CATEGORIES
فئات
கிரிவலம் எனும் இருதய ஸ்தானம்
ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் மலையை வலம் வர கௌதமர், பார்வதி தேவி உள்ளிட்ட ரிஷிகளும், முனிவர்களும், வேதியர்களும் தயாராயினர். மெல்ல கண்கள் மூடி கைகளிரண்டையும் உயர்த்தி வணங்கினர். கிரி வடிவிலுள்ள ஈசனை வலம் வரத் தயாராயினர்.
அழலான அண்ணாமலையாரும் சொக்கப்பனையும்...
சிவபெருமான் மகா அக்னியின் வடிவமாக விளங்குகின்றார். விண்ணிற்கும், பாதாளத்திலும் பரந்து நிற்கும் பெரிய நெருப்புத் தூணாகச் சிவபெருமான் நின்றதைப் பல்வேறு புராணங்கள் சிறப்புடன் கூறுகின்றன. திருவண்ணாமலைத் தலபுராணம் இதனைத் தனிச்சிறப்புடன் குறிக்கின்றது.
வைணவத்தில் கார்த்திகை தீபம்
மறையாய் விரிந்த விளக்கு
தீபமே பிரம்மம்!
உலகம் ஒளிமயமாக உள்ளது. ஒளியைவிட வேறு தெய்வம் என்ன இருக்கிறது? அதனால்தான் தேவ' என்ற சொல்லுக்கு பிரகாச சொரூபம்' என்று பொருள் கூறுகின்றன சாத்திரங்கள் வெளிச்சம் சக்தியமாகவும் வழிபடும் சம்பிரதாயத்தை நம் ரிஷிகள் வேத காலம் முதல் அனுசரித்து வந்துள்ளனர்.
திருவாதிரையும் திருப்பணியும்...!
? 38 வயதாகும் என் மகன் பி.இ. படித்தும் நல்ல குணம், தோற்றம் இருந்தும் பெண் அமையவில்லை. அவருக்கு திருமண பாக் கியம் உண்டா? சமூகத்தில் அந்தஸ்துடன் இருப்பாரா? எங்கள் மனம் உறுத்துகிறது. என்ன பரிகாரம் சொன்னாலும் செய்கிறோம். -ஸ்ரீரங்கம் வாசகி.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.
அக்னி சோமாத்மகம்
அக்னியிலிருந்து அமுதம் தோன்றுகின்றது என்றும் அதுவே உலகினை வளர்க்கின்றது என்றும் சிவபுராணம் கூறுகின்றது. சிவபுராணத்தில் 'அக்னி சோமாத்மகம்" என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளன. "அக்னி சோமாத்மகம்'' என்றால் அக்னியானது சோம மயமான அமிர்தத்தின் ஆத்மாவில் உள்ளது என்றும், அமிர்தமும் அக்னியும் உயிர்களின் ஆத்மாவின் உள்ளே இருக்கின்றது என்பதும் ஆகிய இரண்டு விதமான பொருள் உள்ளது.
மகாலட்சுமி நம் வீட்டில் எப்போதும் வசிக்க என்ன செய்ய வேண்டும்?
சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்திருக்க வேண்டும். சூரிய உதயத்துக்குப் பின்னும் உறங்கிக்கொண்டிருக்கக் கூடாது.
வள்ளுவரின் வழிநடந்தால் அன்னை லட்சுமி அருள்புரிவாள்!
லட்சுமி தேவியைப் பற்றிச் சொல்லும் வள்ளுவர் அன்னை லட்சுமியை 'செய்யாள்', 'செய்யவள்' 'தாமரையினாள் 'திரு' என்று பல பெயர்களால் குறிப்பிடுகிறார்.
பதினாறு வகை தீபவழிபாடு சோடஸ தீப உபசாரம்
கடல், ஆறு, குளம், விருட்சம் ஆகியவற்றிற்கு உரிய தேவர்கள் இருப்பதைப் போலவே இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான தேவர்கள் உள்ளனர்.
வற்றாத செல்வமருளும் குபேர தலங்கள்
வற்றாத செல்வ வரம் தரும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று எனில் அது மிகையில்லை. தீபாவளி என்றவுடன் ஏதோ ஒருவிதத்தில் பணம் காசு வந்து விடுகிறது என்பது நம் வாழ்வியல் நடைமுறை உண்மை.
மகாவீரரின் வீடுபேறும் தீபாவளியும்...
தீபாவளித் திருநாள் இருள் மற்றும் ஒளியுடன் தொடர்புடையது. அன்று நரகாசுரன் இறந்ததற்காக இந்து சமயத்தவரும், மகாவீரர் நிர்வாண நிலை [வீடுபேறு] அடைந்ததற்காக சமணரும், தீபாவளி கொண்டாடுகின்றனர்.
