தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் மிக கனமழை கொட்டும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் 29ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும்பட்சத்தில், அதற்கு ”பெங்கல்” என்று சவுதி அரேபியா பெயர் வைக்கும்படி பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இலங்கைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேதாரண்யத்தில் இருந்து 550 கிமீ தெற்கு -தென்கிழக்கு திசையிலும் சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.
இதனால், நேற்று முன்தினம் மாலையில் வேதாரண்யம் பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது. குளிர் அலைகள் ஆக்கிரமித்ததால், மழை தொடங்கியும் தீவிரம் அடையவில்லை.
தொடர்ந்த தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல தமிழகம் நோக்கி நகரும். இலங்கை பகுதியில் பலத்த மழை பெய்யும். அந்த மழை நீரோட்டம் காரணமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு பெற்று பின்னர் புயல் சின்னமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது
நுண்ணறிவுப்பிரிவு காவலர்களிடம் கமிஷனர் அருண் மனுக்கள் பெற்றார்
காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
ராணுவ வீரரை தாக்கிய விவகாரம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் மனித உரிமை ஆணைய உத்தவு ரத்து
ஐகோர்ட் கிளை அதிரடி
அண்ணாநகர் கால்வாயை பாடி குப்பம் கால்வாயில் திருப்ப மாநகராட்சி முடிவு
குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க
சபரிமலையில் புதிய சர்ச்சை 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சன்னிதானம் எஸ்பிக்கு ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டுள்ளார்.
நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டி.வி. 775 லட்சம் கொடிநாள் நிதி
முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான
எஸ்சி, எஸ்டி, ஓபிசி வளர்ச்சியை மோடி, ஆர்எஸ்எஸ் தடுக்கிறார்கள்
ராகுல்காந்தி குற்றச்சாட்டு