1,078 காப்பிக்கடைகளில் உள்ள 1,852 கழிவறைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவை கழிவறைச் சுத்தம் குறித்த குறியீட்டில் (100 என்றால் ஆக சுத்தமானது, 0 என்றால் ஆக அசுத்தமானது) சராசரியாக 46.26 புள்ளிகள் பெற்றன. இது, 2023ல் பெற்ற 46.84 புள்ளிகளைவிட சற்றுக் குறைவு.
2016 முதல் எட்டு ஆண்டுகளாக மோசமான நிலையிலிருக்கும் காப்பிக்கடைக் கழிவறைகள். மாறாக, உணவங்காடி நிலையக் கழிவறைகள் இவ்வாண்டு சுத்தத்தில் முன்னேற்றம் கண்டுள்ளன. - படம்: சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம்
2016 முதல் 2024 வரை, காப்பிக்கடைக் கழிவறைச் சுத்தத்தில் புள்ளிவிவரப்படி பொதுவாக பேரளவில் மாற்றம் இல்லை என ஆய்வு கண்டறிந்தது.
காப்பிக்கடைகளைவிட உணவங்காடி நிலையக் கழிவறைகள் சுத்தமாக இருந்துள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 253 உணவங்காடி நிலையக் கழிவறைகள் சராசரியாக 66.28 புள்ளிகள் பெற்றன. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் (65.6 புள்ளிகள்) இது சற்று முன்னேற்றம்.
2024 ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை, பொதுக் கழிவறைச் சுத்த விதிமீறல்களால் தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் 1,200க்கும் மேற்பட்ட அமலாக்க நடவடிக்கைகளை எடுத்தன.
This story is from the December 27, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 27, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வியட்னாமிடம் 2-0 கோல் கணக்கில் சிங்கப்பூர் தோல்வி
ஆசியான் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதி முதல் ஆட்டத்தில் வியட்னாமிடம் 2-0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோல்வியுற்றது.
நீடிக்கும் 'புஷ்பா 2' படத்தின் வசூல் சாதனை
புஷ்பா 2’ திரைப்படம் வெளியீடு கண்ட 21 நாள்களில், ரூ.1,700 கோடி வசூல் கண்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
அன்பானவன், கோபமானவன் இந்த ‘வீர தீர சூரன்'
விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ளது ‘வீர தீர சூரன்’ திரைப்படம். அருண் குமார் இயக்கியுள்ளார். ஒட்டி வெட்டப்பட்ட தலைமுடி, பெரிய தாடி, வேட்டி சட்டை, மளிகைக் கடை பணியாளர், கையில் துப்பாக்கி எனத் தலைப்புக்கு ஏற்ப திரையில் அதிரடியாக வலம் வருகிறாராம் விக்ரம்.
தென்கொரிய இடைக்கால அதிபருக்குச் சிக்கல்: பதவிநீக்கத் தீர்மானம் வெற்றி
தென்கொரியாவின் இடைக்கால அதிபர் ஹான் டக்-சூவுக்கு எதிராக பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
‘வீட்டில் விசேஷம்' அல்ல, வீடே விசேஷம்தான்!
வீட்டில் சுபகாரியங்கள் நடக்கவிருந்தால் ‘வீட்ல விசேஷங்க’ என்பார்கள். வசிப்பது வாடகை வீடா? சொந்த வீடா? என்பது இங்கே முக்கியமில்லை.
நார்வே பேருந்து விபத்தில் மூவர் உயிரிழப்பு
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தோர் பயணம் செய்ததாகத் தகவல்
சிங்கப்பூருக்குக் கல்விச் சுற்றுலா வந்த 42 தமிழக மாணவர்கள்
தமிழகப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட வெவ்வேறு மன்றப் போட்டிகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற 42 மாணவர்களும் நான்கு கல்வித்துறை அதிகாரிகளும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதிவரை சிங்கப்பூருக்குக் கல்விச் சுற்றுலா வந்திருந்தனர்.
மன்மோகன் சிங் மறைவு: இந்தியாவில் ஏழு நாள் துக்கம்
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங், உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (டிசம்பர் 26) இரவு காலமானார். அவருக்கு வயது 92.
2025 பிப்ரவரி 18ல் வரவுசெலவுத் திட்ட அறிக்கை
பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங், 2025 நிதியாண்டுக்கான சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை 2025 பிப்ரவரி 18ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் வெளியிடுவார்.
40 மி. கொள்கலன்களை சிங்கப்பூர் கையாண்டது
சிங்கப்பூரில் ஆகப்பெரிய அளவில் துறைமுகச் செயல்பாடுகளை கவனிக்கும் பிஎஸ்ஏ (PSA) இவ்வாண்டு மட்டும் 40 மில்லியனுக்கும் அதிகமான கொள்கலன்களைக் கையாண்டுள்ளது.