியக் கும்பலிடம் சிங்கப்பூர் போலி ஆவணம்
மலேசியாவில் பிடிபட்ட போதைப்பொருள் கும்பலிடமிருந்து போலி ஆவணங்களும் கள்ளநோட்டுகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
திட்டமிடப்பட்டதற்கு முன்பாகவே திறக்கப்படுகிறது ஹியூம் எம்ஆர்டி நிலையம் பிப்ரவரி 28ஆம் தேதி திறப்பு
புக்கிட் தீமா வட்டாரத்தில் அமைந்துள்ள டௌன்டவுன் பாதையின் ஹியூம் ரயில் நிலையம், திட்டமிடப்பட்டதற்கு முன்பாக பிப்ரவரி 28ஆம் தேதி திறக்கப்படவிருக்கிறது.
சிங்கப்பூர் அதிகாரிகள் போல ஏமாற்றி மோசடிகளில் ஈடுபட்ட 16 மலேசியர்கள் கைது
மலேசிய காவல்துறையின் அதிரடிச் சோதனையில், எல்லை கடந்த மோசடி கும்பலுடன் தொடர்புடைய 16 மலேசியர்கள் ஜனவரி 13ஆம் தேதி கோலாலம்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் $1.4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்தனர். சிங்கப்பூர் மக்களை இலக்காகக்கொண்டு அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடிகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் அந்த நடவடிக்கையை மலேசியக் காவல்துறையுடன் இணைந்து சிங்கப்பூர் காவல்துறை முறியடித்தது. 24 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட அந்த மோசடிக்காரர்களை மலேசிய காவல்துறை கைது செய்ததாக ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது. அவர்கள் பொதுவாக டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி அல்லது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் பாதிக்கப்பட்டவர்களை அழைப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களில் கடன்பற்று அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும், அல்லது அவர்களின் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்குரிய அல்லது மோசடி பரிவர்த்தனைகள் நடந்திருப்பதை வங்கி கண்டறிந்திருப்பதாகவும் கூறுவார்கள். அந்த அழைப்புகள் பின்னர் மற்றொரு மோசடிக்காரருக்கு மாற்றப்படும். அந்த அழைப்பில் சிங்கப்பூர் காவல்துறை அல்லது சிங்கப்பூர் நாணய ஆணையம் அரசாங்க அதிகாரிகளாக நடித்து ஏமாற்றுவார்கள். சில சந்தர்ப்பங்களில், மோசடிக்காரர்கள் காவல்துறை அல்லது நாணய ஆணையம் அதிகாரிகள் போல உடையணிந்து, அந்த முகவையின் சின்னத்தைக் காட்டும் பின்னிணியில் காணொளியில் அழைப்புகள் நடைபெறும். வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் பயன்பாடுகளில் தொடர்பு நடைபெறும். மோசடிக்காரர்கள் சில நேரங்களில் போலி அடையாள அட்டை (warrant card) அல்லது ஆவணங்களையும் காட்டுவார்கள். பின்னர், சட்டவிரோத பண பரிமாற்றம் போன்ற குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டுவார்கள். மேலும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றக் கூறுவார்கள். 2024 ஜனவரிக்கும் அக்டோபருக்கும் இடையில், அத்தகைய சம்பவங்களில் குறைந்தது 1,100 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மொத்த இழப்புகள் குறைந்தது $120 மில்லியன் ஆகும். இவற்றில் 50க்கும் மேற்பட்ட சம்பவங்களுடன் மலேசிய கும்பல் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட 16 பேர் மீது மலேசிய நீதிமன்றத்தில் மோசடி சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் மோசடிகளில் இழந்த தொகையின் அளவு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. 26,587 சம்பவங்களில் $385.6 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது. ஆண்டின் இரண்டாம் பாதிக்கான புள்ளிவிவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
மின்சிகரெட் விநியோகக் கும்பல் சிக்கியது
மின்சிகரெட்டுகளை விநியோகம் செய்யும் கும்பலைச் சுகாதார அறிவியல் ஆணையம் கண்டறிந்தது.
மின்தடை போன்ற நெருக்கடிகளை சமாளிக்க இரண்டு வாரப் பயிற்சி
நெருக்கடிகளையும் இடையூறுகளையும் எதிர்கொள்ளும் படியான விழிப்புணர்வை சிங்கப் பூரர்களிடம் ஏற்படுத்த சென்ற ஆண்டு 'எக்சர்சைஸ் எஸ் ஜி ரெடி' எனும் திட்டம் தொடங்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடைகள் விநியோகம்
ரவி சிங்காரம்
அதிகாரி கொல்லப்பட்ட விபத்து: குற்றவாளிக்குச் சிறை, பிரம்படி
சாலை விபத்தில் நிலப்போக்குவரத்து ஆணைய அதிகாரி உயிரிழந்ததற்குக் காரணமாக இருந்த 19 வயது மோட்டார்சைக்கிளோட்டிக்கு ஈராண்டுகள், மூன்று மாதச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.
பழனி முருகன் கோவில் கம்பிவட வண்டிக்குப் புதிய பெட்டிகள்
பழனி முருகன் கோவிலில் இயக்கப்படும் கம்பி வட வண்டியில் (ரோப் கார்) பொருத்தப்பட்டுள்ள பழைய பெட்டிகளை அகற்றிவிட்டு புதிய பெட்டிகளைப் பொருத்தும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.