CATEGORIES
Kategoriler
புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் விபத்து 10 பேர் பலி; 30 பேர் காயம்
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸ் (New Orleans) நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிம்பாப்வேயில் மரண தண்டனை இரத்தானது
சிம்பாப்வேயில் பல ஆண்டுகளாகவே மரண தண்டனைக்கு எதிராகத் தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இன்று ஆரம்பமாகும் 2ஆவது டெஸ்ட் தொடரை சமப்படுத்துமா பாகிஸ்தான்?
தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கேப் டௌணில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் புர்கா அணிய தடை
சுவிட்ஸர்லாந்தில், இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
மூடியிருந்த கோவில் 44 ஆண்டுகளின் பின்னர் திறப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூடப்பட்டுக் கிடக்கும் கோவில்களை வழிபாட்டிற்குத் திறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
'ஜெய் பாபு, ஜெய் பீம்' பிரசார பேரணி இன்று ஆரம்பம்
மன்மோகன் சிங் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட \"ஜெய் பாபு, ஜெய் பீம்' பிரசார பேரணியானது இன்று வெள்ளிக்கிழமை (3) ஆரம்பிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மூன்றாவது போட்டியில் நியூசிலாந்தை வென்ற இலங்கை
நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.
முன்னாள் அமைச்சர்களின் நினைவேந்தல்
முன்னாள் அமைச்சர்களான தியாகராஜா மகேஸ்வரன், பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோரின் நினைவேந்தல்கள், ஜனவரி 1ஆம் திகதியன்று இடம்பெற்றன.
குளவிக்கொட்டுக்கு அஞ்சி ஓடியதால் 11 பேருக்கு பாதிப்பு
குளவி தாக்குதலுக்கு உள்ளான பெண்ணொருவர் அலறியடித்துக் கொண்டு, கம்பளை அட்டபாகேயில் உள்ள உட கம கிராமிய வைத்தியசாலைக்குள் ஓடிய பிள்ளரும் அப்பெண்ணின் துரத்தி சென்று குளவிகள் கொட்டியுள்ளது.
*78,375 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன"
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ஸார்ப் நிறுவனத்தினால் 78,375 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
40 வருடங்களின் பின் பயணம் ஆரம்பம்
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதியின்றி அல்லல்பட்ட மக்களுக்கான புதிய பஸ் சேவையை 'கிறீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா செடிகளுடன் சின்னத்துறை கைது
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த உதவி தோட்ட முகாமையாளரை புதன்கிழமை (01) பிற்பகல் சந்தேகத்தின் கைது செய்ததாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார தெரிவித்தார்.
வாகன விபத்தில் ஆசிரியை பலி
கேகாலை - அவிசாவளை வீதி அட்டால பிரதேசத்தில் புதன்கிழமை (01) மாலை வேனும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பிந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
திடீர் சுற்றிவளைப்பில் 130 பேர் கைது
ஹட்டன் பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை (31) இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, சுமார் 130 பேர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி பிரதீப் விஜயசேகர தெரிவித்துள்ளார்.
காதலனுக்கு பரிசளித்த காதலி கைது
நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இருந்த அலைபேசியொன்றை களவாடி தனது காதலனுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவர் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு
திருகோணமலை முத்துநகர் பிரிவிலுள்ள உப்புவெளி கமநல அபிவிருத்தி பிரிவில் உள்ள சுமார் 1600 ஏக்கர் வயற்காணி திடீரென சோலர் பவர் சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டு இருப்பதையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை (03) ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சியில் மடிச்சு கட்டி நோயின் தாக்கம் அதிகம்
கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பெரும்போக நெற் செய்கையில் மடிச்சு கட்டி நோயின் தாக்கம் என்றுமில்லாதவாறு அதிகரித்து காணப்படுகிறதுமையால் நெல்லுற்பத்தி பாதிக்கப்படும் நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளம் உள்ளிட்ட பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் மானாவாரி நிலங்கள் உள்ளடங்களாக சுமார் 69 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்பில் பெரும் போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த நிலையில் இம்முறை பெரும் போக நெற்செய்கையில் மடிச்சு கட்டி நோயின் தாக்கமும் தத்தியின் தாக்கமும் அதிகளவில் காணப்படுகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் செயற்குழு சந்திப்பு
தேசிய மக்கள் சக்தி புத்தளம் செயற்குழுவினரின் தலைமையில் புத்தளம் நகர சபை வட்டாரம் 04 நெடுங்குளம் வான் சந்தி குளத்துக் கட்டு நடைபாதையை சுத்தப்படுத்தி குளத்தில் வளர்ந்திருந்த புற்களை அகற்றும் சிரமதானத்திற்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக புத்தளம் நகர சபை செயலாளர் திருமதி பிரீத்திக்காவை சந்தித்து புத்தளம் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.
நேபாள பிரதமரை சந்தித்த ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நேபாள பிரதமர் கே. பி ஷர்மா ஒலி இடையிலான சந்திப்பு நேபாளின் காத்மாண்டுவில் வியாழக்கிழமை (02) இடம்பெற்றது.
இரண்டு சடலங்கள் மீட்பு
கிளிநொச்சி - பரந்தன், முல்லைத்தீவு ஏ-35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்திற்கு அடியில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சண்டித்தனம் செய்த மூவர் கைது
யாழ். நகர்ப் பகுதியில் இரவுவேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி சண்டித்தனம் செய்தனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவர் நியமனம்
மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை உபகரணங்களின் விலை 20% குறைப்பு
டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால் அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை 20% குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மூன்று சிக்கின
நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு, போலியான முறையில் ஆவணங்களைத் தயாரித்து, மோட்டார் திணைக்களத்தின் ஊடாக போலி இலக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டுப் பயன்படுத்திய வாகனங்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
“உயர் கல்வி பிள்ளைகள் விலகுவதை ஆராயவும்”
உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
5 'கை' சின்னத்தில் சு.க. குதிக்கும்
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கையெழுத்து போராட்டம்
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவி நகரில் கையெழுத்து போராட்டம் வியாழக்கிழமை (02) இடம்பெற்றது. போராளிகளின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மல்லாவி நகரில் குறித்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
உடனடியாக பதிலளிக்க வட்ஸ்அப் எண் அறிமுகம்
மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தொழில் அமைச்சால் 0707 22 78 77 என்ற புதிய வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கிளை விழுந்ததில் கைதி மரணம்
மாத்தறை சிறைச்சாலை கட்டிடத்தின் மீது புதன்கிழமை (01) இரவு அரச மரத்தின் கிளையொன்று, விழுந்ததில் 34 வயதான கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் திருத்தம் வருகிறது
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.