CATEGORIES
Categories
குளிர்கால கொண்டாட்டம்
அப்பாடா, இன்னும் ஆறு மாதங்களுக்குப் பனியிலிருந்து தப்பலாம் என்று நினைக்கும் சமயம், அனைத்துவிதமான பண்டிகைக் கொண் டாட்டங்களும், கோடைக் கொண்டாட்டங்களாக மாறி விடும்.
கிச்சன் டிப்ஸ்
கிச்சன் டிப்ஸ்
சத்தமில்லாமல் சாதிக்கும் சக்தி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்திற்கு 14 வயது நிரம்பிய சிறுவன் சில நரிக்குறவர்களுடன் உள்ளே நுழைகிறான்.
சச்சின் சாதனயை முறியடித்த ரசிகை
சின்னஞ்சிறு வயதில் தந்தையுடன் சேர்ந்து சச்சினின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்த இந்திய இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா, ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்திருக்கிறார். குறைந்த வயதில் அரை சதம் அடித்த அந்த வீராங்கனையின் கிரிக்கெட் பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்.
காற்றையும் காசு கொடுத்து வாங்கப் போகிறோம்!
தினம் தினம் வாட்ஸ் ஆப்பில் முப்பது நொடிகளுக்கு நேர்மறையான சிந்தனைகள் கொண்ட ஸ்டேட்டஸ்.
உடை தான் நம்முடைய அடையாளம்
நீங்க அழகா இருக்கீங்க, இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னா போதும், உடனே மனசுல பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சுரும்.
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்!
ஃபென்சிங்கில் பயன்படுத்தும் வாள் உயரமே இருக்கும் திதீக்க்ஷா பாலவெங்கட், தீவிர கவனத்துடன் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். ஏற்கனவே சர்வதேச வாள் சண்டை போட்டியில், இந்தியாவிற்காக வெண்கலம் வென்று சாதித்த இந்த நம்பிக்கை நட்சத்திம், அடுத்ததாக ஒலிம்பிககிலும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில், தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சி எடுக்கிறார். இந்த பெரிய வீராங்கனையின் வயது பத்து.
இசைக் கிராமம்
சீனாவில் மத்திய சிடாங்கவ் கிராமத்தில் உள்ளது டியான்ஜிங் என்ற சின்ன கிராமம். இந்த கிராமத்தை பற்றி பலருக்கு தெரியாது. ஆனால் இந்த கிராமத்தின் ஓர் ஆண்டு வருமானம் 500 கோடி ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா! அதுதான் உண்மை.
அவர் இல்லாத வெறுமையை உணர்கிறேன்!
பிரேமா மாமிஸ் கிச்சன்
LOOK LISTEN LEARN LOVE
ஜந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்ற பழமொழி பலரது வாழ்விலும் பிரதிபலித்திருக்கும். நல்லதோ கெட்டதோ சிறு வயதில் ஏற்படுத்தும் தாக்கம் அது கால காலத்திற்கும் பசு மரத்து ஆணிபோல் மனதில் பதிந்து விடுகிறது. இப்படி இருக்கும் போது குழந்தையில் இருந்தே நேர்மறையான எண்ணம் விதைப்பது அவசியம் என்கிறார் ஐஸ்வர்யா ராஜன் பாபு.
வீடு தேடி வரும் பைக் சர்வீஸ்
ஒருவரின் வீட்டில் சைக்கிளோ அல்லது காரோ போன்ற வாகனங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இரண்டு சக்கர வாகனங்கள் இருக்கும். இப்போது பெண்களும் பைக் போன்ற வாகனங்களை ஓட்ட பழகிவிட்டார்கள். அலுவலகம் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவியர், இல்லத்தரசிகளாக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு இரண்டு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
வாழ்வென்பது பெருங்கனவு!
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...
வாய்ப்பட்டு, நட்டுவாங்கம்... பரதத்தில் அசத்தும் மூன்று தலைமுறை பெண்கள்
'தா தை தை தத் தா கிட தக தாம் தித்தா, தை தத் தை...” என காலில் சலங்கை கட்டியபடி பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார் அந்த நாட்டியத் தாரகை. அவர் ஒன்றும் தற்போது பயிற்சியை தொடங்கவில்லை. மூன்று தலைமுறைகளாக ஆடிவருவது மட்டும் இல்லாமல் பயிற்சியும் அளித்து வருகின்றனர். சென்னை வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம் என 4 கிளைகளில் ஏராளமான சிறுமிகளுக்கு பரதநாட்டியம் கற்பித்து வருகிறார் ஸ்ரீசுதா சுவாமிநாதன்.
