நல்ல பழக்கம் வழக்கமானால் அது நல்லது, கெட்ட பழக்கம் வழக்கமானால் அது வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்கும்.
சாதாரணமானவர்களுக்கு இருப்பதுபோல், பிரபலமானவர்களுக்கும் சில விநோத பழக்க, வழக்கங்கள் உண்டு. சில சமயம் அவை மிகவும் விசித்திரமானதாகவும் இருக்கும்.
சினிமாவில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல நட்சத்திரங்களின் பழக்க, வழக்கங்கள் நமக்கு விசித்திரமாகவும் தோன்றும். அப்படி வியக்க வைக்கும் சில நட்சத்திரங்களின் விசித்திர பழக்க வழக்கங்களைப் பார்ப்போம்.
நயன்தாரா: ஆறாம் விரல்!
நயன்தாராவின் இடது கையில் பெருவிரலையொட்டி, சட்டென்று பார்த்தால் தெரியாதபடி மிகச் சிறிய ஆறாவது விரல் ஒன்று முளைத்திருக்கும்.
முதலில் அந்த ஆறாம் விரலை சிகிச்சை மூலம் அகற்ற நினைத்தார். ஆனால், அந்த விரல் இருப்பது நல்ல ராசி என சிலர் சொல்ல, சிகிச்சைத் திட்டத்தைக் கைவிட்டார்.
ஓய்வு நேரங்களில், மன உளைச்சல் மிகுந்த நேரங்களில் அந்த விரலைத் தடவிக்கொடுத்து கொஞ்சும் பழக்கம் நயன்தாராவிடம் உண்டு. சிறு குழந்தையைப் போல் அடம்பிடிக்கும் பழக்கமும் நயனிடம் உண்டு.
சமந்தா: செல்ஃபி காய்ச்சல்!
சமந்தாவுக்கு செல்ஃபி மீது கொள்ளை மோகம்.
சக நடிகைகள், ரசிகர்களைச் சந்திக்க நேர்ந்தால், அவர்களுடன் வலியப்போய் செல்ஃபி எடுத்துக்கொள்வார்.
பிரியங்கா சோப்ரா: காலணி பிரியை!
பிரியங்கா சோப்ராவுக்கு விதவிதமான காலணிகளைச் சேகரிக்கும் பழக்கம் உண்டு.
தன் வீட்டில் ஒரு அலமாரி முழுவதும் விதவிதமான காலணிகளை அடுக்கி வைத்திருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா: ‘இடுக்கண் வருங்கால் நகுக’!
‘இடுக்கண் வருங்கால் நகுக’ - அதாவது, துன்பம் வரும் வேளையில் சிரிக்க வேண்டும் என்றார் வள்ளுவப் பெருந்தகை.
மனவருத்தம் உண்டாகும் நேரங்களில் வாய்விட்டுச் சிரித்துவிடுவாராம் ராஷ்மிகா மந்தனா.
Bu hikaye Tamil Murasu dergisinin December 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Murasu dergisinin December 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
விவசாயப் பின்னணியில் உருவாகும் படம் ‘டிராக்டர்’
புதுமுகங்களை வைத்து உருவாகிறது ‘டிராக்டர்’ திரைப்படம்.
திரை நட்சத்திரங்கள்... விசித்திரங்கள்!
‘பழக்கம்’ என்பது கைவிட முடியாததாக ஆகும்போது, அது ‘வழக்கம்’ என்று ஆகிவிடுகிறது.
லிவர்பூலையும் கவிழ்க்க இலக்கு
அண்மையில் இரண்டு போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டியை வென்று அதிர்ச்சி தந்த டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் இப்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் முதலிடத்தை வகிக்கும் லிவர்பூலையும் வெல்லும் இலக்கைக் கொண்டுள்ளது.
இன்ப அதிர்ச்சி தந்த சிங்கப்பூர் ‘லயன்ஸ்’
தென்கிழக்காசிய தேசிய காற்பந்து அணிகளுக்கான இவ்வாண்டின் ஆசியான் கிண்ணப் போட்டியில் சிங்கப்பூர் ‘லயன்ஸ்’ அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நடுநிலையான இடத்தில் இந்திய அணியின் சாம்பியன்ஸ் கிண்ண ஆட்டங்கள்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ணப் (Champions Trophy) போட்டியில் இந்திய அணி இடம்பெறும் ஆட்டங்கள் நடுநிலையான இடத்தில் நடக்கும் என்று அனைத்துலக கிரிக்கெட் மன்றம் அறிவித்துள்ளது.
அன்வார்: ஆசியான் மின்சாரக் கட்டமைப்பு, மின்னிலக்கமயமாதலில் மலேசியா கவனம்
மலேசியா அடுத்த ஆண்டு ஆசியானுக்குத் தலை மைதாங்கவிருக்கும் நிலையில், ஆசியான் மின்சாரக் கட்டமைப்பிலும் மின்னிலக்கமயமாதலிலும் கவனம் செலுத்த அது நோக்கம் கொண்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் (படம்) கூறியுள்ளார்.
பிரான்சில் படுகொலை; 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
பிரான்சில் வரலாற்று ஆசிரியர் சேமுவல் பேட்டி கொல்லப்பட்ட சம்பவத்தின் தொடர்பில், எட்டுப் பேர் குற்றவாளிகள் என பாரிஸ் நீதிமன்றம் ஒன்று சனிக்கிழமை (டிசம்பர் 20) தீர்ப்பளித்துள்ளது.
தீ விபத்தில் கணவன், மனைவி, இரு பிள்ளைகள் மரணம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாண்டனர்.
ஆக அதிகமான மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பதாகத் தகவல் வெளிநாட்டில் படிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 52.2% அதிகரித்துள்ளதாக ராஜ்யசபாவில் கல்வி அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 18) தெரிவித்தது.
முதியோரின் நலனைக் கருத்தில்கொண்டு இளையர்கள் வழிநடத்திய கொண்டாட்டம்
பல்வேறு தலைமுறையினர் இணைந்து கொண்டாடிய சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் குடும்ப தினத்தில் அறுசுவை விருந்துணவுடன் உடல் நலம் பேணும் அறிவுரைகளும் அன்போடு பரிமாறப்பட்டன.