விருதுநகர், நவ. 11: பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என்று விருதுநகரில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் சென்றார். அன்று பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு செய்த முதல்வர், தான் வாங்கி வந்த கேக், பிஸ்கட் மற்றும் பழங்களை அவர்களுக்கு வழங்கினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த மாணவிகள், முதல்வரை அப்பா என்று அழைத்து மகிழ்ந்தனர்
இதையடுத்து, விருதுநகரில் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கோவை, விருதுநகர் கள ஆய்வில் ஒரே நாளில் கோரிக்கை நிறைவேற்றம்
விருதுநகரில் நேற்று முன்தினம் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொழிலாளர்களிடம் குறை கேட்டறிந்தார். அப்போது பெண் தொழிலாளர்கள் சிலர், பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தால், 'அவர்களது குழந்தைகளின் படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.
இதையேற்று விருதுநகரில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்' என்று அறிவித்தார். கோரிக்கை வைத்த ஒரே நாளில் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டதற்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 11, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 11, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
செஸ் 3வது சுற்றில் லிரெனை வென்ற குகேஷ்
சிங்கப்பூரில், ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள், நடப்பு சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரென் – இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே நடந்து வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டம் 2027ம் ஆண்டு டிசம்பருக்குள் முடியும் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் திட்டமிட்டப்படி 2027ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும் என ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஆலை அமைக்க 200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு - தமிழக அரசு தகவல்
பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஆலையை அமைக்க திருவள்ளூரில் 200 ஏக்கர் நிலம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆவின், ரயில்வேக்கு புதிய அதிகாரிகள் நியமனம் தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விரிவான திட்டம் ஒன்று உருவாக்க அரசு முடிவு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது. சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அலையின் சீற்றத்தால் மெரினா, திருவொற்றியூர் கடற்கரையில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய மிதவை கருவிகள்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மண்டலமாக உருவாகியுள்ளதால் மெரினா கடல் பகுதி வழக்கத்தை விட மிகவும் ஆக்ரோஷமாக 8 அடி உயரத்திற்கு அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. அதேநேரம் இன்று அதிகாலை முதல் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.
ஓய்வூதியர்களுக்கு அஞ்சலகங்களில் உயிர்வாழ்வு சான்று
காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அஞ்சலக அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ்வு சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறி வடிவுடையம்மன் கோயில் வாசலில் ஆறாக பெருக்கெடுக்கும் கழிவுநீர் - பக்தர்கள் அவதி|
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் விட்டு விட்டு மழை பெய்தது.
யாழ்ப்பாணத்தில் மோசமான வானிலை சென்னையில் 4 விமானங்கள் ரத்து
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெங்கல் புயலாக மாறி அச்சுறுத்திக்கொண்டு இருப்பதால், இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில், மோசமான வானிலை நிலவுகிறது.
முடிவுக்கு வந்தது ஹிஸ்புல்லா - இஸ்ரேல் போர் - போரை நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லெபனான் மக்கள் நாடு திரும்ப தொடங்கி உள்ளனர்.