இமயமலையை ஒட்டியுள்ள பகுதியில் இன்று காலை 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 பூகம்பங்கள் ஏற்பட்டன.
இதில் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.1 என ரிக்டர் அளவுகோலில் பதிவானது. திபெத்தில் 53 பேர் பலியாகி விட்டனர். இன்னும் முழுமையான தகவல் கிடைக்காததால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அஞ்சப்படுகிறது. சீனா, நேபாளம், வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவையும் நிலநடுக்கம் உலுக்கியது.
இமயமலைப்பகுதி பூகம்ப அபாயம் நிறைந்தது என்பதை பூகோள ரீதியாக ஆய்வுகள் ஏற்கெனவே எடுத்துரைத்துள்ளன. தற்போது உள்ள இமயமலைப்பகுதி, பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்தது என்பது தொடர்பான பதிவுகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
சீனா, திபெத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான், வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா நிலநடுக்கங்கள் அவ்வப்போது உலுக்கிவருகின்றன.
கடந்த 50 ஆண்டுகள் சார்ந்த புள்ளி விவரங்களை உன்னிப்பாக அலசினால் பூகம்பம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
இமயமலையின் அடிப்பகுதியில் உள்ள நிலத்தட்டுகள் சமச்சீரற்ற நிலையில் உள்ளன. இவை மேடு பள்ளமாக உள்ளதால் அவ்வப்போது நகர்ந்து உராய்வதால் நிலநடுக்கம் உச்சம் பெறுகிறது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Bu hikaye Malai Murasu dergisinin January 07, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin January 07, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை 169-ஆவது வார்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் அமலாக்கத்துறையினரால் மீண்டும் நடைபெற்ற 14 மணிநேர சோதனை நிறைவடைந்தது.
குப்பை லாரி மோதி முதியவர்பலி
சென்னை கோடம்பாகம் பகுதியில் குப்பை லாரி மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாயில் துணியை கட்டி கோட்டையை நோக்கி பேரணி!
பா.ஜ.க இளைஞரணி நிர்வாகிகள் குண்டுக்கட்டாக கைது !!
ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!
புக்கிங் 5 ஆயிரமாக குறைப்பு!!
உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி பெண் பலி
எலுமிச்சைப் பழம் பறிக்க சென்ற போது விபரீதம்!
ரூ.850 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன!
ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ. தகவல்!!
ஈரோடு கிழக்கில் இப்போதைக்கு மும்முனைப் போட்டி உறுதி!
அ.தி.மு.க. 11-ஆம் தேதி முடிவு செய்கிறது; விஜய் கட்சி போட்டியிடவில்லை!!
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழக விஞ்ஞானி வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.