தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெற உள்ளது.
வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாா் நிலையில் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடையும் எனவும், கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்கள் அளிக்கப்பட்டு அவா்களும் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். தோ்தலில் 950 போ் வேட்பாளா்களாக களம் இறங்கியுள்ளனா். வாக்குப் பதிவை சுமுகமாகவும் சுதந்திரமாகவும் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சாகு கூறினாா்.
தோ்தலுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாக்குச்சாவடிகளில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 233 போ் தோ்தல் பணியாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் எனவும் அவா் தெரிவித்தாா்.
இயந்திரங்கள் - காவலா்கள்: வாக்குப் பதிவுக்காக 1 லட்சத்து 58 ஆயிரத்து 568 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 86,858 ‘விவிபேட்’ எனும் யாருக்கும் வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
Bu hikaye Dinamani Chennai dergisinin April 19, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin April 19, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தங்கம் பவுனுக்கு ரூ.1,080 சரிவு
சென்னையில் தங் கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ. 56,680-க்கு விற்பனையானது.
மருத்துவ அறிவியல் விநாடி வினா: இராமச்சந்திரா மாணவர்கள் முதலிடம்
மருத்துவ அறிவியல் தொடர்பான சர்வதேச விநாடி வினா போட்டியில் போரூர், ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அணியினர் முதல் இரண்டு இடங்களை பெற்றனர்.
சாலை பள்ளத்தில் சிக்கியது குப்பை லாரி
போரூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகா ரட்சி குப்பை அள்ளும் லாரி சிக்கியது.
கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழா இரு நாள்கள் கொண்டாட்டம்
சென்னை, நவ. 12: கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி, வரும் டிச.31, ஜன.1 ஆகிய இரு நாள்கள் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் மண் விளக்கு வைத்து பூஜை
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை மண்விளக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய கட்டடங்கள்
தமிழகத்தில் 17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
ரூ.1.60 கோடியை டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக் கூடாது
சென்னை, நவ.12: ஃபியூயல் டெக்னாலஜி என்ற நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.1 கோடியே 60 லட்சத்தை நீதிமன்ற பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சில்லறை பணவீக்கம் 14 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 6.21 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவைச் சந்தித்தன.