பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் புதன்கிழமை (21) நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை நிபுணர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'தேசத்தின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல்" என்ற தொளிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன சிறப்புரையாற்றினார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா எக்சிம் வங்கி மற்றும் 17 நாடுகளுடன் ஒப்பத்த அடிப்படையில் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சலுகைகளையும் அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் நிர்மாணம் மற்றும் அபிவிருத்தித் துறைக்கு முக்கிய பங்கு உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் நிறுத்தப்பட்டதாவ் நிர்மாணத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், வங்கிச் சலுகைகள் வழங்குதல், நிர்மாணப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்குச் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளைச் செலுத்துவது போன்ற இத்துறையில் பணிபுரிவோர் மீது சுமத்தப்பட்டிருந்த சுமையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.
தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து புதிய முதலீடுகள் ஈர்க்சுப்படும் போது நிர்மாணத்துறையும் வளர்ச்சியடையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கொழும்பு, பிங்கிரிய, திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய புதிய முதலீட்டு வலயங்களில் சுற்றுலா ஹோட்டல் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தல், பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொழும்பு, காலி மற்றும் கண்டியை அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விளக்கமனித்தார்.
Bu hikaye Tamil Mirror dergisinin August 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin August 23, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
காஷ்மீரில் 5,000 பேருக்கு டெங்கு
காஷ்மீரில் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஷார்ஜாவில் புதன்கிழமை (06) நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
சம்பியன்ஸ் லீக்: ஆர்சனலை வென்ற மிலன்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலுடனான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் வென்றது.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய ஷகீன் ஷா அஃப்ரிடி
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு பாகிஸ்தானின் ஷகீன் ஷா அஃப்ரிடி முன்னேறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஆவிகளின் நடமாட்டம்?
18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெள்ளை மாளிகை கட்டிடத்தில், முன்னாள் ஜனாதிபதிகளின் ஆவிகள் உலாவுவதாகவும் இரவு நேரத்தில் மர்ம சப்தம் எழுகிறது என்றும் பல கதைகள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த கதை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கான இலங்கைக் குழாமில் குசல் பெரேரா
நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கையின் குழாமில் குசல் பெரேரா, மொஹமட் சிராஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
ட்ரம்ப்பின் முதல் உரையாடல் மோடியுடன்
உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியுடன் தான் எனது முதல் உரையாடல் அமைந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்
இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
மு.கா. தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல்; ஒருவர் கைது
பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை வேட்பாளரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியைகளுக்கு கௌரவம்
களுத்துறை-அகலவத்தை, டார்டன்பீல்ட் பகுதியில் இயங்கிவரும் கணபதி அறநெறி பாடசாலை ஆசிரியைகளுக்குத் தன்னார்வ பணிகளைக் கௌரவிக்கும் முகமாக ஆசிரியர்களுக்குக் கௌரவ நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.