தாய்லாந்திலிருந்து தென் கொரியாவுக்கு 181 பேரை ஏற்றிச் சென்ற ஜேஜு ஏர் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 179 பேர் மாண்டுவிட்டனர்.
தென்கொரியாவின் முவான் (Muan) அனைத்துலக விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) நேர்ந்த விபத்தில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தென்கொரியாவின் இடைக் கால அதிபர் சோய் சுங் மொக் ஜனவரி 4ஆம் தேதி வரை 7 ஏழு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
உயிர் தப்பிய இருவரும் விமான ஊழியர்கள். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக உள்ளூர் பொது மருத்துவ நிலையத்தில் தலைவர் தெரிவித்துள்ளார்.
பறவை ஒன்று மோதியதும் மோசமான பருவநிலையும் விபத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டதாக ஏஎஃப்பி செய்தி தெரிவித்தது. விமானம் மோதிய வேகத்தில், பயணிகள் தூக்கி வீசப்பட்டனர் விமானம் முற்றாகச் சிதைந்தது என்று தீயணைப்புப் படையினர் குறிப்பிட்டனர்.
விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று சுவர் மீது மோதி தீப்பற்றுவதற்கு முன்னர் அதன் இயந்திரங்களிலிருந்து புகை கிளம்பியதைக் காணொளிக் காட்சிகள் காட்டின.
This story is from the December 30, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 30, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வட இந்தியாவில் கடும் பனி; விமானச் சேவைகள் பாதிப்பு
வட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இரண்டாவது நாளாக அடர்ந்த பனி மூட்டம் நிலவியது. இதனால் டெல்லியில் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
சிறைக் கைதிகள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்ததில் கோடிக்கணக்கில் மோசடி
சிறைக் கைதிகள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்வதில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளதாக வெளியான தகவல் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
உதவியாளரை ஒருமையில் திட்டிய தமிழக அமைச்சர்
தனது உதவியாளரைப் பார்த்து, அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் ஒருமையில் திட்டிப்பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனவைக் கருவாக்கி உருவாக்கிய விந்தை
திருமணமாகி ஏழாண்டு காலமாக திரு மெல்விந்தர் சிங்குக்கும், திருமதி ஏஞ்சலின் ஹெர்மனுக்கும் மகப்பேறு என்பது கனவாகவே இருந்தது. எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை.
ஃபேரர் பார்க் விளையாட்டு மையம்: நிழலாடும் நினைவுகள்
கடந்த 1900களில் தொடங்கி பல ஆண்டுகளாக விளையாட்டுகளின் மையமாகத் திகழ்ந்த ஃபேரர் பார்க்கின் கடந்தகாலத் தொன்மை, நிகழ்கால முன்னெடுப்புகள், எதிர்காலத்தில் அங்கு அமையவுள்ள விளையாட்டு மையத்தின் முக்கியத்துவம் ஆகியவை குறித்துப் பகிர்ந்த ‘ஃபேரர் பார்க்கின் விளையாட்டு மரபுடைமைக் கொண்டாட்டம்’ பலரையும் ஒன்றிணைத்தது.
காயமடையும் வெளிநாட்டு ஊழியர்களின் சொந்த வீடுவரை சென்று பேருதவி
சிங்கப்பூரில் வேலை செய்யும் போது காயமடையும், உடல்நிலை பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களை பத்திரமாக அவர்களின் சொந்த நாட்டிலுள்ள வீட்டில் கொண்டுபோய்ச் சேர்க்கும் சேவையில் சிங்கப்பூர் செஞ்சிலு வைச் சங்கம் ஈடுபட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் அறுவர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் சனிக்கிழமை (ஜனவரி 4) காலை பட்டாசு ஆலை ஒன்றில் நேர்ந்த வெடிவிபத்தில் அறுவர் மாண்டுபோயினர்.
நம் வாழ்க்கையைத் திசைதிருப்பப்போகும் 2025
வாழ்க்கையைப் புரட்டிப் போடும் மாற்றங்கள் அசுர வேகத்தில் நடப்பதில்லை.
போலித் திருமணங்கள் 2024ல் சற்று கூடின
புக்கிட் பாத்தோக்கில் வசிக்கும் ஆடவர் ஒருவர், வியட்னாமிய பெண்ணைத் திருமணம் செய்து பல ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருவதாக திருமண ஆவணங்கள் காட்டுகின்றன.