ஆற்றழகிய சிங்கர்
நரசிம்ம பிரபத்தி என்னும் வடமொழி ஸ்லோகம் “தாய், தந்தை, சகோதரன் நண்பன் அறிவு செல்வம் எஜமானுமாய் எல்லாமுமாய், இந்த உலகத்திலும் பரலோகத்திலும் எங்கெங்கு சென்றாலும் அங்கெங்கெல்லாம் நரசிம்மனே உள்ளான். நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை. அதனால், நரசிம்மனே உன்னைச் சரணடைகிறேன் என்கிறது.
நல்லருள் புரிவார் நரசிம்ம சாஸ்தா
அங்கமங்கலம், திருச்செந்தூர், தூத்துக்குடி
அழியா முக்தி
உடலானது ஐந்து வகை காரணங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. அந்த உடலானது இறைவியின் ஆணையின் பேரில் ஏவலர்களாகிய பரிவார தேவதைகளால் வழங்கப்படுகிறது.
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் ஞானத் திகிரி
மங்கல நிகழ்வுகள், மணவிழா கொண் டாட்டங்கள், பண்டிகை வைபவங்கள் போன்றவை வருகிறது என்றாலே நம் அனைவருக்கும் உல்லாசம் ஊற்றெடுக்கிறது.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
குதிரையைத் தேடிப் போன தன் சிற்றப்பன்மார்கள் மீளாததால், அம்சுமான் அவர்களைத் தேடிச் சென்றான். கபிலருடைய குடிலின் வாசலில் அறுபதாயிரம் சடலங்களைக் கண்டு அயர்ந்து போனான். இறந்து போனவர்களுக்கு அங்கேயே தர்ப்பணம் செய்ய நினைத்தான் அம்சுமான்.
யார் தருவார் இந்த அரியாசனம்!
மாட மாளிகைகள், கோபுரங்கள் என்று பார்வைக்கு விருந்தாக இருந்தது அந்த நகரம். இல்லை என்ற சொல்லை இருக்க இடமில்லாமல் தவிக்கச் செய்துவிட்ட வளமையின் சிறப்பு. வாயைப் பிளந்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் புலவர், அவரது பெயர் காளமேகப் புலவர் என்பது.
குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்
15.11.2020 முதல் 13.11.2021 வரை
ஆற்றங்கரைச் சொற்கிழத்தியின் அபூர்வ திருவுருவங்கள்
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர் தான் படைத்த தக்கயாகப் பரணி எனும் அருந்தமிழ் நூலின் நிறைவாக வாழ்த்து எனும் பகுதியில் "ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே!
சகல வித்தைகளையும் அருளும் சரசுவதி அந்தாதி
தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கெனத் தனிச் சிறப்பிடம் பெற்றவர் கம்பர்.
வெண்ணாவலரசு
சேஷத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கும் திருத்தலம் ‘செம்புகேசுரம்' எனப்படும் திருவானைக்கா . ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள சிவத்தலம்.
சுக ஸ்தானத்தில் சுக்கிர யோகம்!
என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
நயினார்கோயில் நாகநாதர் உளுந்துவடை.
கலையரசியின் கவின்மிகு கோயில்கள்
கம்பர் தமிழ் நாட்டிலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது தான் வணங்கிய சரஸ்வதி தேவியின் திருவுருவையும் தன்னுடன் எடுத்து வந்து விட்டார்.
இல்லம் தோறும் ஆன்மிகம் குங்கும மகிமை
குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது.
மாலியவான்
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
சொந்த வீடு அமையும்!
? என் மகன் எம்.டெக்., படிப்பு முடித்துள்ளான். அவனுக்கு வேலை கிடைக்குமா? மேற்கொண்டு ஆராய்ச்சி படிப்பில் சேரலாமா? ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அது நடக்குமா? என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளோம். ஜாதக ரீதியாக நல்ல ஆலோசனைதருமாறு கேட்டுக் கொள்கிறோம்.-பாலசுகந்தி, விருதுநகர்,
பக்கத்துணை இருப்பாள் பத்ரேஸ்வரி அம்மன்
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங் கோடு கிராமத்தில் வீற்றிருக்கிறாள் பத்ரேஸ்வரி அம்மன்.
பரங்குன்றுறை பெருமாளே!
க்ஷேத்ரக் கோவைத் திருப்புகழில் அருணகிரிநாதர் ஒன்பதாவதாகக் குறிப்பிட்டிருக்கும் திருத்தலம் பரங்கிரி எனப்படும் திருப்பரங்குன்றம். "பரங்கிரிதனில் வாழ்வே'' இத்தலத்தில் 14 திருப்புகழ்ப்பாக்களை இயற்றியுள்ளார்.