CATEGORIES
Kategoriler
அரிசி இறக்குமதி
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மண்மேடு விழுந்ததில் மாணவன் பலி
தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதமஹனுவர வத்துலியத்த கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்லவத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணை தாக்கி கோடிக்கணக்கில் கொள்ளை
மட்டக்களப்பு -காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் தனிமையாகத் தங்கியிருந்த சுவிஸ் நாட்டுப் பிரஜையான பெண்ணொருவரை கடுமையாக தாக்கிவிட்டு இரண்டு கோடி 40 இலட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் 10 கிராம் தங்கம் மாலை 29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பன கொள்ளியிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிந்துஜாவின் மரணம்; பொலிஸாருக்கு அவகாசம்
மன்னார்கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் சிந்துஜா மன்னார் வைத்தியசாலையில் மரணம் அடைந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நம்பப்பட்டு வந்த நிலையில் விசாரணைகள் மந்த கதியில் இடம் பெற்றுள்ளமை நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவியை எரித்து கொன்ற கணவன்
மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து, கணவன், மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CIDயில் ஸ்ரீரங்கா
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
5 மணிநேர வாக்குமூலத்தின் பின் வெளியேறினார் பிள்ளையான்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (20) காலை முன்னிலையாகியிருந்த நிலையில் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரினுக்கு பிணை
பதுளையில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது பொலிஸாருடன் இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஹரின் பெர்னாண்டோவை புதன்கிழமை (20) பதுளை பொலிஸில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தமானியை இரத்து செய்ய முடியாது
புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவை எம்.பியாக நியமித்தமை தொடர்பான சர்ச்சை தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள் இன்று
வாக்கெடுப்பு போன்றன சபாநாயகரின் தலைமையிலேயே முன்னெடுக்கப்படும்
10 வருடங்களுக்குப் பின் பிரசவம்: தாயும் சேயும் அகால மரணம்
மன்னாரில் தாயும் சேயும் அகால மரணமான சம்பவம் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு, புதன்கிழமை (20) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நிலநடுக்கம்
குஜராத் மாநிலத்தில், திங்கட்கிழமை(18) இரவு 8.18 மணியளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தானின் பயிற்றுவிப்பாளராக ஆகிப்
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரையில் பாகிஸ்தானின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆகிஃப் ஜாவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திங்கட்கிழமை (18) தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் தொடரும் பதற்றம்: மத்திய அரசின் அதிரடி தீர்மானம்
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், தொடர்ந்து அங்குப் பதற்றமான சூழல் நீடிப்பதால், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மேலதிக படைகளை அனுப்புவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வாகன விபத்தில் மாணவர்கள் படுகாயம்
பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று மாணவர்கள் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (18) மாலை கினிகத்தேன நாவலப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
கசிப்புடன் 30 பேர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கசிப்பு போதைப்பொருளுடன் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
"அனுபவம் முக்கியம்”
\"அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்வதற்கு நடந்து கொண்டிருக்கும் சீர்திருத்தங்களில் அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருப்பது முக்கியமானதாகும்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு இம்முறை தெரிவு செய்யப்பட்ட உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்
மோதலில் 150 படையினர் பலி
சூடான் நாட்டின் தலைநகர் தெற்கு டார்ப் மாகாணம், அல் பஷீர் நகரில், திங்கட்கிழமை(18), இராணுவத்திற்கும் துணை இராணுவத்தின் அதிவிரைவுப்படையினருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டை மோதலில், துணை இராணுவத்தின் அதிவிரைவுப்படையினர் 150 பேர் உயிரிழந்தனர்.
“உலக போர்களால் தெற்கு நாடுகளுக்கு ஆபத்து"
உலகில் நடைபெற்றுவரும் போர்களால், தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசங்களுக்கான லீக்: ஸ்கொட்லாந்திடம் தோற்ற போலந்து
சமநிலையில் போர்த்துக்கல் குரோஷியா போட்டி
சவூதியில் 101 வெளிநாட்டவருக்கு மரண தண்டனை
சவூதி அரேபியாவில், இந்த ஆண்டில் மாத்திரம், 101 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழ் தேசியத்தை “கறையான் அரிப்பது போல் அரிக்கின்றது”
தற்போது அட்சி அமைத்துள்ள அரசாங்கம், அதன் ஜனாதிபதி, அந்த கட்சி தமிழ்த் தேசியத்தையும் தமிழ்மக்களின் பிரச்சினைகளையும் கறையான் அரிப்பது போன்று உள்ளதால் அழித்துக் கொண்டு செல்கின்றது.
'மீண்டும் வருவார்”
முன்னாள் அமைச்சரும் புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) வேட்பாளருமான காஞ்சன விஜேசேகர தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வருவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கியா?
கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம் மேலதிக விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
‘கற்கோவளம்' இராணுவ முகாமை அகற்ற கோரிக்கை
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, கற்கோவளம் இராணுவ முகாமை 14 நாட்களுக்குள் அகற்றி, குறித்த காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
கூகுள் குரோமுக்கு வந்த சோதனை
கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை அமெரிக்க நீதித்துறை கொடுக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ரவியின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பத்தரமுல்லையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
"அனுர மாயாஜால வித்தகர்”
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவை முழுமையாகப் பெற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
'முஸ்லிம்களின் உணர்வுகளை புரியாது செயற்படுவது கவலை”
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது செயற்படுவது மிகவும் கவலையைத் தருகின்றது என, கடந்த பொதுத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
யாத்திரை பஸ் விபத்து: மூவர் பலி; 13 பேர் காயம்
ராஜஸ்தான் மாநிலம் - பண்டி மாவட்டத்தில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், மூவர் உயிரிழந்ததுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர் பக்தர்களைப் புனித யாத்திரை அழைத்துச் சென்ற பஸ் ஒன்றே ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை 2 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.