மழைக்காலம் வந்துவிட்டாலே சென்னைவாசிகளுக்கு ஒருவித அச்ச உணர்வு மேலோங்குவது வழக்கம். அந்த அளவுக்கு சிறு மழைக்கே சாலைகளில் வெள்ளம் வழிந்தோடும் காலம் இருந்து வந்தது. இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்காமல் தொடர்ந்து கொண்டே வந்தது. இந்நிலையில், ஆட்சி பொறுப்பேற்ற போது சென்னையில் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.
அதன் எதிரொலியாக சென்னை நகர் முழுவதும் போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல பலன் கிடைத்தது. இந்த நடவடிக்கையை அரசியல் கடந்து பலரும் பாராட்டினர். ஆனால் பெருமழை வந்த போது சென்னை நகரில் தேங்கிய மழைநீர் வெளியேற முடியாமல் தவித்தது.
இதற்கு காரணம், வெள்ள நீர் வெளியேற்றும் பணியில் முக்கிய பங்காற்றக் கூடிய கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் கரை புரண்டோடிய வெள்ளம் தான். இதனால், இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் மூலம் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. ஆறுகளில் தண்ணீர் குறைந்ததும் தேங்கிய மழைநீர் வேகமாக வடிந்தது. எனவே மழைநீர் வடிகால் திட்டம் சென்னை நகருக்கு மிகப் பெரிய பலனை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் சிறுமழை காலங்களை சாதாரணமாக இந்த மழைநீர் வடிகால்கள் சமாளித்து வருகிறது. ஆனால் சில இடங்கள் தாழ்வாக அமைந்துள்ளதால் அங்கிருந்து வெள்ள நீரை வெளியேற்றுவது சவாலானதாக உள்ளது.
இதனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்ட பின்பு, எங்கெல்லாம் மழை காலங்களில் தண்ணீர் தேங்குகிறது என்பது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன்படி, கடந்த ஆண்டு சென்னையில் 320 இடங்கள் தண்ணீர் தேக்கம் உள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அதிக மழைப் பொழிவு இருக்கும்போது இந்த இடங்களில் தண்ணீர் வழிந் தோட 3 நாட்கள் வரையில் ஆவதாகவும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற இடங்களில் மழை பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 04, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 04, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கந்தசஷ்டி 4ம் நாள் திருத்தணி முருகனுக்கு திருவாபரண அலங்காரம்
கந்தசஷ்டி விழாவில் 4ம் நாளான நேற்று திருத்தணி முருகப்பெருமானுக்கு திருவாபரண அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
ஆவடி - சென்ட்ரல் புதிய ரயில் சேவை
சென்னை சென்ட்ரல் இடையே புதிய மின்சார ரயில் சேவை இன்று (6ம் தேதி) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை
சென்னை நுழைவாயிலில் அமைந்துள்ள தாம்பரம் ரயில் நிலையம், முக்கிய போக்குவரத்து முனையமாக உள்ளது. இங்கிருந்து சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
காவலர் குறைதீர் சிறப்பு முகாம் 282 மனுக்கள் மீது நடவடிக்கை
காவலர்களுக்கான குறைதீர் சிறப்பு முகாமில் 282 மனுக்களை பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு சிக்சர் அடிக்கும் டுபாக்கூர்களை பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது - ஐ.லியோனி
ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு சிக்சர் அடிப்பவர்களை பார்த்து திமுக அஞ்சாது என்று திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார்.
வாயு கசிவால் 2வது முறை மாணவிகள் மயக்கம் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நவீன இயந்திரம் மூலம் சோதனை
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 26ம் தேதி, விஷவாயு கசிவால் பல மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இஸ்ரேல் குண்டுமழை காசாவில் 30 பேர் பலி
பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நள்ளிரவில் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 30 பேர் உயிரிழந்தனர்.
விண்வெளியில் தினந்தோறும் 16 சூரிய உதயம், அஸ்தமனத்தை காணும் சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
ரஞ்சி கோப்பை 4வது சுற்று தொடக்கம் காலிறுதி முனைப்பில் தமிழ்நாடு
ரஞ்சி கோப்பை தொடரின் 4வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
துபாயில் அஜித்துக்கு விருந்து தந்த மாதவன்
துபாயில் அஜித்துக்கு தடபுடல் விருந்து கொடுத்திருக்கிறார் நடிகர் மாதவன்.அஜித்தும் மாதவனும் நல்ல நண்பர்கள்.