அனைவரையும்விட வெளிநாட்டு ஊழியர்கள் பட்ட வேதனைகளை அக்கட்டுரை விரிவாக விவரித்தது. இதற்குமேல் அப்பிரச்சினையை ஆராயத் தேவையில்லை. ஆனால், நமக்கெல்லாம் பிரியமான லிட்டில் இந்தியாவில் வேறுபல பிரச்சினைகளும் வெகுநாளாகக் களையப்படாமல் இருந்துவந்தாலும் அவற்றை நாம் ஏன் பொறுத்து வருகிறோம் என்பதே இத்தலையங்கம் எழுப்பும் கேள்வி.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் பார்வையில் லிட்டில் இந்தியா சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான ஓர் இடம். கழகத்தின் துண்டுப் பிரசுரங்களிலும் சமூக ஊடகங்களிலும் சிங்கப்பூர் வரும் சுற்றுப்பயணிகள் கண்டிப்பாகப் பார்க்கக்கூடிய இடமாக லிட்டில் இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, உள்நாட்டு மக்களும், அதிலும் குடும்பங்களும் இளையர்களும் லிட்டில் இந்தியாவிற்கு வருவதை ஊக்குவிப்பது எப்படி என்பதை கழகம் ஆராய்ந்து வருகிறது. ஆய்வு, அதன் முடிவுகளை எட்டுவதற்கு முன்பாகவே, பல காலமாக லிட்டில் இந்தியாவிற்கு அடிக்கடி சென்றுவரும் நாம் இப்பிரச்சினைகளை அறிந்திருக்கிறோம்.
சைனாடவுன் போலவோ அல்லது கேலாங் சிராய் போலவோ லிட்டில் இந்தியாவில் வாகனம் நிறுத்துமிடங்கள் இல்லை. பெரிய, புதிய கட்டடங்கள் மிகக்குறைவாக இருக்கும் பட்சத்தில், அடுக்குமாடி அல்லது கீழ்த்தள வாகனம் நிறுத்துமிடங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்குள், தேக்கா பிளேஸ், தேக்கா உணவங்காடி நிலையம், கிள்ளான் லேன் பலமாடி வாகன நிறுத்துமிடம், முஸ்தஃபா கடைத்தொகுதி, சென்டிரியம் ஸ்குவேர், சிட்டி ஸ்குவேர் ஆகிய இடங்களைத்தவிர மற்ற அனைத்தும் சாலையோர வாகன நிறுத்துமிடங்களே. சாலையோர வாகன நிறுத்துமிடங்களைப் பிடிப்பதில் உள்ள பிரச்சினைகளை வாகனமோட்டுவோரே அறிந்திருப்பார்கள். சரமாரியாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்கையில் அவ்விடங்களில் நிதானமாய் வாகனத்தை நிறுத்துவதென்பது மிக நுட்பமான காரியம்.
This story is from the December 01, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 01, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இளையர்களுக்கான ‘மனித நூலகம்
வெளியுறவு விவகாரம், ஆசிரியர், மருத்துவம், தற்காப்பு, தொற்றுத் தடுப்பு, தகவல் தொடர்பு, அரசு நீதிமன்றங்கள், சிறைச் சேவை என அரசாங்கப் பணிகளில் சிறந்து விளங்கும் ஒன்பது பேச்சாளர்கள், ஜனவரி 18ஆம் தேதி (சனிக்கிழமை) ‘மனித நூலகம்' எனும் நிகழ்ச்சியில் நூல்களாகத் திகழ்ந்து தங்களுடைய பணியிட அனுபவங்களையும் அறிவுரைகளையும் சுமார் 40 பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தனர்.
‘மாடலிங்’, ‘சினிமா’ இரண்டும் வெவ்வேறு உலகங்கள்: ரேச்சல்
பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் பிரபல மாடல் அழகியான வின்சு ரேச்சல்.
மத்திய அரசு நிதி தராததால்தான் கடன் சுமை: தங்கம் தென்னரசு
ஆனால், மெட்ரோ போன்ற மேம்பாட்டுத் நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் மட்டுமே தமிழக அரசுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது.
திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், ஞாயிற்றுக்கிழமை முதல் அமைச்சரும் திமுக வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்.
தூறலுக்கிடையே துள்ளல், இனங்களுக்கிடையே பொங்கல்
வானம்பாடிகளின் மக்களிசை, காலையில் மக்களை வரவேற்ற மாடுகள், நவதானியங்கள் இலிருந்து பானையில் முளைத்து நிமிர்ந்து நின்ற முளைப்பாரி, உயர்ந்த கும்பம், 'பாடும் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி இணைய நிகழ்ச்சி நெறியாளர் ஜி டி மணியின் பொங்கல்சார் தகவல்கள் என புக் கிட் பாஞ்சாங் வட்டாரத்தையே குதூகலமாக மாற்றியது, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) காலை நடந்த பொங்கல் கொண்டாட்டம்.
தென்கொரிய நீதிமன்ற கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்த யூன் ஆதரவாளர்கள்
தென்கொரியாவில் அரசியல் குற்றம் சுமத்தப்பட்டு தற்காலிகமாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிபர் யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர், ஜனவரி 19ஆம் தேதி, நீதிமன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைவது நேரலையில் காட்டப்பட்டுள்ளது.
துணைப்பாட வகுப்புகளுக்கு $1.8 பி. செலவிட்ட குடும்பங்கள்
சிங்கப்பூரிலுள்ள குடும்பங்கள் பிள்ளைகளின் துணைப்பாட வகுப்புகளுக்கு 2023ஆம் ஆண்டில் $1.8 பில்லியனைச் செலவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
‘வட்டார ஒருங்கிணைப்பை ஆசியான் வலுப்படுத்த வேண்டும்*
ஆசியான், வட்டார ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தி, அதன் போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
குடும்பங்களின் கல்விச் செலவு கூடியதற்கு பாலர் கல்விச் செலவு அதிகரிப்பு காரணம்
சிங்கப்பூரில் பிள்ளைகளின் பாலர் கல்விக்குக் குடும்பங்கள் கூடுதலாகச் செலவிடுவது தெரியவந்துள்ளது.
மணல் திருட்டை தடுக்காத ஆட்சியர் மீது வழக்கு
சென்னை: ஆற்றுப்படுகையில் நடக்கும் மணல் திருட்டைத் தடுக்கும் கவில்லை என்றால் ஆட்சியர் மீது அவமதிப்பு வழக்குத் தொடர்வதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.