அரசியல் சாசன சிற்பி டாக்டர் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
அமளி மேலோங்கியதை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று 18ஆவது அமர்வாகும். நாடாளுமன்றம் இயல்பாக இயங்கிய நேரத்தை விட அமளியை எதிர்கொண்ட நேரமே அதிகம்.
கடந்த மாதம் 26-ஆம் தேதி நாடாளுமன்ற பழைய கட்டடத்தில் அரசியல் சாசன ஏற்பு 75-ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்புரையாற்றினார். 2 அவைகளின் உறுப்பினர்களும் விழாவில் பங்கேற்றனர்.
அரசியல் சாசனம் குறித்து மக்களவையில் இம்மாதம் 13-ஆம் தேதியும், 14-ஆம் தேதியும் விவாதம் நடை பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி விவாதத்துக்கு பதிலளித்து நிறை வுரையாற்றினார். மாநிலங்களவையில் இம்மாதம் 16-ஆம் தேதியும், 17-ஆம் தேதியும் விவாதம் நடைபெற்றது.
உள்துறை மந்திரி அமித்ஷா விவாதத்துக்கு பதிலளித்து நிறைவுரையாற்றினார்.
விவாதம் நடைபெற்ற 4 நாட்களும் நாடாளுமன்றத்தில் சலசலப்புக்கு பஞ்சம் இல்லை.
அமித்ஷா தனது நிறைவுரையில், 'அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்...' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. காங்கிரஸ்காரர்களும் இவ்வாறு முழக்கமிட்டுவருகின்றனர்.
Bu hikaye Malai Murasu dergisinin December 18, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin December 18, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மழையால் ஆட்டம் தடைபட்டது: இந்தியா- ஆஸ்திரேலியா 3 ஆவது டெஸ்ட் டிரா!
இந்தியா பந்துவீச்சில் அசத்தல்
விக்னேஷ் சிவனுடனான திருமணம்: குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்!
நயன்தாரா பரபரப்பு பேட்டி!!
1971 போரில் இந்தியா கூட்டாளி மட்டுமே: எங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார் பிரதமர் மோடி!
வங்கதேச தலைவர்கள் கண்டனம்!!
நேரு மீது காட்டமான தாக்கு: அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சிதான்!
அமித்ஷாவுக்கு ஆதரவாக மோடி கருத்து!!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது!
தெற்கு வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது.
தொகுதி காலியானதாக அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய் கட்சி போட்டியிடுமா?
பரபரப்பு தகவல்கள்!
டாக்டர் அம்பேத்கர் விவகாரம் அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ராகுல், கார்கே பதிலடி!
மனுஸ்மிருதி ஆதரவாளர் என சாடல்!!
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு!
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!
மூளைச்சாவு அடைந்ததாக தகவல்: 'புஷ்பா-2' நெரிசலில் சிக்கிய சிறுவனும் கவலைக்கிடம்!
அல்லு அர்ஜூன் ஜாமினுக்கு எதிராக தெலுங்கானா போலீஸ் மேல்முறையீடு!!
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு!
சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்!!