ஜெயங்கொண்டம் அருகே சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1000 கோடியில் அமைய உள்ள தைவான் நாட்டை சேர்ந்த டீன்ஷூஸ் காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு செய்ய நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து ஜெயங்கொண்டம் சென்ற முதல்வர் அன்று இரவு அங்கு தங்கினார்.
நேற்று காலை ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரத்தில் உள்ள சிப்காட்டில், 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தைவான் நாட்டை சேர்ந்த டீன்ஷூஸ் நிறுவன தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர், அரியலூர் கொல்லாபுரத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டத்தில் 26 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்ததுடன் 53 முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்து அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்துக்கான 27 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்ததுடன் 456 முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். இதில் மொத்தம் ரூ.174 கோடியில் 21,862 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பெண்களுக்கு தையல் இயந்திரம்
சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர், நல்லூர், பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமை வெட்டிபாளையம், காரனோடை ஆகிய 5 ஊராட்சிகளில் தையல் பயிற்சி முடித்த 9 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாதவரத்தில் உள்ள சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வடகரை, அழிஞ்சிவாக்கம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்
நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
பயனாளிக்கு மானியத்துடன் ஆட்டோ
காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய ஆட்டோவினை `நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் கோவூரை சேர்ந்த சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.
புராதன சின்னங்களை காண மாமல்லபுரத்தில் குவிந்த மாணவர்கள்
உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்
ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர்கள் திடீரென வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
சாலையை கடக்கும் இடத்தில் விபத்து அபாயம்
வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கத்தில் பொதுமக்கள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
செங்கல்பட்டில் பிரபல வெற்றி ரியல்ஸ் கட்டுமான நிறுவனத்திலும், திருப்போரூரில் பாலி ஹோஸ் என்ற நிறுவனத்திலும் வருமானவரித்துறையினர், போலீசாரின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை - பினாங்கிற்கு தினமும் விமான சேவை
மலேசியா நாட்டின் தனித்தீவான பினாங்கிற்கு, சென்னையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை வருகிற டிசம்பர் 21ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.
அயனாவரம் போலீஸ்காரர் கைது
கேரளாவை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் போதைப்பொருள் வாங்கி, சென்னையில் விற்பனை செய்த அயனாவரம் சட்டம் ஒழுங்கு காவலரை, நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.
மெட்ரோ மேம்பால தூண்கள் அமைக்கும் பணி 100% நிறைவு
மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வழித்தட மெட்ரோ ரயில் திட்டத்தில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு வரை, 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.