மணப்பெண்களை தேவதையாக மாற்றும் ஆரிடிசைன்கள்!
Thozhi|1-15, July 2023
தை பிறந்தாலே தொடர்ந்து திருமண முகூர்த்தங்கள்தான்
ஷம்ரிதி
மணப்பெண்களை தேவதையாக மாற்றும் ஆரிடிசைன்கள்!

இதில் மணப்பெண்கள் தங்களின் மேக்கப், ஃபேஷியல்னு பிசியாக இருக்கிறார்களோ இல்லையோ அவர்களுக்காக பிளவுஸ் தைக்கும் டிசைனர்கள் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்து கொண்டு இருப்பார்கள். 365 நாட்களிலும் முகூர்த்த நாள் இருந்தாலும் இல்லை என்றாலும் இவர்களின் தையல் மெஷின் ஓட்டம் மட்டும் ஓயாது. இதற்கு உதாரணமாக இருக்கிறார்கள் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த சகோதரர்களான முகமத் ஷாமில் மற்றும் பாசித் பரீத். இவர்கள் இருவரும் கடந்த 11 வருடங்களுக்கு மேலாக டெய்லரிங் தொழிலில் குறிப்பாக இன்றைய பெண்களின் ஃபேவரைட் ஆரி டிசைன்களில் கொடி கட்டி பறந்து வரும் டிசைனர்களில் ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது.

"புரசையில் 11 வருஷம் முன்பு நாலு பேர் கொண்ட சின்ன டெய்லரிங் கடைதான் ஆரம்பிச்சோம். இப்ப எங்களிடம் 45 பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள். குறிப்பாக ஆரி வேலைப்பாட்டிற்கு என தனி குழுவே இருக்கு’’ என்று பேசத் துவங்குகிறார் முகமத் ஷாமில். இவர் இன்றைய ஃபேஷன் மற்றும் ஆரி டிசைன் மேல் மணப்பெண்களுக்கு ஏற்பட்ட மோகம் குறித்து விளக்குகிறார்.

‘‘என்னுடைய அம்மா வீட்டில் தைப்பாங்க. அதைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அதனால் எனக்கு தையல் மேல் தனிப்பட்ட ஈடுபாடு ஏற்பட்டது. இதற்காக நான் முறையா பயிற்சி எல்லாம் போகல. ஒரு தையல் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்குதான் கொஞ்சம் கொஞ்சமாக தையல் கலையை கற்றுக்கொண்டேன். அங்கு ஓரளவுக்கு தையல் குறித்த பயிற்சி எடுத்துக் ெகாண்ட பிறகு நானே சொந்தமா ஒரு தையல் கடையை ஆரம்பிச்சேன். சின்ன கடைதான். சாதாரண பிளவுஸ், சுடிதார் தைக்க ஆரம்பிச்சு, இப்ப பிரைடல் பிளவுஸ், லெஹங்கா, ஆரி வேலைப்பாடுன்னு எல்லா விதமான உடைகளும் தைத்து தருகிறோம்’’ என்றவர் லெஹங்கா, பிரைடல் உடைகள், ஆரி வேலைப்பாடுகளுக்கு என பிரத்யேகமான ஷோரூம் ஒன்றை திறந்துள்ளார்.

This story is from the 1-15, July 2023 edition of Thozhi.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the 1-15, July 2023 edition of Thozhi.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM THOZHIView All
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
Thozhi

குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!

உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.

time-read
3 mins  |
16-31, Dec 2024
வரப்போகிறது புதிய வைரஸ்!
Thozhi

வரப்போகிறது புதிய வைரஸ்!

உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.

time-read
1 min  |
16-31, Dec 2024
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
Thozhi

கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!

ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.

time-read
2 mins  |
16-31, Dec 2024
குளிர் காலமும் வைட்டமின்களும்!
Thozhi

குளிர் காலமும் வைட்டமின்களும்!

எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.

time-read
1 min  |
16-31, Dec 2024
Sparkling Christmas....
Thozhi

Sparkling Christmas....

கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.

time-read
2 mins  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
Thozhi

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
Thozhi

நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.

time-read
2 mins  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கேக்!
Thozhi

கிறிஸ்துமஸ் கேக்!

கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
Thozhi

நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!

வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.

time-read
2 mins  |
16-31, Dec 2024
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
Thozhi

உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்

உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.

time-read
3 mins  |
16-31, Dec 2024