தான் உண்டு தன்னோட வாழ்க்கை உண்டு என்று இருக்கும் மக்கள் மத்தியில் தன்னை ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுத்த மக்களுக்காக தன்னால் முடிந்த உதவியினை செய்து வருகிறார் புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன். திருவாரூரில் அமைந்துள்ளது புதுக்குடி கிராமம். இங்குள்ள மக்களின் ஏழ்மை நிலையை கண்டு அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தன் சொந்த செலவில் கட்டுவது மட்டுமில்லாது, அவர்களின் குழந்தைகளின் படிப்பிற்கு தங்களால் முடிந்த உதவிகளை தன் கணவருடன் இணைந்து செய்து வருகிறார்.
"என்னதான் அரசியல் குடும்பத்திலிருந்து நான் வந்தாலும், எனக்கும் அரசியல் புதுசாகத் தான் இருந்தது. உள்ளே வந்த பிறகு அரசியல் பற்றி கத்துக்கவே ஒரு வருடம் தேவைப்பட்டது” என பேச ஆரம்பித்தார் திவ்யா கணேசன்.
"என் அப்பா எங்க கிராமத்தின் ஊராட்சித் தலைவராக இருந்தார். அவர் கிராம மக்களுக்கு செய்யும் சேவையை பார்த்துதான் நான் வளர்ந்தேன். அதனால் எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது. அவரிடம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆனால் என்னுடைய மனதில் எதிர்காலத்தில் அப்பா வைப் போல் நானும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பொறியியல் பட்டப் படிப்பு முடிச்சிட்டு சென்னையில் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தேன். வீட்டில் திருமணம் பேச்சு வந்ததும், வேலையை ராஜினாமா செய்திட்டு கிராமத்துக்கே வந்துட்டேன். அந்த சமயத்தில்தான், ஊராட்சித் தலைவர் தேர்தலில் பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டது. அதில் எங்களுடைய புதுக்குடி ஊராட்சியும் ஒன்று. அப்பாவிற்கு பதில் நாம ஏன் இந்த தேர்தலில் நிற்கக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. என் விருப்பத்தை அப்பாவிடம் தெரிவித்தேன். அவரும் ஆதரவு தர ஊராட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன். எனக்கு மக்கள் கொடுத்த ஆதரவில் எங்க கிராமத்தின் ஊராட்சித் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டேன். 2019ல் இந்த பதவியை ஏற்று இன்று வரை என்னுடைய பயணம் தொடர்ந்து வருகிறது.
This story is from the 16-29, Feb 2024 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 16-29, Feb 2024 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள்!
விளையாட்டில் உச்சபட்ச திருவிழாவான 33வது 'ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஃபிட் & ஃபேஷன் @ யுவர் டோர் ஸ்டெப்
\"மக்குப் பிடித்த மாதிரியான டெய்லர் செட்டாவது அதிர்ஷ்டம். அப்படி அமைந்தாலும் அவரைத் தேடிச் செல்வது சென்னை மாதிரியான பெருநகரங்களில் ரொம்பவே கஷ்டம். இனி அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்.
மகப்பேறியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெண்களுக்கான வரம்!
\"குழந்தை என்னும் வரத்திற்காக இன்றும் பெண்கள் வருகிறார்கள். பல போராட்டங்களை சந்தித்து 14 வருடங்களுக்குப் பிறகுதான் அந்த பாக்கியம் எனக்கே கிடைத்தது\" என்கிறார் நாற்பது வருடமாக மகப்பேறு துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி, பல குடும்பங்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தினை மீட்டுக் கொடுத்து வரும் பிரஷாந்த் மருத்துவ மனைத் தலைவர் மற்றும் மகப்பேறு நிபுணர் டாக்டர் கீதா ஹரிபிரியா.
கதக்கும் ஆடுவேன் காஜலும் தயாரிப்பேன்!
\"ஆரோக்கியமான தரமான பொருட்களை மட்டுமே அளிக்க வேண்டும் என்பதால்தான் நான் இந்தத் தொழிலை துவங்கினேன்\" என்கிறார் இந்தியாவின் வட மாநிலமான சட்டீஸ்கர் இல் வசித்து வரும் நித்யா சுப்ரமணியம்.
தலைமுடி நீளமாக வளர...
பொதுவாக ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது.
மகா சக்தியின் நான்கு வடிவங்கள்!
நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளே அம்பிகை. நான்கு வேதங்களை நான்கு முகமாகக் கொண்ட தேவியை சிதம்பரம் தில்லைக் காளி ஆலயத்தில் காணலாம். மூலப் பரம்பொருள் உலக உயிர்களுக்கு நான்கு வடிவங்களாக அருள் புரிகின்றது.
புற்றுநோயுடன் போராடி வென்ற புன்னகை அரசி
இயற்கை நம் வாழ்விற்கான சந்தோஷங்களையும், சங்கடங்களையும் சேர்த்தே கொடுக்கிறது.
அபாயம் ஏற்படுத்தும் PMDD... (Pre Menstrual Dysphoric Disorder)
மாதந்தோறும் மாதவிலக்கு ஏற்படும் பெண்கள் அது ஏற்படுவதற்கு முன் உடல் மற்றும் மன ரீதியாக சில அவஸ்தைகளை சந்திப்பார்கள்.
ஆரோக்கிய மலர் ரெசிபி
ஒவ்வொரு பூவிற்கும் தனிப்பட்ட நறுமணம் மட்டுமில்லை 'அதற்கென குறிப்பிட்ட மருத்துவ குணங்களும் உள்ளன. பெரும்பாலும் நாம் அதனை அலங்காரப் பொருட்களாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் அது நம்முடைய உடலின் ஆரோக்கியத்தினை காக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
நாய் வளர்ப்பு சிம்பிள் விஷயம்! டாக் டிரெயினர் சத்யா
சமீபத்தில் குழந்தைகளை நாய் கடிக்கும் வீடியோக்கள் வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வைரலாக, அது குறித்த கேள்விகளோடு டாக் டிரெயினராக வலம் வரும் சத்யா வைச் சந்தித்தபோது...