
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) கோலாகமாக தொடங்குகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்கும் கண்கவர் நடன நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. நாளை தொடங்கவுள்ள லீக் போட்டிகளில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டிகளைக் காண கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்), உலகின் முதன்மையான 20 ஓவர்கிரிக்கெட் தொடராகும். அந்த வகையில் 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (மார்ச் 22) தொடங்குகிறது. வழக்கம் போல் இம்முறையும் 10 அணிகள் களம் காணுகின்றன.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் தேவையில்லாத வீரர்களை விடுவித்தும், அணிவியூகத்துக்கு ஏற்ப புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்திருப்பதால், என அணி வீரர்கள், கேப்டன்கள், பயிற்சியாளர்கள் கணிசமான அளவில்மாற்றங்கள் நடந்துள்ளன. முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். இறுதியாக 62 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் 5 அணிகள் புதிய 5 கேப்டன்களுடன் களம் காணுகிறது. டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்'ஐ லக்னோ அணி அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அவரை அந்த அணியின் கேப்டனாக நியமித்தது. இதனால் டெல்லி அணியின் கேப்டனாக கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து கடந்த முறை கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் அய்யரை, பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்து அவரை அந்த அணியின் கேப்டனாக நியமித்துள்ளது.
Bu hikaye Malai Murasu dergisinin March 21, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin March 21, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்!
தொடரில் 2வது நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது பரம எதிரியான மும்பை இந்தி யன்ஸ் அணியை எதிர் கொண்டு விளையாட உள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தி யில் பெரும் பார்ப்பை உருவாக்கியுள் எதிர் ளது.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.! கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்தார்!!
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான முதல் கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விஜய் வசந்த் எம்.பி. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேரில் சந்தித்து தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அஜித்துக்கு மகனாக மாறிய 'வலிமை' வில்லன் நடிகர் !
அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி', வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விஐபி பிரேக் தரிசனம் ரத்து: திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம்!
திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். முதல் போட்டியில் விராட் கோலி, சால்ட் அதிரடியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி !
கொல்கத்தா சொந்த மண்ணில் தோல்வி !!

ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் 2-ஆவது வாரம் திறப்பு!
சுமார் ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் மாதம் 2-ஆவது வாரம் திறக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்—ஆசிரியர்கள் உ ண்ணாவிரத போராட்டம்! மாவட்ட தலை நகரங்களில் ன்று நடந்தது!!
ஜாக்டோ-ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடந்தது.
மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?
ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மதுரையில் நள்ளிரவில் பயங்கரம்: ட ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை! பழிக்குப் பழியாக நடந்த சம்பவம்!!
மதுரையில் நள்ளிரவில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்தது.
மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?
ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.