அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி டிசம்பர் 23ம் தேதி ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் வரலட்சுமி எழுதிய கடிதத்தில், இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளது.
அதனால் வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக விடுமுறைகால நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயண் ஆகியோர் அறிவித்தனர். இதை தொடர்ந்து பாஜக வழக்கறிஞர் அ.மோகன்தாஸ் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த சம்பவம் குறித்து காவல்துறையும், அண்ணா பல்கலைக்கழகமும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் வாதிடும்போது, ‘சம்பவம் நடந்தது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அருண் அளித்த பேட்டியில், இதுவரையில் நடைபெற்ற விசாரணையில் ஒருவர் குற்றவாளி என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றுதான் தெரிவித்துள்ளார். மீடியாக்கள் பிரச்னையை பெரிதுபடுத்தியதால் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அவர் பேட்டியளித்துள்ளார்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 29, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin December 29, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
16 நாளில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி
அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி ஏற்பட்டுள்ளது.
கேல் ரத்னா விருது பெறும் குகேஷ், மனுபாக்கருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலைநிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி தொடங்கி வைக்கிறார்
தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரமாண்ட கலைவிழா நடத்துவது குறித்து, கனிமொழி எம்பி தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.
தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில்: 12வது முறையாக தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று தன்னிகரில்லா சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை பவானிதேவி வாழ்த்தி மகிழ்கிறோம்.
ஊடுருவல்காரர்களை அனுமதிக்கும் பிஎஸ்எப் மேற்கு வங்க முதல்வர் மம்தா பகீர் குற்றச்சாட்டு
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்கார்களை பிஎஸ்எப் படையினர் அனுமதிக்கின்றனர் என்றும் இதன் மூலம் மாநிலத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
அரசுப் பள்ளிகளை யாருக்கும் தத்துக் கொடுக்கவில்லை
அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கவும் இல்லை, தத்துக் கொடுக்கவும் இல்லை. அதுகுறித்து அறிக்கை விடுமுன் என்ன பேசப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் வேகமாக பரவும் ஸ்க்ரப் டைபஸ் நோய்
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் நோய் பரவுவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர் குறித்து வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி
பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா மாஜி அமைச்சருக்கு சொந்த கல்லூரியில் மாணவிகளின் விடுதி குளியலறையில் கேமரா வைத்து 300 ஆபாச வீடியோ பதிவு
தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மல்லாரெட்டி, தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.
ஒன்றிய உள்துறை எச்சரிக்கை இணைய வழி முதலீடு மோசடி குறித்து உஷார்
ஒன்றிய உள்துறை அமைச்சர் சைபர் மோசடிகள் தொடர்பாக ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், புதிய சைபர் மோசடியாக முதலீடு மோசடி பெருமளவில் நடந்து வருவதாக எச்சரித்துள்ளது.