மெழுகில் அழகிய பொருட்கள் தயாரிக்கலாம்.... மாதம் ரூ. 10 ஆயிரம் வருமானம் பார்க்கலாம்!
நவீன காலத்தில் நம் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை ஞாபகத்தில் வைத்திருக்க ஒவ்வொரு வகையிலும் அடையாளப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் வீட்டில் அலங்காரப் பொருளாகவோ அல்லது விசேஷங்களில் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை மெழுகில் அழகழகாக வடிவமைத்து வருகிறார் சென்னை காரம்பாக்கத்தில் SS ARTS AND CRAFTS தொழில் பயிற்சிக்கூடம் நடத்திவரும் சுதா செல்வகுமார். இச்சிறுதொழில் குறித்து அவர் நம்மிடம் விளக்கியபோது...
ரத்த சோகையை போக்கும் பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழத்திற்கு கஞ்ஜீர் பழம் என்ற பெயரும் உண்டு. பேரீச்சம்பழத்தில் உயிர்ச்சத்துக்களும், இரும்புச் சத்தும் ஏராளமாக இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூபா டைவிங்
உலகில் மொத்தம் 15 சதவீத மக்கள் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனர். அனைத்து முன்னேறிய நாடுகளும், தங்கள் ஒவ்வொரு கொள்கையிலும் மாற்றுத்திறனாளிகளைக் கருத்தில் கொண்டுதான் திட்டங்கள் அமைக்கின்றன. இந்தியாவில் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இருந்தும், அவர்களுக்காக வசதிகளை ஏற்படுத்தாமல், உண்மையில் அவர்களை டிஸெபிள்டாக வைத்திருப்பது நாம்தான். ஆனால் இந்த நிலையில் தனிப்பட்ட ஒரு அமைப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கும் சாகச அனுபவத்தை வழங்கியுள்ளனர்.
மாயவித்தை செய்யும் வெந்தயம்
பொதுவாக எல்லாருடைய அஞ்சறை பெட்டியிலும் வெந்தயம் இல்லாமல் இருக்காது. இது மசாலா பொருள் மட்டுமல்ல, மூலிகையும் கூட. மேலும் இது மிகவும் பழமையான மருத்துவ செடி என்றும் கூறலாம். வெந்தயம் என்ற மூலிகை நம் உடலுக்கு மட்டுமல்ல நம் அழகிற்கும் பல விதமான மாயவித்தைகளை செய்யக்கூடியது. அது என்ன என்று பார்க்கலாம்...
மருதாணியின் மகத்துவம்
மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து கண்களுக்கு குளிர்ச்சியை வழங்கும்.
மனம் விரும்பியதைச் செய்தால் மன அழுத்தம் வராது!
மன அழுத்தம் - எதிர்பார்ப்புக்கும் உண்மைக்கும் உள்ள இடைவெளி. இடைவெளி அதிகரிக்கும்போது மன அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே எதையும் எதிர்பார்க்காதே; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்” என்கிறார் புத்தர். “கவலைப்படுதல் என்பது நேரத்தை வீணடிப்பது: இது எந்த மாற்றத்தையும் தரப்போவதில்லை: இது மன அழுத்தத்தை மட்டுமே தருகிறது என்கிறார் ராபர்ட் வாஷிங்டன்.
மணப்பெண்ணின் விலை 7 கோடி!
துபாய் வளம் மற்றும் செழிப்புக்கு பெரிய உதாரணமான நாடு. ஆனால் அங்கு சமையல் கலைக்கும் பெரிய அளவில் மதிப்பு கொடுத்து வருகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
பெண்ணின் பாதுகாப்பு அவளின் நம்பிக்கையில் உள்ளது!
"என்னை தெரிந்தவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். தெரிந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். தெரியாதவர்கள் என்ன பேசினாலும் அது அர்த்தமற்றது'” என்று பளிச்சென்று கூறும் பவித்ராவிற்கு அறிமுகம் தேவையில்லை. சன் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான “சன் சிங்கரின்” தொகுப்பாளினியாகவும், “நிலா” தொடரின் நாயகியாகவும் உலா வரும் இந்த நிலா, ஊடகத் துறைக்கு வந்த கதையை பகிர்கிறார்.
