இஸ்ரேல் மீது கடந்த 7-ஆம் தேதி திடீா் தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதப் படையினா் 200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினா், இஸ்ரேலியா்களை பிணைக் கைதிகளாக காஸாவுக்குள் பிடித்துச் சென்றனா்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தொடா் ஏவுகணைத் தாக்குதலை வான்வழியாக நடத்தி வருகிறது. இஸ்ரேல் வீசும் ஒவ்வொரு குண்டுகளுக்கு பதிலாக ஒரு பிணைக் கைதி கொல்லப்படுவாா் என்று ஹமாஸ் எச்சரித்தது.
எனினும், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாமல் தொடா்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், காஸாவை முழுமையாக முடக்கிய இஸ்ரேல், குடிநீா், உணவு, மருந்து பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள்கள் அடங்கிய லாரிகளை அனுப்ப பிணைக் கைதிகளை விடுவிக்க நிபந்தனை விதித்தது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை 2 அமெரிக்க பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் விடுவித்தனா். அதற்கு பதிலாக சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் அடங்கிய 20 லாரிகளை எகிப்து எல்லை வழியாக ராஃபாவுக்குள் இஸ்ரேல் அனுமதித்தது.
மேலும் 2 போ் விடுவிப்பு: இந்நிலையில், யோசிவ்ட் லிப்சிட்ஸ் (85), நியுரிட் கூப்பா் (79) ஆகிய முதியவா்களான 2 பெண்களை ஹமாஸ் படையினா் திங்கள்கிழமை விடுவித்தனா். இவா்களின் கணவா்கள் விடுவிக்கப்படவில்லை.
பிணைக் கைதியாக கொண்டு சென்றபோது ஹமாஸ் படையினா் தன்னை குச்சியால் தாக்கியதாகவும், நரகத்தில் இருந்ததைப்போல் உணா்ந்ததாகவும் யோசிவ்ட் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இஸ்ரேலின் கிப்புட்ஸ் பகுதியில் இருந்து எங்களை இருசக்கர வாகனத்தில் ஹமாஸ் படையினா் கடத்திச் சென்றனா். அப்போது அவா்கள் எங்களை குச்சியால் தாக்கினா். விலா எலும்பில் காயம்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டவுடன் தாக்குதலை நிறுத்தினா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 25, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 25, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சாட்: 96 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்
மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
புதினுடன் டிரம்ப் பேச்சு?: ரஷியா மறுப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் வலியுறுத்தியதாக வாஷிங்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
கரூர் வைஸ்யா வங்கியின் 850-ஆவது கிளை திறப்பு
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.
ஜப்பான் பிரதமராக மீண்டும் ஷிகெரு இஷிபா
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி
பேஜர் தாக்குதல்: நெதன்யாகு ஒப்புதல்
லெபனானில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
சேலஞ்சர்ஸில் வாகை சூடினார் பிரணவ்
நிகழாண்டில் 18 வீரர்கள், 36 பேர் உயிரிழப்பு
ஜம்முவின் ரஜௌரி, பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் நிகழாண்டில் பிராந்தியத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாகியுள்ளது.
சின்னர் வெற்றி: அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், குரூப் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.