இதற்கு முன்பு, ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர், இம்முறை தனது முந்தைய மூன்று படங்களில் இருந்து வேறுபட்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கதையை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார்.
“ஒரு வேலையை மீண்டும் மீண்டும் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. புதிதாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது குணம். வலியின்றி ஆதாயம் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
“கடந்த எட்டு ஆண்டுகளாக என் மனதில் இருந்த, எனக்கு மிகவும் பிடித்தமான கதை இது. எல்லோரும் விரும்பும் வகையில் படமாக்கி உள்ளேன். நிச்சயமாக நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும். மேலும், தொடங்கிய நிமிடத்தில் இருந்து பார்ப்பவர்களை வசீகரிக்கும்,” என்கிறார் நெல்சன் வெங்கடேஷ்.
‘டிஎன்ஏ’ படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஆனந்த், திவ்யாவாக நடிகர் அதர்வாவும் மலையாள நடிகை நிமிஷாவும் நடித்துள்ளனர்.
இரு கதாபாத்திரங்களின் ஆரம்பப் புள்ளியும் முடிவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் தங்கள் பயணத்தில் எங்கே சந்திக்கிறார்கள், அதன் பின்னர் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு அலைந்து திரிந்துச் செல்கிறது என்பதுதான் கதை.
“மனதுக்குப் பிடித்த இருவரை திரையில் பார்ப்பது போன்ற எண்ணத்தை இருவரும் தோற்றுவித்தார்கள். இளையர்களை அதிகம் கவனத்தில் கொண்டு காட்சிகளை அமைத்துள்ளேன்.
Esta historia es de la edición November 30, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 30, 2024 de Tamil Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
குறும்புத்தனமாக நடிப்பது மிகவும் கடினம்: ரோஷினி
இயக்குநர் பாலா குறித்து வெளியான பல தகவல்கள் உண்மைக்கு முரணானவை என்கிறார் இளம் நாயகி ரோஷினி பிரகாஷ்.
அழகெனும் கனவுக்குத் தாய்மை முட்டுக்கட்டையல்ல
தன் பத்து வயது மகளை ஒற்றைத் தாயாராகப் பார்த்துக்கொள்வது ஒருபுறம், தளவாடத் துறையில் சுயதொழில் செய்வது மறுபுறம் என திருவாட்டி ஷஜிதா அமீனுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரமே குறைவு.
ஜேஜு விமான விபத்து: கூட்டுப் பணிக்குழு அமைக்க ஒப்புதல்
அண்மையில் நேர்ந்த ‘ஜேஜு’ விமான விபத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, தென்கொரியாவின் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டு நாடாளுமன்றப் பணிக்குழுவை அமைக்க செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) ஒப்புக்கொண்டுள்ளன.
நஜிப்பின் பொது மன்னிப்பில் அரசாங்கம் நடைமுறையைக் கடைப்பிடித்தது: அமைச்சர் ஃபாமி
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பொது மன்னிப்பை நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கம் செயல்முறையைக் கடைப்பிடித்திருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் கூறியிருக்கிறார்.
இந்தோனீசியா: ஊழியர்களுக்கு வேலைப் பயிற்சி நிலையங்கள்
புலம்பெயர்ந்த ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த, 100 தொழில்சார் பயிற்சி நிலையங்களை நிறுவ இந்தோனீசியாவின் புலம்பெயர்ந்த ஊழியர்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு: நிலைக்குத்திய மதுரை, அலையெனத் திரண்டு வந்த மக்கள்
மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் முடிவை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி மதுரையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) போராட்டம் நடைபெற்றது.
வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்
வேலைவாய்ப்புகளை அதிகமாக வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 25,752 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா என பாமக ஆவேசம்
திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் காவல்துறை அனுமதியளிக்கிறது என்று பாமக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
‘எச்எம்பிவி தொற்று குறித்து அஞ்சத் தேவையில்லை’
மனித மெட்டா நிமோ வைரஸ் (எச்எம்பிவி) குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று மத்திய சுகாதாரச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.