ஆனால் அந்த இருவரது பிரிவு லட்சக் கணக்கானோரின் கவனத்தையும் நேரத்தையும் இழுக்கிறது. இருவர் குறித்து வெவ்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. எது உண்மை என்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பதும் மகிழ்ச்சியாக வாழ்ந்த குடும்பத்தை இணைப்பதும் தான் நமது நோக்கம்.
"இது கடினமான முடிவுதான்... ஆனால் தவிர்க்கமுடியவில்லை. இருவரின் நலன் கருதியும் இருவரை சார்ந்தவர்களின் நலன் கருதியும் இந்த முடிவை எடுக்கிறோம். மனம் ஒத்துப் பிரிகிறோம்" இப்படிப்பட்ட வார்த்தைகளுடன் விவாகரத்து அறிக்கைகள் வருவது தமிழ் சினிமாவில் சகஜமாகிவிட்டது. ஆனாலும் இந்த முறை அப்படி ஒரு அறிக்கை, இப்படி ஒருவரிடமிருந்து வந்தது. பெரும்பாலானவர்களுக்கு அதிர்ச்சியையே தந்தது. ஆம்...ஆறு மாதம் முன்புகூட அனைவரின் கண்படும்படி வாழ்ந்துவந்த ஜெயம் ரவி - ஆர்த்தி ரவி இருவரும் பிரிவதாக, ரவியிடமிருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்தது. இது குறித்து முன்பே சின்னச் சின்ன செய்திகள் வந்தபோதும் அவை அவை வதந்தியாக இருக்குமென்பதே ஜெயம் ரவி -ஆர்த்தி ரவி இருவரையும் அறிந்தவர்கள், ரசிகர்கள் நம்பிக்கையாக இருந்தது.
இந்த அறிவிப்பில் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது... அறிவித்தவர்கள், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வரிகளில் கணவன் -மனைவி இருவரின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டு தனித்தனியே அறிவிப்புகள் வந்தன.
Bu hikaye Nakkheeran dergisinin September 18 - 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Nakkheeran dergisinin September 18 - 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
அதானிக்கு கைதுவாரண்ட் பதற்றத்தில் இந்திய அரசியல்வாதிகள்!
அமெரிக்க நீதிமன்றம் வைத்திருக்கும் ஒரேயொரு குற்றச்சாட்டு, அதானி குழுமம், இந்திய அரசியல்வாதிகள், நான்கு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சிகள் வரை தடுமாற வைத்திருக்கிறது.
“எங்க மகனை மிரட்டி வச்சிருக்காங்க! மீட்க முடியல!”
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி, இரண்டாவது தெருவை சேர்ந்த மாரியப்பன் தமிழ் செல்வி தம்பதியினரின் வீடு, குண்டூசி விழுந்தால் சப்தம் கேட்குமளவிற்கு நிசப்தமாக இருக்கிறது.
மீண்டும் அரசியலில் மையம் கொண்ட ரஜினி!
“ஹலோ தலைவரே, தமிழக அரசியலில் விறுவிறுப்பான காட்சிகளை எல்லாம் பார்க்க முடியுது.\"
இறுதிச்சுற்று! தப்பியோடிய கஸ்தூரிக்கு ஜாமீன் மறுப்பு!
நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர் வேஷத்தில் தப்பமுயன்ற ஓம்கார் பாலாஜி! -அதிரடி கைது!
இந்து மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் அர்ஜூன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜி, ஈஷா அமைப்புக்கு எதிராக நக்கீரன் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் ஆசிரியரை தரக்குறைவாகப் பேசியிருந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார்.
அண்டப்புளுகன் ஐக்கி...
\"அன்று அழைக்காத ஐ.நா.சபையில் கலந்துகொண்டதாக 'டொக்கு' வாங்கியது நித்தியானந்தா டீம். இன்றோ சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய இமேஜை சரிசெய்யும் விதமாக பணம் கொடுத்து அஜர்பைஜானில் நடந்த காலநிலை மாநாட்டில் வாண்ட்டடாக வண்டி ஏறி...
அதிகாரிகளின் சதுரங்க வேட்டை! -முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை முன்னிறுத்தும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக இறங்கியிருக்க, சில முக்கிய அதிகாரிகளோ, இங்கு தொழில் துவங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கோர்த்து காசு பார்க்கத் துவங்கியிருப்பதாகக் கசியும் தகவல்கள், கோட்டை வட்டாரத்தில் புயலைக் கிளப்பத் துவங்கியிருக்கின்றன.
தொடரும் தாதாயிசம்! மன்னார்குடி அவலம்!
மன்னார்குடியில் தேர்தல் பகையால் அ.தி.மு.க. நிர்வாகியை தி.மு.க. கவுன்சிலரின் கணவர் தனது ஆதரவாளர்களோடு சென்று வெட்டிய விவகாரம் பரபரப்பாகிக் கிடக்கிறது.
ஆரம்ப காலத்தில் என்னை நாடிவந்த பதவிகள்! - டைரக்டர்-ரைட்டர் வி.சி. குகநாதன்
பல படங்களையும், சில நாடகங்களையும் எழுதுவதோடு தயாரிப்பிலும் ஓய்வற்று உழைத்துக்கொண்டு, ஏவி.எம். கதை இலாகா விலும் நான் பணியாற்றி வந்த காலத்திலே என் வண்டியை நானே ஓட்டிப்போவதே வழக்கம். கம்பெனி கார்களை என் டிரைவர்கள் ஓட்டுவார்கள். எனது கம்பெனியில் 60 திரைப்படப் பணியாளர்களுக்கு 69, 70, 71, 72-ஆம் ஆண்டுகளில் மாதச் சம்பளம் கொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தேன்.
மாணவிகளுக்கு மது! பாலியல் சீண்டல்! போக்சோவில் ஆசிரியர்!
\"சரக்கு அடிக்குறதில அவதான் எக்ஸ்பர்ட். அப்படியே சாப்பிடுவா அவ மட்டும் என்னவாம்?\" கிண்டலும் கேலியுமாக 9ஆம் வகுப்பு மாணவிகள் பேசிக்கொண்டது பள்ளி வளாகத்தைத் தாண்டி வெளியில் உலாவ, \"மாணவிகளுக்கு மதுவா?\" என உடன்குடி தாலுகாவே களேபரமானது. இதன் தொடர்ச்சியாகக் கட்டாய விடுப்பில் உடற்கல்வி அசிரியர் செல்ல, பெற்றோர்கள் தொடர்ந்து போராடியிருக்கின்றனர். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளித் தாளாளரையும் கைது செய்துள்ளது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்துறை.