எனினும் திரையில் தோன்றும் கதாபாத்திரங்களின் தன்மை ஏற்கக்கூடிய வகையில் இருப்பது அவர்களுக்கு மிக அவசியம்.
காதல் நிறைவேறாமல் போனவர்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காகவும் பழிவாங்குவதற்காகவும் மறுபிறவி எடுப்பவர்கள்தான் இந்த வகைப் படங்களில் பெரும்பாலும் முக்கியக் கதாபாத்திரங்களாக இருப்பார்கள்.
இத்தகைய படங்கள் வசூலிலும் சாதிக்கக்கூடியவை. அவ்வாறு சாதித்த பத்து படங்களின் பட்டியல் இது.
‘ஏக் பஹேலி லீலா’
இது ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.28 கோடி வசூலை அள்ளிய இந்திப் படம்.
300 ஆண்டுகளுக்கு முன்பு இளம் பெண் லீலா காதல் வயப்படுகிறாள். காதலர்கள் கொல்லப்பட, காதல் முழுமை அடையாமல் இருக்கிறது. இதையடுத்து இருவரும் 300 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிறவி எடுப்பதும் அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களும்தான் கதை.
2015ஆம் வருடம் வெளியான இப்படத்தை பாபிகான் இயக்கி இருந்தார். இதன் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியான வேளையில், யூடியூப்பில் அதிகமான பார்வைகளை அள்ளிய இந்திப் படத்தின் தொகுப்பு என்ற பெருமையைப் பெற்றது.
‘கல்கி 2898 ஏடி’
நடிகர்கள் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் என முன்னணிக் கலைஞர்கள் பங்கேற்ற படம் இது.
பவுண்டி ஹண்டர் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரபாஸ். அவர் மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த கர்ணனின் மறுபிறவி என்று தெரியும்போது அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளாகிறார்கள்.
ரூ.600 கோடி செலவில் உருவாகி, ரு.1,100 கோடியைக் குவித்த இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார்.
‘அருந்ததி’
ரூ.13.5 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.70 கோடியை அள்ளியது ‘அருந்ததி’ தெலுங்குப் படம். இதன் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.
துணிச்சலான ராணி ஒரு மந்திரவாதியுடன் மோதி, அவனை வீழ்த்துகிறாள். அந்த ராணியின் சந்ததியினரை வேட்டையாடுவதற்காக மூன்று தலைமுறைகள் கழித்து வருகிறான் அந்த மந்திரவாதி.
This story is from the December 25, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 25, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
துபாய் கார் பந்தயப் போட்டி: அஜித் திடீர் விலகல்
பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்து, உடல்நலன், தனது அணியின் நலனைக் கருத்தில் கொண்டு, துபாய் கார் பந்தயப் போட்டியில் இருந்து விலகு வதாக நடிகர் அஜித் அறிவித் துள்ளார்.
மதுரைத் தமிழில் பேசி நடிக்க விரும்பும் மிருணாளினி
பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை சென்றுள்ளார் நடிகை மிருணாளினி ரவி.
என்னைத் திரையில் பார்த்து அம்மா அழுதுவிட்டார்: ஆகாஷ்
“என்னையும் அண்ணன் அதர்வாவையும் எப்படியாவது திரையுலகுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். அது இப்போது நிறைவேறியுள்ளது.
தன்னம்பிக்கை, சுயமரியாதை ஏற்றம் தரும்: நயன்தாரா
தன்னம்பிக்கையும் சுயமரி யாதையும் இருந்தால் வாழ்க்கை யில் நிச்சயம் முன்னேற முடியும் என்கிறார் நயன்தாரா (படம்).
மகன் வீசிய பந்தில் பறந்த சிக்சர்; பாய்ந்து பிடித்தார் தந்தை
விளையாட்டில் அவ்வப்போது எதிர்பாராத வகையில் புதுமைகள் நிகழ்வதுண்டு.
ஒய்யார பாணியில் ‘வீகன்’ சேலைகள்
பட்டு, பருத்திச் சேலைகள் பெரும்பாலானவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; விரும்பியும் அணிந்திருக்கிறோம்.
மலேசிய மாநிலங்களில் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு கனமழை: வானிலை மையம்
மலேசியாவின் சில மாநிலங்களில் புதன்கிழமை (ஜனவரி 15) தொடங்கி, மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று அந்நாட்டின் வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.
எந்தவோர் ஆவணத்தையும் அரசு மறைக்கவில்லை: அன்வார்
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் தொடர்பான பிரச்சினை
உ.பி. வளர்ச்சிக்கு அளிக்கப்படும் தமிழக வரிப்பணம்: அமைச்சர்
தமிழ்நாட்டில் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரிப் பணத்தில் 71 விழுக்காட்டை எடுத்துக்கொண்டு 29 விழுக் காட்டு தொகையை மட்டுமே தமிழ்நாட்டு மேம்பாட்டுக்கு மத்திய அரசு கொடுக்கிறது.
'இன்பம் பொங்கும் தமிழ்நாடு' என வாசலில் கோலமிடுங்கள்: தமிழக முதல்வர் ஸ்டாலின்
‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வோர் இல்லத்தின் வாசலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம், தமிழ்த் தாயைப் போற்றிடுவோம், மகிழ்ச்சிப் பெருவிழாவாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.