CATEGORIES
Categories
விடாமுயற்சிக்கு கிடைத்த அழகி கிரீடம்
வி.எல்.சி.சி ஃபெமினா மிஸ் இந்தியா 2020 அழ கிப் போட்டி பிப்ரவரி 2021ல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாயின. அதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மானசி வாரணாசி 2020 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்று, 2021 உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார் பாக பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிகா ஷியோகாண்ட் மிஸ் கிராண்ட் இந்தியா 2020 பட்டத்தை வென்றார். இதற்கிடையே மிஸ் கிராண்ட் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மான்யா சிங், சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வருகிறார்.
பாகிஸ்தான் பெண்களின் நம்பிக்கை முகம்
இவரின் ஓவியங்களில் பெண்களே பிரதானம். உங்கள் சுவர்கள் வண்ணங்களை உடுத்தட்டும்' ( (Muniba's Canvas Let your wall wear colors) என்கிற அறிவிப்புடன் இணையதளத்தில் இவரின் ஓவியங்கள் விற்பனையில் சாதனை படைக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பனங்கிழங்கு!
கற்பக விருட்சம் என்று போற்றப்படும் ஒரே மரம் இந்த பனைமரம்தான். நமது நாட்டில் அழிந்துகொண்டிருக்கும் மர வகைகளில் இந்த பனைமரம் முதலிடத்தில் உள்ளது. இந்த பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய நுங்கு, பத நீர், கிழங்கு மற்றும் பழம் போன்றவை அதிக சுவையுடன் மனிதர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயல்படக்கூடியது.
தரமான உணவு கொடுத்தால் கௌரவம் பார்க்க மாட்டாங்க!
ரோட்டுக்கடைகள் தெருக்குத் தெரு பல உள்ளன. ஆனால் அதில் ஒரு சில உணவகங்கள் தான் மறுபடி மறுபடி சென்று சுவைக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்.
தடை அதை உடை
நான் நர்ஸிங் இரண்டாம் ஆண்டு படித்தபோது நடந்த சம்பவம் இது.
சைபர் கிரைம் - ஒரு அலர்ட் ரிப்போர்ட்!
கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் வடிவத்தில் பணம். உண்மையான நாணயம் அல்லது மசோதா இல்லை என்பதை இது குறிக்கிறது, இவை அனைத்தும் ஆன்லைனில் உள்ளன. ஒரு வங்கி இல்லாமல், ஒரு கிரிப்டோ நாணயத்தை ஆன்லைனில் யாருக்கும் அனுப்பலாம்.
கிச்சன் டிப்ஸ்
பொரியல் செய்யும்போது உப்பு அல்லது காரம் அதிகமாகிவிட்டால், சிறிதுரஸ்க் பொடி அல்லது வாட்டிய பிரட்டை' உடைத்து தூவி கிளறினால், சரியாகிவிடுவதுடன், சுவையும் கூடும்.
சருமத்தில் முகம் பார்க்கலாம்!
சருமம்தான் ஒருவரின் வயதைக் காட்டும் கண்ணாடி என்பார்கள். சிலருக்கு சிறிய வயதிலேயே முகம் முதிர்ச்சியாகத் தெரியும். ஒரு சிலர் வயதானாலும் பார்க்க இளமையாக இருப்பார்கள். சில ரின் முகத்தில் ஒரு விதமான பளபளப்பு இருக்கும். சிலருக்கு முகம் முழுக்கப் பருவாக இருக்கும். ஒரு சிலருக்கோ எண்ணெய் வழியும். இப்படி பலவகைப்பட்டவர்களும் தங்களின் சருமத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை அளிக்கிறார் அழகுக்கலை நிபுணர் மீனா.
செல்போன் போதையா? அடிமையா?
கொரோனா இருக்கா இல்லையா என்று புரியவில்லை. ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கும் என்று தெரியவில்லை.
கற்பித்தல் என்னும் கலை
பிள்ளைகள் என்னும் குழந்தைகள் அந்தந்த வயதில் குறும்புகளைச் செய்வதுதான் இயல்பு.
உள்ளிருந்து தாக்கும் சையாட்டிகா... வெளியிருந்து காக்கும் இயன்முறை மருத்துவம்!
