சூர்ய மின்சக்தித் திட்ட ஒப்பந்தங்களை மாநில அரசுகளிடமிருந்து பெறுவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு கவுதம் அதானி ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத் அமெரிக்காவில் முதலீடுகளைத் த்னார் என நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப் பட்டதையடுத்து அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் 1,04,000 ஆயிரம் கோடி வரை சரிந்துள்ளது. இந்தியத் தொழிலதிபரான கவுதம் அதானி, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் நியூயார்க் நீதி மன்றம், அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக ஏன் பிடிவாரண்ட் பிறப்பிக்கவேண்டும்?
இதனைத் தெளிவுபடுத்த இன்னும் சில விவகாரங்களைப் பார்க்கவேண்டும்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா. அஸூர் பவர் நிறுவனமும் அதானியின் கிரீன் பவர் நிறுவனமும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்க இந்தியாவின் சோலார் பவர் எனர்ஜி கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தங்களைப் போட்டுள்ளன.
இதில் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனுக்கு, அஸூர் பவர் 4 ஜிகாவாட் மின்சாரமும், அதானி நிறுவனம் 8 ஜிகாவாட்டும் தருவதாக ஒப்பந்தம். ஆனால், இந்த மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்ததால், ஆரம்பத்தில் மாநிலங்கள் எதுவும் இந்த மின்சாரத்தை வாங்க முன்வரவில்லை. ஒப்பந்தம்தான் போட முடியுமே தவிர, வாங்குபவர்களைப் பிடிப்பது உங்கள் பாடு எனத் தெரிவித்துவிட்டது சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன்.
தவிரவும், இத்தனை பெரிய திட்டத்துக்கு நிதி வேண்டுமல்லவா? அதானியின் துணை நிறுவனங்கள் மூலமாக சிண்டிகேட்டட் லோன் மூலமாக 1.35 மில்லியன் டாலர்களைத் திரட்டியது அதானி குழுமம்.
பிறகுதான், மாநில அரசுடன் ஒப்பந்தம் போடும் படலங்கள் அரங்கேறின. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அதிகாரிகளைச் சந்தித்து அவர்களுக்கு கனமான லஞ்சத் தொகை தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சில மாநிலங்கள் மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்தபோதும், இந்த ஒப்பந்தத்தில் ஆர்வம்காட்ட ஆரம்பித்தன. அப்படி முதலில் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட மாநிலம் ஆந்திரா.
Bu hikaye Nakkheeran dergisinin November 27-29, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Nakkheeran dergisinin November 27-29, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மாவலி பதில்கள்
கோயில் குளத்தில் விழும் மழை தீர்த்தமாகிறது; சாலையில் விழும் நீர் அசுத்தமாகிறது... அதுபோல்தான் நாம் சேரும் இடம் பொறுத்தே நமது தரமும்!
மணல் குவாரி முட்டல்-மோதல்!
தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்படாததால் கட்டுமானப் பணிகளும், அதனை நம்பியிருக்கும் லாரி தொழில்களும் முடங்கிக் கிடப்பதால், 'மணல் குவாரிகளை தி.மு.க. அரசு விரைந்து துவக்க வேண்டும்' என்கிற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
மகாராஷ்டிரா எனக்கு! ஜார்கண்ட் உனக்கு!
தயங்கி நிற்பவர்கள் தங்களுக்கு தகுதியான இடத்தை ஒருபோதும் அடைய முடியாது; தயங்காமல் இன்றே தொடங்கு... நல்லதே நடக்கும்!
அதானிக்கு கைதுவாரண்ட் பதற்றத்தில் இந்திய அரசியல்வாதிகள்!
அமெரிக்க நீதிமன்றம் வைத்திருக்கும் ஒரேயொரு குற்றச்சாட்டு, அதானி குழுமம், இந்திய அரசியல்வாதிகள், நான்கு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சிகள் வரை தடுமாற வைத்திருக்கிறது.
“எங்க மகனை மிரட்டி வச்சிருக்காங்க! மீட்க முடியல!”
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி, இரண்டாவது தெருவை சேர்ந்த மாரியப்பன் தமிழ் செல்வி தம்பதியினரின் வீடு, குண்டூசி விழுந்தால் சப்தம் கேட்குமளவிற்கு நிசப்தமாக இருக்கிறது.
மீண்டும் அரசியலில் மையம் கொண்ட ரஜினி!
“ஹலோ தலைவரே, தமிழக அரசியலில் விறுவிறுப்பான காட்சிகளை எல்லாம் பார்க்க முடியுது.\"
இறுதிச்சுற்று! தப்பியோடிய கஸ்தூரிக்கு ஜாமீன் மறுப்பு!
நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர் வேஷத்தில் தப்பமுயன்ற ஓம்கார் பாலாஜி! -அதிரடி கைது!
இந்து மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் அர்ஜூன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜி, ஈஷா அமைப்புக்கு எதிராக நக்கீரன் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் ஆசிரியரை தரக்குறைவாகப் பேசியிருந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார்.
அண்டப்புளுகன் ஐக்கி...
\"அன்று அழைக்காத ஐ.நா.சபையில் கலந்துகொண்டதாக 'டொக்கு' வாங்கியது நித்தியானந்தா டீம். இன்றோ சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய இமேஜை சரிசெய்யும் விதமாக பணம் கொடுத்து அஜர்பைஜானில் நடந்த காலநிலை மாநாட்டில் வாண்ட்டடாக வண்டி ஏறி...
அதிகாரிகளின் சதுரங்க வேட்டை! -முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை முன்னிறுத்தும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக இறங்கியிருக்க, சில முக்கிய அதிகாரிகளோ, இங்கு தொழில் துவங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கோர்த்து காசு பார்க்கத் துவங்கியிருப்பதாகக் கசியும் தகவல்கள், கோட்டை வட்டாரத்தில் புயலைக் கிளப்பத் துவங்கியிருக்கின்றன.