அதேநேரம், தெரியாமல் நடக்கும் விபத்துகளும் அவ்வப்போது நிகழத்தான் செய்கின்றன. அவ்வாறு நிகழும் விபத்துகளில் எந்த மாதிரியான விபத்துகள் குழந்தைகளின் மூளையை பாதிக்கிறது, அதனால் வரும் விளைவுகள் யாவை, அதற்கான இயன்முறை மருத்துவம் என்ன என்பது பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம். வாருங்கள்.
மூளை காயம்...
நம் மூளைதான் நமது மொத்த உடலின் அடிநாதம் என்பதால், அதனை பாதுகாக்க படைக்கப்பட்டதே கடினமான மண்டை ஓடு. இந்த மண்டை ஓட்டையும் மீறி வெகு சில நேரங்களில் மூளையில் அடிபட்டு காயம் ஏற்படலாம். இதனையே மூளை காயம் (Brain Injury) என மருத்துவத்தில் அழைக்கிறோம்.
மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு செயலுக்கான பகுதி என்பதால், நாம் பேசும் பகுதி அடிபட்டால் நம்மால் பேசமுடியாது. சில சூழலில் உயிர் பிரிவது, வாழ்நாள் முழுக்க கண் பார்வை பறிபோவது, சுயநினைவு இல்லாமல் போவது என எது வேண்டுமானாலும் நிகழும் ஆபத்து உள்ளது.
குழந்தைகளின் மூளையும், மண்டை ஓடும்...
கருவாக இருக்கும் போது மண்டை ஓடு நான்கு பகுதிகளாக தனித்தனியே பிரிந்திருக்கும். இவை குழந்தை பிறப்பதற்குள் ஒன்றாக இணைந்து விடும். ஆனால், முழுமையாக இரண்டு இடங்களில் இணைந்திருக்காது. இதுவே நாம் முன் தலையிலும், பின் தலையிலும் காணும் இடைவெளி (உச்சி துடிக்கிறது, உச்சிக்குழி எனச் சொல்வோமே அதுதான்).
எனவே, குழந்தைகளுக்கு முதல் இரண்டு வருடங்களில் மிகவும் மென்மையான மண்டை ஓடுதான் இருக்கும். வளர வளரவே அதன் அடர்த்தி கூடி வரும். அதேபோல கரு உருவாகிய நாள் முதல் குழந்தைகளின் மூளை தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும்.
முதல் ஐந்து வயதிற்குள் அதி தீவிர மூளை வளர்ச்சி நடைபெறும்.
This story is from the 1-15, Dec 2024 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 1-15, Dec 2024 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விவாகரத்து நல்லதா... கெட்டதா?
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விஷயம் டிரெண்டாகி வரும். இந்த வருடம் சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டில் பேசப்படுவது பிரபலங்களின் விவாகரத்தாகத்தான் உள்ளது.
நன்மை தரும் ப்ளாக் டீ
கே மல்லியா சினசிஸ் என்று அழைக்கப் படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்து வது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது.
வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி
பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்' என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும்.
ஒரே கூரையில் ஐந்து அம்சங்கள்!
\"கோவிட் துவங்கும் போதுதான் நான் இதை ஆரம்பிச்சேன். ஒரு ஓட்டலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து திறக்கும் தருவாயில் இருக்கும் போதுதான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. எல்லாம் ஷட்டவுன் சொல்லிட்டாங்க.
குழந்தைகளின் நலம்...குடும்பத்தின் நலம்!
எந்தநாட்டில் குழந்தைகள் பிறந்தாலும் எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒன்று... குழந்தைகளின் உடலும், மூளையும் பிறந்த பின்பும் வளரும் என்பது. அதனால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகிறது.
தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!
பிசினஸ் ஆரம்பிப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதை சக்சஸ்ஃபுல்லாக நடத்துவதுதான் பெரிய விஷயம்.
குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்
சருமத்தில் வறட்சி, பிக்மென்டேஷன் சபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு.
பெருமையான உறவுகள்
உறவுகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் அனுசரணையாக இருந்து குடும்பத்தை, குடும்ப கௌரவத்தை பாதுகாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்து வந்தனர்.
அரங்கநாத சுவாமி கோயில்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் 108 'வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்டு ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது.
இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!
\"ஆப்பிள்\" பழம் உடலைப் பாதுகாக்கிறது, நலமளிக்கிறது, உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷத் தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.