நாற்பது வயது கடந்த தனகோபால் என்பவர் பதினைந்து வருடங்களாக கார் ஓட்டுனராக இருப்பவர். அவருக்கு பின்னங்கால் முழுக்க வலி எடுக்கிறது, சிலநேரம் கால் மறுத்துப்போகிறது. இது இல்லாமல் முதுகு வலியும் இருக்கிறது. அவருக்கு இருக்கும் பிரச்னைகள் அவருக்கான தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. நம்மில் பலர் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொண்டிருப்பர். சிலர் இப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பர்.
ஐ நெவர் கிரை
தன் தந்தையின் மரணத்திற்குப் பின் அவர் யாரென புரிந்துகொள்ளும் ஒரு 17 வயது பெண்ணின் தேடல் பயணமே 'ஐ நெவர் கிரை'.
இதயத்திற்கு இதமான கொத்தவரை!
கொத்தவரங்காய் பீன்ஸ் வகையை சேர்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்று குறிப்பிடுவர். இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது.
ஆளுமைப் பெண்கள்!
விஞ்ஞானி சுபத்ரா
ஆர்கானிக் அப்பளம் தயாரிப்பு!
அருமையான வருமான வாய்ப்பு..!
Theatre for Change இது குரலற்றவர்களுக்கான மேடை! சுஜாதா பாலகிருஷ்ணன்
பெங்களூரில் வசித்து வரும், 164 வயதாகும் சுஜாதா பால கிருஷ்ணன், ஆசிரியர், உளவியல் ஆலோ சகர், நாடக பயிற்சியாளர், நடிகர் எனப் பன்முக திறமைகள் கொண்ட பல்துறை நிபுணர். தனியார் பள்ளிகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறு ஆசிரியராகவும், ஆலோசகராகவும் பணியாற்றிய பின், சுஜாதா ஐம்பது வயதைக் கடந்திருந்த நிலையில் தன் நீண்ட நாள் ஆசையான நாடக நடிகையாகும் கனவை நிறைவேற்ற முடிவு செய்தார்.
வெற்றிலையின் மகிமை
வெற்றிலை சாறுடன் பூண்டு சாறு கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வரத் தேமல் மறையும்.
வாழைப்பழத்தோலை தூக்கி எறியாதீங்க
வாழைப்பழம் எல்லோருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத்தின் தோலின் பலன்களை நாம் தெரிந்துகொண்டால் அதை தூர வீசி எறிய மாட்டோம்.
முளைக்கட்டிய தானியங்களும் மருத்துவ பயன்களும்
ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிடாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொள்வதை வழக்கமாக கொள்வது அவசியம். அவ்வாறு உட்கொள்ளும் போது ஏற்படும் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மின் எந்திரங்கள் கவனிக்க!
• குளிப்பதற்குச் சரியாக பதினைந்து, இருபது நிமிடங்களுக்கு முன்னதாக 'கெய்ஸரை' ஆன் செய்வதே சரியான முறை. சில மணி நேரம் முன்னால் 'ஆன்' செய்தால் மின்சாரச் செலவு கூடும். கெய்ஸரில் இருக்கும் 'தெர்மோஸ்டாட் பழுதாகிவிடும்.
முரண்பாடான உணவுகள்!
பூமியில் ஒவ்வொரு மனிதனும் நீண்டகாலமாகவும், ஆரோக்கியத்துடனும் வாழவே விரும்புகிறான். அதில் அவன் தினசரி உண்ணும் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
விரும்பிய தொழிலில் ஈடுபட்டால் வாழ்க்கை சொர்க்கமாகும்!
"பெண்கள் வீட்டை விட்டு வெளியில் போகக் கூடாது என்று கட்டுப்பாடுடைய குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்லாமல் அதே கட்டுப்பாடுடைய குடும்பத்தின் மருமகளும் நான். குடும்பம், பசங்கன்னு பிசியாகவே இருந்தேன். பசங்க படிப்பிற்காக வெளியூர் சென்ற பிறகு என்ன செய்வதுன்னு தெரியல.
பவள மகிமை
பவள மல்லி, பவழமல்லி, பாரிஜாதம், நைட் ஜாஸ்மின் என்று பல பெயர்களில் குறிப்பிடும் இது குறு மரவகையைச் சேர்ந்தது.
