தமிழகத்தின் வளர்ச்சிக்கு திமுக தடையாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார். 'திமுக எப்போதும் வெறுப்பு, பிரிவினைவாத அரசியலைத் தான் செய்யும். அவர்களின் கவனம் எப்போதும் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மீது இருந்ததே இல்லை' எனவும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேலூரிலும், கோவையிலும் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் (வேலூர்), கே.பாலு (அரக்கோ ணம்), செளமியா அன்புமணி (தருமபுரி), கே.எஸ்.நரசிம்மன் (கிருஷ்ணகிரி), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கணேஷ்குமார் (ஆரணி) ஆகிய 6 வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் புதன்கிழமை காலையில் நடைபெற்ற பிரதமர் பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: தமிழ் வருடப் பிறப்புக்கு (ஏப்.14) அனைவருக்கும் வாழ்த்துக ளைக் கூறிக்கொள்கிறேன்.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்ட ணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த அன்பு, ஆசியைக் கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு எனது முழுத்திறனையும் பயன்படுத்துவேன்.
21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவையும், தமிழகத்தையும் ஒன்றிணைந்து வளர்க்க வேண்டும். அதற்கான சிறந்த அடித்தளத்தை கடந்த 10 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஏற்படுத்தியுள்ளது.
Bu hikaye Dinamani Chennai dergisinin April 11, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin April 11, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தங்கம் பவுனுக்கு ரூ.1,080 சரிவு
சென்னையில் தங் கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ. 56,680-க்கு விற்பனையானது.
மருத்துவ அறிவியல் விநாடி வினா: இராமச்சந்திரா மாணவர்கள் முதலிடம்
மருத்துவ அறிவியல் தொடர்பான சர்வதேச விநாடி வினா போட்டியில் போரூர், ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அணியினர் முதல் இரண்டு இடங்களை பெற்றனர்.
சாலை பள்ளத்தில் சிக்கியது குப்பை லாரி
போரூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகா ரட்சி குப்பை அள்ளும் லாரி சிக்கியது.
கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழா இரு நாள்கள் கொண்டாட்டம்
சென்னை, நவ. 12: கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி, வரும் டிச.31, ஜன.1 ஆகிய இரு நாள்கள் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் மண் விளக்கு வைத்து பூஜை
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை மண்விளக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய கட்டடங்கள்
தமிழகத்தில் 17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
ரூ.1.60 கோடியை டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக் கூடாது
சென்னை, நவ.12: ஃபியூயல் டெக்னாலஜி என்ற நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.1 கோடியே 60 லட்சத்தை நீதிமன்ற பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சில்லறை பணவீக்கம் 14 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 6.21 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவைச் சந்தித்தன.