மேலும் அவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாணவியை போல், இதுபோன்று மற்ற குற்றங்கள் நடந்தாலும் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும். அதன் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் அருண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 24ம் தேதி மாலை 4 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 100க்கு ஒரு அழைப்பு வருகிறது. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் புகார் அளித்தார். அந்த அழைப்பின் படி, போலீசார் குழு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்றது. அங்கு கல்லூரியில் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு குழுவில் உள்ள பேராசிரியர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி ஆகியோர் புகார் அளித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதியப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்டவர் என்ன கொடுக்கிறார்களோ அதை அப்படியே எழுத வேண்டும். அதில் போலீஸ் எந்த திருத்தமும் செய்யக் கூடாது. சிலர் தெரியாமல் சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் எப்படி புகார் கொடுக்கிறார்களோ அதை அப்படியே பதிய வேண்டும். அதன்படிதான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. எப்ஐஆர் பதிவு செய்த உடனே கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு பணி கொடுத்து விசாரிக்கிறோம். சந்தேகிக்கப்பட்ட நபர்கள் சிலரை கொண்டு வந்து விசாரித்தோம்.
அதன்படி அறிவியல் பூர்வமான ஆதாரங்களை சேகரித்து, டவர் லோக்கேஷன் எல்லாம் எடுத்து அடுத்த நாள் காலையில், அதாவது 25ம் தேதி காலையிலேயே குற்றவாளியை பிடித்துவிடுகிறோம். பிடித்ததற்கு பிறகு அவன்தான் குற்றத்தை செய்தானா என்று உறுதிபடுத்துவதற்கு மேலும் சில விசாரணை நடத்தினோம். குற்றம் உறுதி செய்யப்பட்ட பிறகு அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறோம். இதுதான் இந்த வழக்கைப் பொருத்தவரைக்கும் நடந்தது.
எப்ஐஆர் இதுபோன்ற வழக்கில் வெளியே வரக்கூடாது. வெளியே கசியவிடக் கூடாது. அப்படி செய்தால் இது சட்டப்படி குற்றம்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மணல் திருட்டை காட்டி கொடுப்பதாக வாலிபருக்கு கொலை மிரட்டல்
திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பாரதிதாசனார் தெருவைச் சேர்ந்தவர் ஏஞ்சல் (28). இவரது கணவர் வினோத்குமார்.
ஆரணி பேரூராட்சியில் மது பிரியர்களின் பாராக மாறிய மருத்துவமனை கட்டிடம்
பெரியபாளையம் அருகே, ஆரணியில் புதர்கள் மண்டி மர்ம நபர்களின் பாராக மாறிவரும் பழைய கால்நடை மருத்துவமனையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
திருத்தணி முருகன் கோயிலில், வரும் 31ம் தேதி திருப்புகழ் திருப்படித் திருவிழா நடைபெற உள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கவர்னர் ரவி ஓய்வெடுப்பதற்காக போக்குவரத்து சேவை நிறுத்தம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருமலையில் சாமி தரிசனம் செய்ய சாலை மார்கமாக சென்ற நிலையில், திருத்தணியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து சேவையை போலீசார் தடுத்து நிறுத்தியதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஆரணி, சத்தரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீரில் மூழ்கிய சாலை, தரைப்பாலம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால், மங்களம் கிராமத்தில் ஆரணியாற்றின் குறுக்கே இருந்த செம்மண் சாலை நீரில் மூழ்கியது.
மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி
மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு உயர்ந்து வருகிறது. எனவே உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலையூர் ஊராட்சியில் ~1.66 கோடியில் கட்டப்பட்ட பாலத்தை அமைச்சர் திறந்து வைத்தார்
திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய மேலக்கோட்டையூர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், படூர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், கேளம்பாக்கம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மான்ய நிதியில் கட்டப்பட்டுள்ள ரூ.57 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள வட்டார பொது சுகாதார வளாகம், கொட்டமேடு மற்றும் கீழூர் ஊராட்சிகளில் தலா ரூ.39 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக கட்டிடங்கள், ரூ.7 லட்சம் மதிப்பில் கீழூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், மேலையூர் ஊராட்சியில் ரூ.2 கோடியே 11 லட்சத்து 28 ஆயிரம் செலவில் உபரிநீர் கால்வாய் மீது கட்டப்பட்ட பாலம் மற்றும் ரூ.1 கோடியே 66 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது.
பாட்டில் குடிநீரால் ஏற்படுப் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன?
ஒவ்வொரு மனிதனும் உடல் சோர்வு இல்லாமல் உழைக்க தண்ணீர் இன்றியமையான ஒரு முக்கிய தேவையாக உள்ளது.
கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளி கல்வி உதவி தொகை ஆண், பெண் என பாரபட்சம் இன்றி ஒரே மாதிரி வழங்க வேண்டும்
மாநில பொது குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றம்
தனியார் வங்கியில் போலி நகையை அடகு வைத்து 711.45 லட்சம் நூதன மோசடி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (51) என்பவர், கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் வங்கியில், கடந்த 2021ம் ஆண்டு முதல் வாடிக்கையாளராக இருந்து வந்தார்.