வெளித்தெரியா வேர்கள்
2018ஆம் ஆண்டு, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,500 கோடி பண மோசடியைப் பற்றி குறிப்பிடும்போது, அதன் நிறுவனரான சுனில் மேத்தா, “வங்கியினுள் இந்த மோசடி பல ஆண்டுகளாக ஒரு புற்றுநோயைப் போல பரவியுள்ளது என்பதை அறிகிறோம். அந்தப் புற்றினை இப்போது களையெடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்று அறிக்கை விட, "புற்றுநோய் என்பது கொடிய நோய் என்றாலும், அதனை ஒரு குற்ற உணர்வுடன், நம்பிக்கையின்மையுடன், அச்சத்துடன் பார்க்கக்கூடாது என்பதை ஒவ்வொரு நாளும் போதித்து வருகிறேன்.
நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் புதினா
புதினாக்கீரையில் உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது.
குறை கூறுபவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்!
வீட்டில் விசேஷம் என்றால் முதலில் ஆலோசிப்பது உணவு பற்றிதான். அதன் சுவை, தரம், விலை போன்றவைகளின் அடிப்படையில் யார் சிறப்பாக கொடுக்கிறார்கள் என்கிற பட்டியலிட்டு அதில் சிறந்தவர்களை தேர்வு செய்கிறோம். "அப்படி ஒரு பட்டியலே போடத் தேவையில்லை... நாங்கள் இருக்கிறோம்" என்கிறார் 'சென்னை கேட்டரிங்' நிறுவனர் புண்ணியமூர்த்தி.
ஏமாத்தினால் அது நிலைக்காது!
சென்னை ஆலந்தூர் -மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் வழி. மாலை ஐந்து மணிக்கு அந்தவழியில் கடந்து போவது கொஞ்சம் சிரமம் தான். வரிசையாக இரண்டு சக்கர வாகனங்கள் அங்கு நின்று கொண்டு இருக்கும். காரில் பயணம் செய்பவர்களும் ஒரு ஐந்து நிமிடம் அந்தக் கடையின் வாசலில் நின்று விட்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள். நடந்து செல்பவர்களும் ஒரு நிமிடம் அந்தக் கடையில் இருந்து வெளியேறும் வாசனையை முகர்ந்து கொண்டே கடப்பார்கள். இத்தனைக்கும் அந்த உணவகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டோ, ஏசி அறைகள் கொண்டதோ கிடையாது. சாதாரண எல்ஈடி விளக்குகளின் வெளிச்சத்தில், கரி அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்தார் கடையின் உரிமையாளர் அப்துல் காதர். இவர் கடந்த எட்டு வருஷமா இங்கு பார்பெக்யு உணவினை வழங்கி வருகிறார்.
ஒரு வருடம் எங்க வாழ்க்கை இருளால் மூழ்கியது!-அக்கா கடை
பிரியாணி மேல தம் போடுங்க.... சப்பாத்திக்கு மாவு பிசைந்தாச்சா... தக்காளி தொக்கு தயாரா..?' என்று எல்லோரையும் இயக்கிக் கொண்டு இருந்தார் சரண்யா. இவர் தன் கணவருடன் இணைந்து சென்னை அம்பத்தூரில் 'ஓம் ஸ்ரீநிவாசா' என்ற கேட்டரிங்கை நடத்தி வருகிறார்.
கற்பித்தல் என்னும் கலை
கற்பித்தல் என்னும் உன்னதமானப்பணி நமக்குக் கற்றுத்தருவது ஏராளம். புத்தகக் கல்வியை படித்துத் தேர்ந்து, நாம் அவற்றை பிள்ளைகள் மனதில் விதைத்து, 'அறிவு' என்னும் செடியை வளர்க்கச் செய்வதுதான் நம் நோக்கம். அத்தகையப் பணியில் ஈடுபடும்பொழுதுதான், நம் நடைமுறைக்குத் தேவையான வாழ்க்கைக் கல்வியை கற்க ஒரு ஆரம்பமாக அது அமைந்துவிடுகிறது. எத்தனையெத்தனை விதவிதமான சோகக் கதைகள்! துயரங்கள்! பணம் மட்டுமே வாழ்க்கையாகாது என சில அனுபவங்களைக் கண்டோம். பணத்தினாலேயே பிரச்னைகள் ஏற்பட்டு, குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, அதன்மூலம் அக்குடும்பத்தில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளையும் கண்டோம்.
உயிர் காக்கும் உணவுகள்
வெள்ளைப்பூண்டு: குடலில் உள்ள புழுக்களில் இருந்து தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப்பூண்டு பயன்படுத்தப்படுகிறது. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலஸ்ட்ரால் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது. பூண்டு இதயத்திற்கு பலம் சேர்க்கிறது.