இந்த குத்தகை காலம் வரும் 2044 ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை உள்ளது. ஆனால் இந்த இடத்திற்கான வாடகை பாக்கியை 1970ம் ஆண்டு முதல் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் செலுத்தவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, 1970ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான வாடகை பாக்கியான ரூ.730 கோடியே 86 லட்சத்தை செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், வாடகை பாக்கியை செலுத்த தவறினால், ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, தமிழக அரசே நிலத்தை எடுத்து கொள்ளலாம் என்றும், அந்த நிலத்தை அரசு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், தமிழக அரசு ரேஸ் கோர்ஸ்சுக்கு விடப்பட்ட குத்தகையை ரத்து செய்து நிலத்தை எடுத்துக் கொண்டது. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையும் ரேஸ் கிளப்பில் வைக்கப்பட்டது. ரேஸ் கோர்ஸ் நிலத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டதும், 160 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் பருவமழை காலங்களில் சென்னை பேரிடர்களில் இருந்து தப்பிக்க சிறந்த வழியாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தினர். மேலும், வேளச்சேரி ஏரி தொடர்பான வழக்கில் பசுமைத் தீர்ப்பாயமும் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தில் புதிய நீர்நிலைகளை உருவாக்க பசுமைத் தீர்ப்பாயமும் அறிவுறுத்தியிருந்தது.
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 09, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 09, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வங்கி இட மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பாக்கம் ஊராட்சி, பெரியபாளையம் நெடுஞ்சாலையில் 2013 முதல் யூகோ வங்கி செயல்பட்டு வருகிறது.
அத்திமாஞ்சேரிபேட்டையில் பரபரப்பு 2 மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது
அத்திமாஞ்சேரிபேட்டையில் 2 மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் பாலியல் புகாரில் 3 ஆசிரியர்கள் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
துணை முதல்வர் பிறந்தநாள் விழா ஏழை எளியோருக்கு அன்னதானம்
உத்திரமேரூரில் துணை முதலல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1000 பேருக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம் எல்ஏ அன்னதானத்தை வழங்கினார்.
புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறையும் 320 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
கேளம்பாக்கம் அரசு பள்ளியில் அறிவியல், கணித கண்காட்சி
திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடைபெற்றது.
ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு கருத்தரங்கம் நமது கலாச்சாரத்தை ஒருசேர கற்பிக்கும் இடம் காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் நடந்த ஓலைச்சுவடிகள் குறித்து பாதுகாப்பு கருத்தரங்கத்தில், 'புது தொழில் நுட்பத்தையும், நமது கலாச்சாரத்தையும் ஒருசேர கற்பிக்கும் இடமாக காஞ்சிபுரம் உள்ளது' என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
பெருக்கரணை கிராமத்தில் இடிந்து விழும்நிலையில் அங்கன்வாடி மையம்
பெருக்கரணை கிராமத்தில் பாழடைந்த இடிந்து விழும் நிலையில் காணப்படும் அங்கன்வாடி இடித்து அகற்றிவிட்டு புதியதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டுமனையை அளந்து தராததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தம்பதியினர் போராட்டம்
தண்டலம் கிராமத்தில் வீட்டுமனையை அளந்து தராததை கண்டித்து, திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தம்பதியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் காஞ்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நேற்று முன்தினம் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகத்தினை உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் வழங்கினர்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் மீனவர்கள் வேதனை
வங்க கடலில் உருவான பெங்கல் புயல் எதிரொலி காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.