பெண்களுக்காக பெண்களே இயக்கும் பிங்க் கால் டாக்சி
சென்னையை அடுத்து ஐ.டி நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரம் கோவை. இந்த நகரம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என 2015ம் ஆண்டு, தேசிய குற்றப்பதிவு ஆவணம் வெளியிட்ட தகவலில் தெரிவித்திருந்தது. ஆனால் சமீபகாலமாக இந்த நகரத்துக்கு அருகேயுள்ள பொள்ளாச்சியில் பெண்களை பலாத்காரம் செய்த சம்பவங்களால் அந்த நகரமே நடுங்கி கிடக்கிறது. பெண்கள் தனியாக இரவு நேரத்தில் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். குறிப்பாக வேலைப் பார்க்கும் பெண்கள்.
பாரா ஜூடோ சாம்பியன்
செப்டம்பர் 25 முதல் 29 வரை லண்டன் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அனைத்து நாடுகளும் பங்கேற்ற இப்போட்டிகளில் பாரா ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா சார்பாக 20 பேர் கலந்து கொண்டதில் தமிழ்நாட்டில் இருந்து மூவர் தேர்வாகி லண்டன் சென்று வந்தனர். அதில் சேலத்தைச் சேர்ந்த சுபாஷினி, திருநெல்வேலியைச் சேர்ந்த மனோகரன் இருவரும் தங்கமும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த முத்துலெட்சுமி வெள்ளிப் பதக்கத்தையும் வென்று இந்தியா திரும்பினர்.
நீரோடு விளையாடு!
சென்னை துறைமுகம் நுழைவு வாயில், மாலை மங்கி, இரவு புலரும் பொழுது. லைஃப் ஜாக்கெட், கிளவுஸ், கண்களில் நீச்சல் பயிற்சியின் போது அணியும் கண்ணாடி மற்றும் ஒரு கிட் பேக்கினை சுமந்தபடி வெளியே வருகிறார் அந்தப் பெண். இவர் வேறு யாரும் இல்லை இந்திய பாய்மரப் படகு மகளிர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் தமிழ்நாடு பாய்மரப் படகு அசோசியேஷனின் பயிற்சியாளருமான ஐஸ்வர்யா நெடுஞ்செழியன். நீர் விளையாட்டான பாய்மரப் படகிற்கும், தனக்குமான உறவின் பின்னணியை விவரிக்கிறார்.
நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்! - முழுமையான வழிகாட்டல்
கடந்த அத்தியாயத்தில் ஒருவர் தொழில்முனைவோர் ஆவதற்காக சுய பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் அதற்கான தகுதிகளை கேள்வி பதில் வடிவத்தில் கொடுத்திருந்தோம். இந்த அத்தியாயத்தில் தொழில்முனைவோருக்கான அடிப்படைத் தகுதிகள் என்னென்ன என்பது பற்றிப் பார்ப்போம்...
நடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்!
தீபாவளிக்கு வெளியான பிகில், கைதி படங்கள் பற்றி பேசப்பட்ட அளவிற்கு, அப்படங்களில் நடித்திருந்த இரு குட்டீஸ்கள் பற்றியும் சேர்த்தே பேசப்பட்டது. பிகில் படத்தில் நடித்திருந்த ப்ரஜுனா சாரா, விஜய்க்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது நடனத்தினாலும், கைதி படத்தில் நடித்திருந்த மோனிகா, தனது அளப்பரிய நடிப்பினாலும் அனைவரையும் ஈர்த்தனர்.
தோழியருக்கான நட்சத்திர பலன்கள்
(நவம்பர் 16 முதல் 30 வரை )
தேங்காயின் மகத்துவம்
நம்முடைய அன்றாட சமையலில் தேங்காய் மிகவும் பிரதான இடம் வகித்து வருகிறது. இட்லிக்கு சட்னியாக இருந்தாலும், பொரியலுக்கு அலங்கரிக்க, குருமா குழும்பு, காரக்குழம்பு என பல உணவுகளில் தேங்காய் சேர்க்காமல் இருக்க மாட்டோம்.
கோலியை பின்னுக்கு தள்ளிய ஸ்மிருதி!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2000 ரன்கள் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கூந்தலை காக்க...
பெண்களின் அழகுக்கு கூந்தல்தான் ழூலதனம். நல்ல கூந்தல் நல்ல ஆரோக்கியத்துக்கு எடுத்துக்காட்டு.