வைக்கம்,ஏப்.5- கேரள மாநிலம் வைக்கத்தில் சனிக்கிழமையன்று (ஏப்.1) நடந்த வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து சுடர் ஏற்றி துவக்கி வைத்தபின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆற்றிய உரை:
‘‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு துவக்க விழாவில் பங்கேற்பது அந்த போராட்டத்தில் தமிழ்நாட்டுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. கேரளத்தில் மார்பு மறைக்கும் போராட்டம், அரிவிப்பறம்பு திஸ்டா, வில்லுவண்டி பயணம், கல்லு மாலை போராட்டம், குருவாயூர் சத்தியாகிரகம் என ஏராளமான சீர்திருத்த முன்னேற்றங்களை உள்ளடக்கிய சங்கிலியில் மிகச்சிறந்த கண்ணி வைக்கம் போராட்டம். வைக்கம் சத்தியாகிரகம் ஒப்பிட முடியாத ஒன்று. சமூக முன்னேற்றத்திற்கான வழி, தேசியப் போராட்டத்துக்கான வழி திறந்தது வைக்கம் போராட்டமாகும். அது வரை சீர்திருத்த தலைவர்களும், சமூக அமைப்புகளும் அவரவர் நிலையில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் வைக்கம் சத்தியாகிரகத்தில் சமுதாய சீர்திருத்த இயக்கங்களும் தேச விடுதலை இயக்கமும் ஒன்றிணைந்தன. இதுதான் வைக்கம் சத்தியாகிரகத்தின் வரலாற்று ரீதியான சிறப்பு.
வழிகாட்டிய முன்னோடிகள்
இதற்கு முன்பு சமுதாய சீர்திருத்த இயக்கங்களும் அரசியல் இயக்கமும் இணைந்து இதுபோன்ற ஒரு போராட்டம் நடக்கவில்லை. சிறீநாராயண குரு, சட்டம்பி சுவாமிகள், அய்யங்காளி போன்ற சீர்திருத்த தலைவர்களின் முன்னுதாரணங்கள் இல்லாமல் போயிருந்தால் வைக்கம் சத்தியாகிரகம் போன்ற முற்போக்கான ஒரு போராட்டம் கேரளத்தில் நடந்திருக்காது. சிறீநாராயணகுரு ஒரு ரிக்சா வண்டியில் வைக்கம் கோயிலின் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சவர்ண வகுப்பு (ஆதிக்க ஜாதி) பெண் தடுத்தார் எனவும், அதில் தான் வைக்கம் சத்தியாகிரகத்துக்கான வழி திறக்கப் பட்டது எனவும் அப்போது வாழ்ந்த மூலூறஸ் பத்மனாப பணிக்கர் ஒரு கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.
Bu hikaye Viduthalai dergisinin April 05, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Viduthalai dergisinin April 05, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!