இதில் 13 பெட்டிகள் கவிழ்ந்து சேதமடைந்தன. எனினும், இவ்விபத்தில் பயணிகள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். தமிழக அரசும், பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரயில்வே துறையின் தொடர் அலட்சியப்போக்கு காரணமாக விபத்துகள் அரங்கேறி வருகின்றன என எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கடந்த 10ம் தேதி காலை 10.35 மணியளவில் 22 பெட்டிகளில் 1600 பயணிகளுடன் பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. அந்த ரயில் பெங்களூரு, காட்பாடி, பெரம்பூர், வியாசர்பாடி வழியாக ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு 8.27 மணியளவில் பொன்னேரி ரயில் நிலையம் அருகே பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, நேர்பகுதியில் செல்வதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டது. இதனால், கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே 120 கிமீ வேகத்தில், முதலாவது வழித்தடத்தில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது.
அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவருக்கு, கவரப்பேட்டையில் இருந்து ஒரு கிமீ தொலைவில் லூப் லைனான 2வது தடத்தில் செல்வதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதையேற்று டிரைவர் லூப்லைனில் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கியுள்ளார். எனினும், அத்தடத்தில் கடந்த 3 நாட்களாக 75 பெட்டிகளுடன் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிவேகத்தில் வந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், அதே வழித்தடத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலின் பின் பகுதி மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில், எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் பெட்டி சரக்கு ரயிலின் பெட்டிக்கு அடியில் போய் நின்றது. இன்ஜினுக்கு அடுத்ததாக உள்ள ஏசி பெட்டிகள் உள்பட 13 பெட்டிகள் ஒன்றுடன் மற்றொன்று மோதி, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கீழே விழுந்து உருண்டன. மேலும், எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் அருகில் உள்ள 3 பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தேர்வு அறிவிக்கை தேதிக்கு முன்பு பெற்ற உடற்தகுதி சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
தேர்வு அறிவிக்கை தேதிக்கு முன்பு பெற்ற உடற்தகுதி சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
பொது நலன் என்ற பெயரில் தனியாரிடம் இருந்து எல்லா சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாது
புதுடெல்லி: ‘பொது நலனுக்காக எனக் கூறி அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தி விட முடியாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு அமெரிக்காவின் புதிய அதிபர் யார்?
கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் இழுபறி
திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை நேரில் கண்டறிய கள ஆய்வை தொடங்கினார் முதல்வர்
கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு. ரூ158 கோடியில் தொழில்நுட்ப பூங்காவையும் திறந்து வைத்தார்
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவால் மாணவர்கள் மயக்கம்
திருவொற்றியூர், திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் நேற்று விஷவாயு கசிந்ததால் சில மாணவிகள் மயக்கம் அடைத்தனர்.
புழல் கதிர்வேடு பகுதியில் 78.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு
புழல் கதிர்வேடு பகுதியில் மாநகராட்சி சார்பில் 78.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு திறந்து வைத்தார்.
பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் 72.65 கோடியில் திட்ட பணிகள்
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் 72.65 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
குண்டும், குழியுமான பென்னலூர் சாலை
பென்னலூர் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்போரூர் பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு
திருப்போரூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.