அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 13க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்கத்துறை (ஈடி) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இச் சோதனையில் வைத்திலிங்கம் தனது மனைவி மற்றும் மகன்கள் பெயரில் சட்டவிரோதமாக குவித்து வைத்திருந்த பல கோடி ரூபாய் சொத்துக்கான ஆவணங்கள், பத்திரங்கள், வங்கிப் பணப் பரிமாற்ற ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவன், அவரது சம்பந்தி வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தெலுகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம். நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு தங்கம் என்ற மனைவி, பிரபு, ஆனந்த பிரபு, சண்முகபிரபு ஆகிய 3 மகன்கள் மற்றும் பிரதீபா என்ற மகள் உள்ளனர். வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2011-2016ம் ஆண்டுகள் அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி துறை, நகர்புற வளர்ச்சி மற்றும் கூடுதலாக விவசாயத்துறை அமைச்சராக வைத்திலிங்கம் பதவி வகித்தார்.
அப்போது வைத்திலிங்கம் தனது பதவி காலத்தில் ராம் குழுமத்திற்கு சொந்தமான ராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் சார்பில் பெருங்களத்தூர் பகுதியில் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகள் கொண்ட 1,453 வீடுகள் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கிய விவகாரத்தில், அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.27.90 கோடி வைத்திலிங்கம் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், வைத்திலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனமான ராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் அவரது மகன் நடத்தும் முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ரூ.27.90 கோடி லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அந்த பணத்தில் வைத்திலிங்கத்தின் மகன் பிரபு நடத்தும் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ரூ.23 கோடி அளவில் பூந்தமல்லி திருவெறும்பூர் பகுதியில் நிலம் வாங்கி குவித்து இருந்ததும் விசாரணையில் உறுதியானது.
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 24, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 24, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும் கலைக்கும் உண்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உட்கட்சி மோதலில் பாஜ பிரமுகரின் மூக்கு உடைப்பு
தமிழக முழுவதும் பாஜக சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பூத் வாரியாக கிளை தலைவருக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.
தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஊத்துக்கோட்டை:தாமரைப்பாக்கம் அணைக்கட்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கேயுள்ள மேம்பாலத்தின் நடுவே ஏற்பட்டிருக்கும் விரிசலை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை - பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
ஆர். கே.பேட்டை ஒன்றியத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து நாள்தோறும் பள்ளிப்பட்டு, சோளிங்கர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களும் சென்று வருகின்றனர்.
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் வா க்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா நெடுஞ்சாலையில் அம்பத்தூர் முதல் நெமிலிச்சேரி வரையிலும், மவுண்ட்-பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் சென்னீர்குப்பம் முதல் ஆவடி வரையிலும் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மழைநீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
பள்ளிப்பட்டு பகுதியில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணி
பள்ளிப்பட்டு உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுபாட்டில் உள்ள சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சரவம்பாக்கத்தில் விசிக போதை ஒழிப்பு மாநாடு விளக்க கூட்டம்
சரவம்பாக்கத்தில் விசிக சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
மண்புழு தாத்தாவின் மண் நல புரட்சிப்பாதை புத்தகம் வெளியீட்டு விழா விவசாயத்தை மேம்படுத்த மண்ணை நாம் காக்க வேண்டும்
நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு வேண்டுகோள்
கருங்குழி 12வது வார்டில் 11 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டிடம்
கருங்குழி பேரூராட்சியில் தாக கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டிடத்தை, பேரூராட்சி தலைவர் தசரதன் திறந்து வைத்தார்.