பண்டிகை காலத்தில் தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக உயர்ந்து வரும் தங்கம் விலை வரும் நாட்களில் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு குண்டுமணி அளவு தங்கமாவது வாங்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் ஆசை மட்டுமல்ல, சேமிப்பு பற்றி குறிப்பிடும்போதெல்லாம் காலம் காலமாக கூறப்படும் ஓர் அறிவுரை. சேமிப்புக்கும் தங்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கவே தேவையில்லை.
காரணம், இது, உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படும் வழி முறைதான். ரிசர்வ் வங்கியே அவசர காலத்தில் நிதி தடுமாற்றத்தை சமாளிக்க தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கிறது. அந்த அளவுக்கு, வெறும் அழகு ஆபரணமாக மட்டுமின்றி, மிக முக்கியத்துவம் வாய்ந்த முதலீடாக தங்கம் திகழ்கிறது. ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும்போதெல்லாம் தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால்தான், உலக நாடுகளிடையே போர் சூழும் போது, தங்கத்தில் முதலீடு அபரிமிதமாக மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக தேவை அதிகரித்து தங்கத்தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தற்போது தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கும் போர்தான் காரணம். ஒன்றல்ல… இரண்டு போர்கள். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் மூண்டது. அப்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,900 அமெரிக்க டாலர். அடுத்த ஒரு சில வாரத்திலேயே, அதாவது 2022 மார்ச் 8 தேதி சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம். 2,000 டாலரை தாண்டி, 2,046 டாலரானது. ரஷ்யா உக்ரைன் போரால் ஏற்பட்ட ஸ்திரத்தன்மையற்ற நிலையும், பண வீக்கமும் தங்கத்தில் முதலீடு அதிகரித்து விலை உயர வழிவகுத்து விட்டன.
போர் தொடர்ந்து தீவிரம் அடைந்ததால், தங்கம் விலை குறைய வழியில்லாமல் போய்விட்டது. உக்ரைன் – ரஷ்யா போருக்கு அடுத்ததாக, 2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி 1,200 பேரை கொன்றதில் தொடங்கி இன்று வரை ஓராண்டை கடந்தும் போர் ஓயவில்லை. நேற்று நிலவரப்படி ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கம் விலை சுமார் 2,736 டாலர் . இது, முந்தைய நாள் வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 28.9 டாலர், அதாவது, 1.07 சதவீதம் அதிகம்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம்
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் 15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
சீரமைக்க கோரிக்கை
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.